Header Ads



படுக்கையறைகளில் கையடக்கத், தொலைபேசிகளை பயன்படுத்துவது ஆபத்தானது - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.

படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால் மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறங்க செல்வதற்கு முன்னர் படுக்கையறையில் இருந்து அவ்வாறான பொருட்களை அகற்றுமாறு பாவனையாளர்களை சுகாதாரப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதும் உடல்பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற விடயமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.