October 17, 2018

கண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)

(JM.Hafeez)

கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை இனப் பெண்கள் பாதிப்படைவதாக பொலீசார் தெரிவித்தனர். 

அவ்வாறான சதித்திட்டம் ஒன்றில் அண்மையில் (15.10.2018) கண்டி, தங்கொல்லையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி தான் ஏமாற்றப்பட்டதாகவும் நான்கு இலட்ச ரூபா பெறுமதியாண பணம் நகைகள் போன்ற வற்றைப் பரிகொடுத்து தற்போது செய்வதறியாது திண்டாடுவதாகவும் தெரிவித்தார். 

இது பற்றி அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 15ம் திகதி தான் கண்டி நகரிலுள்ள ஒரு வங்கியில் ஒரு இலட்ச ருபா பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சிறிது தூரம் கால் நடையாக பயணித்த வேளை, தன்னை ஒரு தமிழ் குடும்பப் பெண்ணாக இனம் காடடிக்கொண்ட ஒரு நடுத்தர வயதுப் பெண் தனது கணவன் வைத்திய சாலையில் இருப்பதாகவும் அவசரமாக பணம் தேவைப் படுவதாகவும் தனக்கு உதவி செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னிட்ம் 48 இலட்ச ருபா பெறுமதியான மாணிக்கக் கல் ஒன்று இருப்பதாகவும் கண்டியிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் பெயரைச் சொல்லி, அவர்கள் 14 இலட்சத்துக் அதைக் கேட்பதாகவும் அதனை இன்னும் சற்று கூட்டி விற்க உதவும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

தனக்கு ஏன் இந்த வம்பு எனக் கருதிய அப்பெண் இது பற்றி எனக்குத் தெரியாது, யாராவது ஆண்களிடம் கூறி உதவி கேளுங்கள் என மறுத்துள்ளார். அப்போது நீங்களும் ஒரு பெண். நானும் ஒரு பெண், பெண்ணுக்கு பெண் உதவ முடியாவிட்டால் ஆண்களாக உதவுவார்கள் என்றெல்லாம் தந்திரமாக கதை கொடுத்துள்ளார். 

மேற்படி வேண்டுகோளை முற்றாக மறுத்த தங்கொல்லை பெண் சற்று தூரம் முன்னோக்கிச் செல்ல ஒரு இளைஞர் ஓடிவந்து ஒரு தமிழ் பெயரைச் சொல்ல்p தன்னை அறிமுகம் செய்து, தான் குறிப்பிட்ட நகைக்கடையில் வேலை செய்வதாகவும் 48 இலட்சம் பெறுமதியான மாணிக்கத்தை 14 இலட்சத்துக் தனது முதலாளி கேட்டதாகவும் முன்னர் அப் பெண் கூறிய அதே கதையை திருப்பிச் சொல்லி தங்கொல்லை பெண்னை ஒருவகையில் ஏமாற்றி அவரை ஏதோ ஒரு நிர்பந்த்தத்தின் அடிப்படையில் மறைவிடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று கையிலிருந்த ஒரு இலட்சம் பணத்தையும் அணிந்திருந்த சுமார் மூன்று இலட்சம் பெறுமதியாக நகைகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர். 

குறிப்பிட்ட பெண்ணின் கையில் இருந்தது போலி மாணிக்கம்; என்பதை தான் ஏமாற்றப்பட்ட பின் அறிந்துள்ளார். இது பற்றி கண்டிப் பொலீசார் தெரிவிக்கையில் இவ்வாறு கண்டி மற்றும் கட்டுகாஸ்தோட்டைபப் பிரதேசங்களில் ஒரு குழ இயங்குவதாகவும் இடைக்கிடை இது போன்ற புகார்கள் வருவதாகவும் பொது மக்கள் விழிப்பாக இருக்கும் படியும் வீண் ஆசைகளுக்கு ஆளாக வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

சகல சந்தர்பங்களிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஒரே வித முறையை கையாள்வதில்லை என்றும் வௌ;வேறு நேரங்களில்  வௌ;வேறு விதமாக நடந்து கொள்வதாகவும் சிலர் ஏதும் முகவரியைக்காட் விசாரிப்பதுபோல் பசாங்கு செய்து வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் இன்னும் சில நேரங்களில் பணப்பையை அல்லது பண நோட்டுக்களை கிழே போட்டு அதனை கண்டெடுக்கும் போது இரகசியமான மறைவிடத்து அழைத்துச் சென்று அவரிடம் உள்ள உடமைகளை பறித்துக் கொண்டு போகுதல் போன்ற பல விடயங்கள் நடக்கின்றன எனத் தெரிவித்தனர்.

தனக்கு உரிமையில்லாத பொருட்களை கண்டெடுத்துல், முன் அறிமுகமில்லாதவர்கள் கூறும் பணக் கொடுக்கள் வாங்கள்களில் தம்மை  தொடர்பு படுத்தல், ஆசை வார்த்தைகளுக்கு இறையாகுதல்  போன்ற விடயங்களில் தவிர்ந்து கொள்வதால் பெருமளவுக்கு இப்படியான ஏதற்றுப் பேர்வழிகளிடம் இருந்து தப்ப முடியும் என்றும் பொலீசார் தெரிவித்தனர்.

அத்துடன் யுவதிகளிடமும் இளைஞர்களிடமும்  வேறு வகையில் ஆசை காட்டி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று தமது கைவரிசையைக் காட்டும் நிலைகள் பற்றியும் தெரியவந்துள்ளதாகவும் சிலர் சுய பௌரவம் கருதி முறைப்பாடு செய்யாத நிவைகளும் உண்டு என்றனர்.

வங்கிகளில் அல்லது ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் போது பக்கத்தில் ஒற்றர்களை வைத்து தகவல்கள் பரிமாறப்பட்டு பெறும் பாலானலர்கள் ஏமாற்றப்படுவதாகவும் குறிப்பாக சிறுபான்மை இன பெண்கள் அதிக பெறுமதியான நகைகளை அணிந்து வருவது மேற்படி கும்பலுக்கு சாதகமான தாக உள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.  

எனவே கையில் பெறுமதியான நகைகள் அல்லது கூடுதலான பணம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போவோர் அறிமுகமில்லாத எவருடனும் தேவையற்ற கதைகளுக்கு செல்லாமல் இருப்பது பாதுகாப்பாகும் எனப் பலர் குறிப்பிட்டனர்.   


1 கருத்துரைகள்:

The same type of action happened in Mawanella for an old sinhala lady few months ago.

Post a Comment