Header Ads



இந்த சகோதரியை, உங்களுக்குத் தெரியுமா..?

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் நீண்ட காலமாக வைத்தியசாலையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு பணிக்காக சென்றிருந்த போது நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்த பெண் ஒருவர், ஒரு வருடமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் ,உறவினர் ஒருவரும் அவரை பார்வையிட வரவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் உறவினர்கள் ஒருவரும் அவரை அழைத்து செல்லாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இனோகா தமயந்தி என்ற 44 வயதான பெண்ணுக்கு கடந்த ஜுலை மாதம் 10ஆம் திகதியுடன் சிகிச்சைகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த பெண் தொடர்பில் உறிவினர்களிடம் அறிவிக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு சரியான பதில் கிடைக்காமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வயதில் குறைந்தவர் என்பதனால் அவரை முதியோர் இல்லத்திற்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. இவர் யாராக இருந்தாலும் எங்களுக்கு என்ன என்ற மனோபாவம் முதலில் முஸ்லிம்களிடம் இருந்து அகல வேண்டும். வேறு எவரும் (மதம் சார்ந்த) இவரைப் பொறுப்பேற்க முன்வராவிட்டால் எத்தனையோ முஸ்லிம் நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் இவரைப் பொறுப்பேற்றால் (உரியவர் வந்து சேரும் வரை) என்ன குறைந்துவிடப் போகின்றது. உரிய நேரத்தில் உதவி அவசரமாகத் தேவைப்படுபவருக்கு உதவுவதும் இஸ்லாமியப் பண்புகளில் ஒன்றுதான்.

    ReplyDelete
  2. Respectable commence by Brother Suhood.

    ReplyDelete

Powered by Blogger.