1884 ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு மிகவும் பலமை வாய்ந்த மத்ரஸாக்களில் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அன்மைக்காலமாக தனக்காக பணிபுரிந்த மற்றும் தன்னிடம் கல்விகற்ற திறமை வாய்ந்த உலமாக்களை இழந்து வருவது காஸிமிய்ய உறவுகளை தொடர்ச்சியாக துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.
01.அஷ்ஷேய்ஹ் சமீம் மௌலவி(எமது ஆசான்)
நீண்ட நாட்கள் சுகயீனம் காரணமாக இருந்து எம்மை விட்டும் பிரிந்து சென்ற நிகழ்வு யாராலும் மறக்க முடியாது. அவர் காஸிமிய்யாவுக்கு செய்த பணியும் எம்முடன் நடந்து கொண்ட முறையும் எம்மை விட்டும் நீங்க வில்லை.
02.அஷ்ஷேய்ஹ் யஹ்யா மௌலவி (எமது ஆசான்,உப அதிபர்)
அன்னார் சுகயீனம் காரணமான நீண்ட நாட்கள் இருந்து எம்மை விட்டும் பிரிந்து சென்றதும் எமம்முடன் மிகவும் அன்பாக பலகியதும் யாராலும் மறக்க முடியாது. இவர்கள் இருவரும் சுகயீனமாக இருந்து மரணித்த வேலையில் தான் நாம் புரிந்து கொண்டோம் அவர்களின் சுகயீனத்திற்கான காரணத்தை அவர்களின் சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனத்துக்கான சுத்தப் படுத்துகிறான் என்பதாக.
03.அஷ்ஷேய்ஹ் அபுல் ஹுதா மௌலவி (எமது ஆசான்).
ஆரோக்கியமாக இருந்த வேலை வெள்ளிக் கிழமை பக்கா மஸ்ஜித்தில் மிம்பரில் குத்பா ஓதும் போது அப்படியே சரிந்தார் உடனே மிம்பரில் இருந்து இறக்கப்பட்டு வைத்திய சாலைக்கு தூக்கிச் செல்லப்பட்டார் வேறு ஒருவர் குத்பாவைத் தொடர்ந்து நடாத்தினார் அன்று மாலை என்னமோ ஏதோ என்று நாம் பதற்றப்பட்ட வேலை எமக்கு வந்தது துக்கமான செம்தி மஃரிப் வேலை எம்மை விட்டும் அவர் பிரிந்த செய்தி முழு புத்தளத்தையும் கண்ணீர் வடிக்க வைத்ததும் அவர் எம்மோடு நடந்து கொண்ட மாராத நினைவுகளும் இன்னும் எம்மை விட்டும் நீங்கவில்லை.
04.அஷ்ஷேய்ஹ் அர்ஹம் மௌலவி
காஸிமிய்யாவின் பழைய மாணவரும், காஸிமிய்யா மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக பலகியவரும் புத்தளத்தில் மற்றும் அல்ல தேசிய மற்றும் சர்வதேச அழைப்பாளருமான அவர் வெள்ளி இரவு புத்தளம் அல்ஹஸனாத் பள்ளியில் குத்பா ஓதுவதற்கான தயாராகி விட்டு இரவு தூங்கச் சென்றவர் அன்றைய தினம் சுபஹ் வேலையில் எம்மை விட்டும் புரிந்த நிகழ்வு யாராலும் மறக்கவே முடியாது. அவரின் ஜனாஸாவில் கலந்து கொண்ட மக்கள் தொகை புத்தளம் இன்றும் சாட்சி சொல்லும்.
05.அஷ்ஷேய்ஹ் அஹ்ஸன் காஸிமி.
நேற்றைய தினம் (30.09.2018) எம்மை விட்டும் பிரிந்தார். இவர் படிக்கின்ற காலத்திலும் அதன் பிற்பாடும் சிறந்த நல்லொலுக்கமும் அமைதியான நடத்தையும் ஆய்வு ரீதியான பேச்சுத் திறமையும் கொண்ட சிறிய வயது அழைப்பாளர். புத்தளம் தில்லையடி ஜும்ஆப் பள்ளிவாசலில் பிரதான பேஷ் இமாமாக கடமை புரிந்த அவரின் நேற்றைய ஜனாஸா அனைவரையும் மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது.
இஷாத் தொழுகை நடாத்தி விட்டு வந்தவர் சுபஹ் தொழுகை நடத்த முன் ஜனாஸாவாக மாறி விட்ட செய்தி அனைவரையும் வாரிப் போட்டதுத் அஹ்ஸன் காஸிமியின் ஜனாஸா தொழுகையில் களந்து கொண்ட மக்கள் தொகை அவரை அல்லாஹ் சுவனம் துழைக்க நிச்சயமக சாட்சியமாகும் இன்ஷா அல்லாஹ்.
அந்த இடத்திடல் நாட்டின் அனைத்துப் பகுதியில் இருந்து அனேகமான காஸிமிகள் கலந்து கொண்டமை எம்மை சந்தோஷப் படுத்தியது. தொடர்ச்சியாக காஸிமிய்யா உலமாக்களை இழந்து வருவதால் அது காஸிமிய்யா வட்டத்திலும் இலங்கை தஃவாக் களத்திலும் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருந்த போது இந்த நபி மொழி எம்மை அமைதி பெறச் செய்கிறது.
«إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ إِلَى أَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ»،
*********************
✍ நஸ்றீன் காஸிமி.
அகத்தி முறிப்பு
முசலி.மன்னார்.
0 கருத்துரைகள்:
Post a Comment