Header Ads



கொழும்பில் சீன கடற்படையின், நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்


சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship)நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.  இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

நான்கு நாட்கள் பயணமாக கொழும்பு வந்துள்ள, Type 926  ரகத்தைச் சேர்ந்த Ocean Island (864)  என்ற  சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்,135 மீற்றர் நீளத்தையும்,  18.6 மீற்றர் அகலத்தையும் கொண்டது.

நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு வழித்துணையாக செல்லும் இந்தக் கப்பலில்- விநியோக ஆதரவு மற்றும் நீர்மூழ்கிகளைப் பழுதுபார்க்கும், செயலிழந்த நீர் மூழ்கிகளை கடலுக்கு அடியில் இருந்து மீட்கும், நவீன வசதிகள் மற்றும், அதற்கான நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

கொழும்பில் இந்தக் கப்பல் தங்கியிருக்கும் போது, சீன மாலுமிகள் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, கடந்த மாதம் 30ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த ஜப்பானிய கடற்படையின் ககா என்ற உலங்குவானூர்தி தாங்கி கப்பலும், இனாசுமா என்ற நாசகாரி கப்பலும், நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

No comments

Powered by Blogger.