October 12, 2018

இஸ்லாத்தில் இருக்கும், ஆதரவற்ற மாணவிக்கு உதவுவோமா..?

அஸ்ஸலாமு அலைக்கும். 

இலங்கை பல்கலைக்கழகமொன்றில் தற்போது இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் வட மாகாணத்தின் யுத்த பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவி நான்கு வருட சிறப்பு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவியின் குடும்பத்தினை பொறுத்தவரை தந்தை மாற்று மத பெண்ணை இஸ்லாத்தை ஏற்கச் செய்து திருமணம் முடித்ததன் பின்னர் முறுகலினால் வெளிநாடு சென்றுள்ளதுடன் தாய் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்து மாற்று மதத்திற்கே மாறியுள்ளார். குறித்த மாணவியை ஒரு இஸ்லாமிய சகோதரி ஆதரித்து அறபுக் கல்லூரியில் இணைத்து பாடசாலை மற்றும் மார்க்கக் கல்வியையும் வழங்கியுள்ளார்.

குறித்த மாணவி இன்று வறுமையோடு மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் கல்வியை தொடர முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார். ஆகவே தான் குறித்த மாணவிக்கு பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து ஸதகதுல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையை பெற்றுக்கொள்ளுமாறு மிகவும் பணிவாய் வேண்டிக்கொள்கிறோம்.

( குறிப்பு : உதவி செய்ய விரும்புபவர்கள் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்ளுமிடத்து தகவல் அனைத்தும் ஆதாரபூர்வமாக வழங்கப்படும் ))

தொடர்பு இலக்கம் : 0771372535, 0756557891.

1 கருத்துரைகள்:

Please do not publish this kind of article/News in Newspaper. It is our societies (rich people) responsibility to help needed people.

Post a Comment