Header Ads



புலிகள் காலத்தில் சிங்கள மக்களை, கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக்குழி

புலிகள் காலத்தில் சிங்கள மக்களை கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக்குழி எனத் தெரிவித்துள் ஒன்றிணைந்த எதிரணி, ஆனால் தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை கொன்று புதைத்த புதைக்குழிபோல இதனை ஐ,நா சபையில் திரிபுப்படுத்திக் காண்பிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பெருமளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட மனித எழும்புக்கூடுகள் இதுவரையில் மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனை விசாரணை செய்வதற்கு தடயவியல் நிபுணர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள். ஆனால், திட்டமிட்டப்படி அந்த மனிதப் புதைக்குழி தொடர்பான மாறுப்பட்ட எண்ணக​ருவை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அழைத்து வருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதிக் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் அழிக்கப்படுவதை நல்லாட்சி அரசாங்கத்தினால், தடுத்து நிறுத்த முடியாது.  ஈராக், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் புத்தர் சிலைகளை அழித்து அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கள் செய்து வரும் அட்டூழியங்களைப் போல இலங்கையிலும் நடைபெறும் வரையில் அமைதியாக இருக்க வேண்டாம் எனவும் ​அவர் கேட்டுகொண்டார்.

1 comment:

  1. ஈராக்,, சிரியா ஆகிய நாடுகளில் புத்தர் சிலைகளை உடைத்தீர்களாமே?

    ReplyDelete

Powered by Blogger.