October 18, 2018

மைத்திரிபால கொலைச் சதி - உடனடியாக அம்பலப்படுத்தக் கோருகிறார் சிறால் லக்திலக்க


(அஷ்ரப் ஏ சமத்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாரையும் கொலை செய்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதித் திட்டங்கள் இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார் ?அவர்கள் அரசியல்வாதிகளா அல்லது வேறு சக்தியா , வெளிநாட்டுச் சக்தியா என்பது பற்றி உடன் மக்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும் ? இவ்விடயத்தில் இந்தியாவைச் சேர்ந்த கேரலா வாசி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார். இவ் விடயம்  பற்றி பல அரசியல் வாதிகள் அடிக்கடி பல்வேறு கதைகளைக் ஊடகங்களில் கூறிவருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி உடன் தெளிவுபடுத்தல்  வேண்டும். சிலர் இச் சம்பவத்தை காபட்டுக்கு கீழ் போட்டு மூடி மறைக்க முனைகின்றனர்.  இச் சம்பவத்தினை முதன் முதலில் வெளிப்படுத்தியவர்கள் ஊடகங்களே ஆகவே தான் ஊடகங்களை அழைத்து இதனை தெளிவுபடுத்துகின்றோம்.   

என ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி சிறால்; லக்திலக்க. இன்று நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஊடக மநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் சரத் கோங்காகேவும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரவிக்கையில் -
நேற்று ஹிந்து பத்திரிகையில் கூட இவ் விடயம் பற்றி செய்தி வெளியிடப்பட்டு;ளளது. இந்தியப் பிரதமரிடம் ஜனாதிபதி  தொலைபேசியில் பேசியிருந்தார். அவ்வாறான ஒரு விடயம் இல்லை என பதிலளிக்கப்பட்டது. இலங்கை-இந்தியா உறவை சீர்குலைப்பதற்கும் யாரும் முயற்சிக்கிறார்கள்h? அல்லது மைத்திரிபால சிறிசேனா, அல்லது கோட்டாபாய ராஜபக்ச ஆகியோர்கள்  மீண்டும் ஜனாதிபதி தேர்தல் குதிப்பதற்கு தீட்டப்பட்ட சதியா  

கேரலாவைச் சோந்த நபர் விசா காலக்கேடு முடிவடைந்தும் அவர் நீர்கொழும்பில் தனியார் ஆங்கில வகுப்புக்களை நடத்துவதாகவும் கூறப்படுகின்றது. அவர் மட்டக்களப்பில் இவ்விடயம் சம்பந்தமாக ஒரு கட்டத்தில் பேசியுள்ளார். அவர் மனநோயாளி என்கின்றனர். அவர் பற்றி பரிசோதித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதா? 

 அன்மைக் காலத்தில் சமுக ஊடகத் தலங்களில் எஸ்.ரீ.எப். பிரதானி லத்தீப், இரகசிய பொலிஸ் அதிகாரி இப்படி பல்வேறு பல செய்திகளை அவர்களுக்கு எதிராக வெளியிட்டார்கள் இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சரவையில் கட்டுக்கோப்பில் எதுவும் பேசவேண்டாம் என்று கூறியும் 4 கபிணட் அமைச்சர்கள் இவ்விடயம் சம்பந்தமாக வெளியில் பேசியுள்ளார்கள்.  

இந்தியாவில் பிரதமராக  இருந்த 4 காந்திகள் கொல்லப்பட்டுளளனர். அதேபோன்று இலங்கையில் எஸ்.டபிள்யு பண்டாரநாயக்க கொல்லப்பட்டுள்ளாh. ஆர். பிரேமதாச போன்ற தலைவர்கள் கொள்ளப்பட்டு;ளள்ளார்கள. இக்  கொலைக்கு பின் வந்த சம்பவங்கள் என்ன ? என்பது நாம் ஆராய்ந்தால் தெரியும் அவ்வாறே இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு ஏதாவது திட்டங்கள் உள்ளதா என நாங்கள் சந்தேகப்படுகின்றோம்.

நாலக்க டி சில்வா வெளியிட்டுள்ள குரல் பரிசீலனை சரியாக உள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடை நிறுத்தம். தற்போது இவ்விடயத்தினை சி.ஜ.டியினர் இடை நிறுத்தப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை விசாரித்து வருகின்றனர். இவைகள் அனைத்தும் நீதிமன்றம் ஊடாக சுயாதீனமாக விசாரிக்கப்படல் வேண்டும். பிரதிப் பொலிஸ் மா அதிபரை இடை நிறுத்துவதற்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் கொமிசனுக்கு அறிவுறுத்த் தேவையில்லை. பொலிஸ் கமிசன் ஒரு சுயாதீன கமிசனாகும். எனவும் லக்திலக்க தெரவித்தார். 

இந்தச் சதிக்குக் கீழ் யார் உள்ளார் என்று நாங்கள் யாருக்கும் விரல் நீட்டவில்லை. எதிர்கட்சியோ, தற்போதைய அரசியல் கட்சிக்குள் அல்லது தனிப்பட்டவர்கள் வெளிநாட்டுச் சக்திகள் இதற்கு இருக்கலாம் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காகவே ஊடகங்கள் தான் உலகில் தலைவர்களை கொல்லுவதற்கு தீட்டும் திட்டங்களை வெளிக்கொண்டுள்ளன. ஆகவே தான் இதனை உடன் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் வெளிக்கொணருமாறும் விசாரனைகளை உடன் விரைவுபடுத்துமாறும் நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்.   

1 கருத்துரைகள்:

Your Boss My3 has already declared who is behind this.......

Post a Comment