Header Ads



உடல் இரண்டான சடலத்துடன், செல்பி எடுக்க அலைமோதிய வக்கிரம் - கனேமுல்லையில் அசிங்கம்


கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலத்து அருகில் செல்பி புகைப்படம் எடுக்க பலர் முயற்சித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் அதிகவேக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் இரண்டாக பிரிந்த உடல், ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் கனேமுல்லை ரயில் நிலையத்திற்கு சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அடுத்த நாள் காலை வரை ரயில் நிலைய பொருப்பதிகாரியினால், மரண பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடும் சிரமத்திற்குள்ளான அதிகாரி, ரயில் நிலையத்தில் உள்ள நாய்களிடம் இருந்து விடியும் வரை சடலத்தை பாதுகாத்துள்ளார்.

அடுத்த நாள் தொழிலுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர்கள் ரயில் நிலையத்தில் இருந்த சடத்துடன் செல்பி புகைப்படம் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை அவதானித்த இளம் பெண் ஒருவர் ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பினனர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் முகம் தெரியாத வகையில் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞன் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு சென்ற இளைஞனின் சகோதரன் சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.

காதல் பிரிவால் தற்கொலை செய்து இரண்டு துண்டுகளான சடலத்துடன் செல்பி எடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயம் வக்கிரமான நிலையை அடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி கோபமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.