Header Ads



3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு, எப்போது நியமனம் வழங்குவார்கள்...?

அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரை நியமிப்பதற்கான பெயர்பட்டியலை வெளியீடு செய்து 4 மாதங்களை கடந்தும் இன்னும் நியமனம் வழங்காது இழுத்தடிப்பு செய்கிறது நல்லாட்சி அரசு.

கடந்த வருடம் அரசபாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிளர்களை நியமிப்பதற்கான வேலைத் திட்டம் ஒன்றை கல்வியமைச்சு மேற் கொண்டிருந்தது.பாடசாலை காலங்களில் தேசிய,மாகாண ரீதியில் திறமைகளை வெளிக்காட்டியவர்களை அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமித்து பாடசாலை விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேர்முகத் தேர்வு,மற்றும் உடற்தகமை தேர்வு அடிப்படையில் 3850 பேர் தெரிவு செய்யப்பட்டு ஜுன் மாதம் முதல்வாரத்தில் நியமனப் பெயர்பட்டியலை வெளியிட்டிருந்தது.இருந்த போதிலும் குறித்த நியமனத்தை வழங்க சில மாகாணங்கள் சம்பள பிரச்சினையை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்திருந்தது.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை நம்பி தாங்கள் ஏற்கனவே செய்த வேலைகளை விட்டு 3850 இளைஞர்,யுவதிகள் அன்றாட வாழ்வில் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளனர்.குறித்த நியமனமானது ஜுன் மாதம் இறுதி வாரத்தில் வழங்கப்படும் என வடமாகாணசபை பத்திரிகை மூலம் செய்தி வெளியிட்டிருந்ததையும் ஞாபகமூட்ட வேண்டும்.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்க நல்லாட்சி அரசு இதுவரை எவ்வித முன்னெடுப்புகளையும் செய்யாது காரணங்களை மட்டும் கூறிவருகின்றது.நல்லாட்சி அரசின் ஆட்சி காலத்தில் அரச நியமனங்களானது குறைந்த அளவில் மாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கிறது.குறித்த நியமனத்தை நம்பி 3850 இளைஞர்,யுவதிகளும் அவர்களது குடும்பங்களும் நம்பி இருக்கின்ற போதும் நல்லாட்சி அரசாங்கம் அதில் பொடு போக்கையே கடைபிடித்து வருகின்றது.

குறித்த நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வித்திட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்க நல்லாட்சி அரசாங்கமானது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டும் எதுவிதமான ஒரு பிரதிபலிப்பையும் இன்னும் நல்லாட்சி அரசு வழங்கவில்லை.

4 மாதங்களை கடந்து செல்லும் இந் நியமனத்திற்கான தீர்வினை பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் தள்ளப்பட்டுளனர்.நியமனத்திற்கான தீர்வினை பெற வேண்டும் என்பதற்காக எதிர்வரும் 31ம் திகதி கல்வியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் முன்னெடுக்கவிருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.