Header Ads



ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியின், மாபெரும் கல்வியியல் வர்த்தக கண்காட்சி


ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் இருதிக்கட்டமாக நடைபெற உள்ள கல்லூரியின் மாபெரும் கல்வியியல் மற்றும் வர்த்தக கண்காட்சி. 4,5,6,7 திகதி காலை  8 மணி முதல் இரவு   11 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிமின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற உள்ள இக்கண்காட்சியின் முதலாவது நாள் 04/10/2018 ஆம் திகதி வியாழக்கிழமை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவன்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுவதோடு இரண்டாவது நாள்  05/10/2018 வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களினாலும் மூன்றாவது நாள் 06/10/2017 சனிக்கிழமை வணிக மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதயுடீன் அவர்களினாலும் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

அமைச்சுக்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்காட்சிகள்,முப்படைகளின் சாகசங்கள்,பாடசாலை மாணவர்களின் கண்காட்சி உருவாக்கங்கள், வர்த்தக காட்சிக் கூடங்கள், சிறுவர் விநோத நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதன்போது அரங்கேற்றப்படவுள்ளதோடு கல்லூரியின் நூற்றாண்டு மலரும் வெளியிடப்பட உள்ளதோடு

பாடசாலையின் அதிபர்,அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர்கள்,மாணவியர்கள் சங்கம்,கொழும்பு பழைய மாணவர்கள் சங்கம் என்பவற்றின் முயற்சியில் மிகவும் விமர்சையாக நடைபெற உள்ள அல் அஸ்ஹர் கல்லூரியின் மாபெரும் கல்வியியல் மற்றும் வர்த்தக கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



தகவல் நப்லான் புஹாரி 

No comments

Powered by Blogger.