Header Ads



500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்

மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

இதனால் தங்களுக்கு ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகார் அளித்தது.

பாகிஸ்தானின் புகார் மனு குறித்து ஐசிசி-யின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயம் நேற்று விசாரணையை தொடங்கியது. மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வாதாட நியமித்துள்ளன. அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

4 comments:

  1. யாராவது உயிரை பணயம் வைத்து பாக்கிஸ்தானில் கிரிக்கட் விளையாடுவார்களா?
    முதலில்பாக்கிஸ்தான் பயங்கரவாத கலாச்சாரத்திருந்து விடுபட்டவேண்டும்

    ReplyDelete
  2. நாட்ல யாரு எதைப்பத்தி பேசுறது என்கிற வெவஸ்தையே இல்லாம போச்சு.... படுகொலைகளுக்கு மொத்த உருவமா இருக்கிற பரதேசிகளெல்லாம் தீவிரவாதத்தை பத்தி பேசுது.....

    சொந்த இனத்தையும் அழிச்சி, குழந்தைகள்ல இருந்து அப்பாவி மக்களையும் அழிச்சி நாட்டோட பொருளாதாரத்தையும் நாசம் பண்ணியும் இவங்க வெறி இன்னும் அடங்கல. இப்பயும் எதையாவது அழிக்கணும் என்றுதான் சிந்திக்கானுகள், எவன்ட கடைய கொளுத்தலாம், எவன அழிக்கலாம், எவன்ல வீண்பழி சுமத்தலாம் என்றுதான் அலையிறானுகள்.

    ReplyDelete
  3. @அலி, நீங்கள் எழுதியதை முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன் நின்று அப்படியே வாசியுங்கள், மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

    போராட்டத்தில் பயங்கரவாதம் Vs கலாச்சாரத்தில் பயங்கரவாதம்.
    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், சிரியாவில் ISIS, பாக்கிஸ்தானில் காஷ்மீர் பயங்கரவாதிகள், பலஸ்தீனம்.... இப்படி உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் பயங்கரவாத குழுக்களை காரணமின்றி, நடாத்தி, தினமும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொள்ளுவது யாரு?. இது கலாச்சாரம்.

    ReplyDelete
  4. "எவன் ஒருவன் ஒரு மனிதனை (முஸ்லிமோ, முஸ்லிம் அல்லாதவரோ) கொலை செய்கின்றானோ அவன் மனித சமூகத்தையே கொலை செய்தவன் போலாவான். எவன் ஒரு மனிதனை வாழ வைக்கின்றானோ அவன் மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான்" - அல்குர்ஆன்.

    இஸ்லாத்தில் மிகப்பெரும் பாவங்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது, அதில் முதன்மையானது கொலைதான். இஸ்லாமிய அரசு என்று ஒன்று இருந்தால் எவன் ஒரு கொலை செய்தாலும் அவனுக்கு கொலைதான் தண்டனை. இதுதான் இஸ்லாம் எங்களுக்கு காட்டி தந்தது.

    இன்று உலகில் கொலைகார கூட்டங்களாக சித்தரிக்கப்படும் இஸ்லாமிய பெயர்தாங்கிய கூட்டங்கள் செய்யும் எந்த கொலைகளும் மனித குலத்திற்கு எதிரானது, இவர்களுக்குரிய தண்டனை கொலைதான். ஆனால் உலக அரசியலையும், ஆயுத உற்பத்தி, விற்பனையாளர்களின் வியாபார யுக்தியாக உலகம் முழுவதும் தீவிரவாதம் தூண்டப்படுவதையும் புரிந்து கொண்டால் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பேச்சு வராது. தீவிரவாத பயம் காட்டி ஒவ்வொரு நாடுகளின் மொத்த பட்ஜெட்களில் கணிசமான தொகைகளை ஆயுத வியாபாரிகள் சுருட்டிக் கொள்வதை நாம் காண்கிறோம்,இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டால் நல்லது. புரிய விருப்பமில்லை இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் தான் என்று கருத விரும்பினால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.