Header Ads



இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பணியக தலைவராக ஹில்மி


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஏ.ஏ.எம். ஹில்மி இன்று (05) உத்தியோகபூர்வமாக தனது பதவியைப் பொறுப்பேற்றார்.

தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் மற்றும் நிதித் துறையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொழிற்பட்ட இவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 17 ஆவது தலைவராகவே நியமனம் பெற்றுள்ளார்.

மேலும் இவர், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினரும், எஸ்.எம்.ஏ. அஸீஸ் பிரதர்ஸ் கம்பனியின் பணிப்பாளர்களில் ஒருவருமாவார்.

புனித தோமஸ் வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் “மல்டிமீடியா டெக்னோலஜி” துறையில் இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்ட்ஷர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார்.

இவரது பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.

1 comment:

Powered by Blogger.