October 03, 2018

வெளிநாட்டில் இருந்து உண்டியல் மூலம், பணம் வருவதை தடுக்க திட்டம்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

வங்கிகளுக்கூடாக அனுப்பும் பணத்துக்கு மாற்றீடாக அவர்களுக்கு உள்நாட்டில் வீடு அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்கும் வகையில் இவ்விசேட திட்டம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்பட மாட்டாதென்றும் அமைச்சர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "தற்போது வெளிநாடுகளில் வாழும் அநேகமான இலங்கையர்கள் தாய் நாட்டுக்கு வங்கிகளுக்கூடாகவன்றி உண்டியல் முறை மூலமாக நாட்டுக்குப் பணத்தை அனுப்புகின்றனர். இது அரசாங்கத்துக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறான யோசனையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது," என்றும் அமைச்சர் கூறினார்.

" வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தமது பணத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு உண்டியல் முறையையே முதற்தர தெரிவாகக் கொண்டுள்ளனர். இது வங்கிச் செயற்பாடுகளுக்கு அப்பால் இடம்பெறும் பண மாற்றீட்டு முறையாகும். நாணய மாற்று வீதம் அடிப்படையில் வங்கியிலும் பார்க்கச் சற்று அதிகமான தொகை இதன் மூலம் கிடைப்பதன் காரணமாகவே மக்கள் இதனை விரும்புகிறார்கள். உண்டியல் முறையை செயற்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. சம்பளம் கிடைக்கும் தினத்தன்று அவர்களே நேரில் சென்று பணத்தைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இப்பணம் வங்கிகளுக்கூடாக வராததன் காரணமாக அரசாங்கத்துக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நஷ்டத்திலிருந்து மீள்வதற்காகவே அரசாங்கம் இப்புதிய யோசனையை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளது," என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொருவருக்கும் தமக்கென சொந்தமாக ஒரு வீடு அமைப்பதே முதல் கனவாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் அக்கனவை நனவாக்கும் விசேட சலுகைகள் வங்கிகளுக்கூடாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இதன்படி வெளிநாட்டில் வசிப்போருக்கு வீடு கிடைக்கும் அதேநேரம் வங்கிகளுக்கூடாகவும் பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் ஹரீன் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வசிப்போருக்கு வீடு வசதி மட்டுமன்றி மேலும் பல வசதிகளும் சலுகைகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும் வரி விதிக்கப்படுவதாக உலா வரும் கதை முற்றிலும் தவறானது. நிதி அமைச்சு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் பணத்தில் வரி அறவிடமாட்டதென உறுதியாக தெரிவித்துள்ளது. மக்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறான கதைகளை மக்கள் சோடனை செய்கிறார்களே தவிர இதில் உண்மை இல்லையென்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன் இந்த அரசாங்கம் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதனைப் பெருமளவில் ஊக்குவிப்பதில்லையெனத் தெரிவித்த அமைச்சர் இந்த அரசாங்கத்தில் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் கூறினார்.

மாறாக திறமையான நுட்பங்களுடன் கற்றுத் தேர்ந்த பெண்களைப் பல்வேறு துறை சார்ந்த தொழில்களுக்கு அனுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்ப பின்னணி அறிக்கையில் தெளிவு வேண்டுமென அமைச்சரவை உபகுழுவிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

7 கருத்துரைகள்:

உண்டியலில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும் சாத்தியமாகவில்லை.இறுதியில் அவை தோல்வியில் முடிவடைந்தன.இலங்கையில் அரசியல் ஞானமில்லாத இந்த ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய இது மற்றொரு புளுகல்.

வங்கி கொமிஷன் தனியார் அளவுக்கு குறைக்க பட வேண்டும். பண பெறுமதி தனியார் அளவுக்கு அதிகரிக்க வேண்டும்..

உண்டியல் முறை சட்டவிரோதமானது.
தற்போதய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பொலிஸ் இப்படியான சட்டவிரோதிகளை பிடித்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

Hell Yeah Apply all the shitttttts and you wanna control this system.

This is what the local system does now.
Charging a commission for all incoming funds from overseas but Country is gaining a big revenue from those who earn overseas and still they wanna earn by commission too meanwhile they are not allowed to cast their vote, what kind of fucking system is this????

Shame on the system!!!!

சிறிலங்கா அரசினதும், அதன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினதும் கவனத்துக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்

1. நம் நாட்டுக்கு அந்நியசெலவாணியை அதிகம் பெற்றுத் தரும் இந்த வெளிநாட்டு தொழில் சம்பந்தமாக முதலில் வெளிநாடுகளில் உள்ள தேவைகளை அறிந்து அதற்கேற்ப தொழிலாளர்களை உருவாக்கி நல்ல பயிற்சி அளித்து வெளிநாட்டுக்கு அனுப்பி ஏற்பாடு செய்யுங்கள்.

2. நம்நாட்டு பெண்கள் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய மட்டும் தான் தகுதி பெற்றவர்களாக? அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு உரிய பயிற்சி, ஆங்கில அறிவு ஆகியவற்றை கொடுத்து மேன்மையான தொழில் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்

3. வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள்

3. இரண்டு வருடங்கள் வங்கி ஊடாக மாதம் தவறாது பணம் அனுப்பினால் தீர்வையற்ற cargoஎல்லையை $5000 ஆக்குங்கள்

4. மிக முக்கியம் - இங்குள்ள சிறிலங்கா தூதரகங்க உத்தியோகத்தர்கள் எங்களை மனிதர்களாக மதிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்

@Bawa...
Plus,,,
4.A... Our embassy idiots they came to work here in the embassies from the counterpart politicians support without fully education/ not well educated. They act like more than kings and expecting something than their wages. They must know the subject requirements and correct advise and establishing correct forms and ideas what required exactly.
Also, Late come and waiting more than days to meet a single persons for simple things or getting ideas.
No one answer the phone while other country embassies do online contact or immediate communication thru phone.

5. Reduce or cancel the commission system from the local banks...cz we are paying here to the bank service. Different bank has different commission amount....why and how? No same rate...!!!!

6. The exchange rate depend on foreign local banks here, So we can not advise any on this issue to our lankan banks.

Mr Bawa முக்கியமான ஒன்றை மறந்துவிட்டு விட்டீர்கள் அதாவது எமது வாக்குகளை வாங்கிகொண்டு பாரளமன்றம் போகும் எதுவும் செய்யாமல் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்கிறார்கள் நாம் பல வருடங்கள் அந்நிய செலாவணியை நாட்டுக்குள் எதாவது ஒரு வழியில் எடுத்து வருகிறோம் எமக்கு தீர்வை செலுத்தித்தான் வாகனம் வாங்க முடியும். இதில் கட்டாயம் மாற்றம் வேண்டும்

Post a Comment