Header Ads



சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த, புலம்பெயர் தமிழர்கள் முயற்சி - விமல் வீரவங்ச

புலம்பெயர் தமிழ் தலைமைகள் இந்நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்காக சிங்கள குழுக்களை வைத்து செயற்படுவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பதனை விரும்புவதில்லை. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தினால், முஸ்லிம்கள் இலகுவாகவே தமிழ் மக்களுடன் இணைந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்தால், சிங்களவர்கள் மீது வெறுப்புக் கொண்டு தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணைய வழி ஏற்படுகின்றது.

இதனால், வடக்கு கிழக்கு இணைப்பை இலகுவாக முன்னெடுக்கலாம் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கனவு காண்கின்றன. இதற்காக வேண்டி பணத்தை அவ்வமைப்புக்கள் அதிகம் செலவு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

3 comments:

  1. Sometimes this guy makes sense. This is one of those occasions.

    ReplyDelete
  2. உங்களுக்குள் சண்டை வந்தால் நீங்களே தீர்த்து கொள்ளுங்கள் . தேவையே இல்லாமல் தமிழர்களை இழுக்க வேண்டாம். இவ்வளவு காலமாக தமிழர்களுக்கு எதிரான தீமையை எல்லாம் சேர்ந்தே செய்து வந்துள்ளீர்கள் . இப்பொழுது உங்களுக்குள் பிரச்சனை வந்தவுடன் அதற்கும் தமிழர்கள் தான் பொறுப்பேற்க வேண்டுமா ?

    ReplyDelete
  3. யாருடனும் எங்களுக்கு சண்டை தேவையில்லை, ஒரே நாடு ஒரே தேசம். இந்நாட்டில் ஆயுதமேந்தி போர் செய்யாத ஒரே மதத்தினர் முஸ்லிம்கள் மாத்திரமே.

    ReplyDelete

Powered by Blogger.