Header Ads



2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி


-அத தெரண-

சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இவர் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சௌதி தூதரகத்தில் நேற்று (16) துருக்கி மற்றும் சௌதி அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடத்தினர். 

தேடுதலின் பிரகாரம், ஜமால் கஷோக்கியை தூதரகத்திற்குள்ளேயே சௌதி முகவர்கள் கொலை செய்து அவரது சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்ளனர் என துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கஷோக்கியை கொலை செய்தவர்கள் முரட்டுத்தனமான கொலையாளிகள் என கடுமையாக சாடியுள்ளார். குறித்த கொலைக்கு அவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

சௌதியை தண்டிக்க நேரிடுமென ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கஷோக்கியின் கொலை தவறாக நடந்துவிட்டது என குறிப்பிடுவதற்கு சௌதி அரேபியா தயாராகி வருகின்றதென சீ.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதற்கு சௌதி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

கடந்த 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்திற்குச் சென்ற ஜமால் கஷோக்கி அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். 

இவ்விடயம் தொடர்பாக உலக நாடுகள் சௌதி மீது கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.

14 comments:

  1. இந்த விடயத்தில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகலும் இதுவரை வெளியாகவில்லை இப்போதுதான் விசாரணைகள் ஆரம்பித்திருக்கின்றன, ஏற்கனவே காட்டப்பட்ட கடம் போலியானவை என கூறப்படுகின்றது அது துருக்கிக்கு வந்த சுற்றலாப்பயணிகளுக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை நம்பி செய்திகளை வெளியிட்ட சில சர்வதேச ஊடகங்கள் மன்னிப்புக்கோரிவரும் நிலையில் ஜப்னா முஸ்லிம் இதை பல கட்டுரைகள் மூலம் பிரச்சாரம் செய்வதன் மர்மம் என்ன என்ற ஐயம் எழுகின்றது.

    அவ்வப்போது சூடான செய்திகளை விடுவதனால் இணையம் பிரபல்யம் என்று நினைக்காதீர்கள், அநியாயம் இழைக்கப்பட்டோரின் சூடான பிறார்த்தனைகளால் சில போது இணையம் சாம்பலாகவும் வாய்ப்புள்ளது.

    சமூக விடயங்களில் அக்கரை செலுத்தும் ஒரு இணையமாக உங்களை அறிமுகம் செய்யும் நீங்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொள்வது பொருத்தமற்றது.

    ReplyDelete
  2. JaffnaMuslim.com is giving so much important for this news... and trying to bring all possible evidences to show the bad image of a Muslim country? Why so much effort given in this issue?

    CNN is well known for lying and working against to Muslim Umma... do not simply bring their statements to public. Do not induce Muslims to hate this land, who have supported Many Muslim countries around the world.

    I hope jaffnamuslim.com is favoring group of people who hate Saudi?

    May Allah Protect all our Muslim Lands from Fitna and Guide our Muslim Leaders to rule as per Islam. Also Make our people to obey the rulers and not protest them for their mistakes in public, which will lead destruction to our Ummah.

    ReplyDelete
  3. It seems the animals of the kingdom of WAHHABIS must have killed the innocent journalist. May Allah forgive his sins & grant him Jennah.

    ReplyDelete
  4. It's a known fact that Saudi rulers intolerance to any form of criticism. There are many instances those who doesn't agree with the rulers and criticize suddenly vanish from their places in overseas and after sometime known to be held in KSA prisons. Justice not the king's baby. No wonder fingers getting pointed at KSA rulers as it happened in KSA consulate. Those who now trying to defend and whitewash KSA rulers must be feeling happy with Trump, he is also trying to do the same. after all His son in Law Kushner & MbS are very good friends.

    Criticizing NYT & CNN not acceptable. The Trumps mouth piece Fox is reporting the opposite. But remember when Trump relocated the embassy to Jerusalem, Fox praised it and NYT & CNN together with many criticized it.

    ReplyDelete
  5. Jaffna muskim is neutal news paper..
    It has been following ethics and moral Principles of journalism ..
    It is a charity paper.
    No one pay them to continue this ..
    Do not blame them...
    Please it is now an asset of Sri Lanka Muslim community ..
    Do not harm the good work of this on line news ..
    Leave your hatred or group feeling with you ..
    If you are happy what Saudi do now ..
    It is up to you..
    Allan will decide your fate and people who do all this bad thing in the name of Allah ..
    The entire world condemn it but you try to justify what they did ..
    Fear Allah ..
    If you are blind ...ask some one who knows geopolitics ..
    But may not blind person ...but your heart is blind ..
    Allan blocked it from knowing the truth.
    You have trouble entire Muslim world ..
    Now you want trouble jaffna Muslim .
    May Allah guide you both ..
    Rasheed and Madani...

    ReplyDelete
  6. Ismail Mathany and Muhammad Rasheed, it's a duty of media to reveal the truth. Turkey official has confirmed that Jamal kassoghy was murdered and cut into pieces in Saudi consulate in Istanbul. What's wrong in publishing this news? You both have to be blamed for being one sighted. Some are blindly supporting Saudi for its money. Be neutral if you really fear Allah.

    ReplyDelete
  7. இஸ்மாயில் மதனியின் Jaffna Muslim இணையத்திற்கு எதிரான விமர்சனங்கள் குறித்து, உண்மையிலேயே கவலையடைகிறோம்.

    இதே இஸ்மாயில் மதனியின் ஆக்கங்களை jaffna muslim இணையம் பலவேளைகளில் இந்த இணையத்தில் பதிவேற்றியுள்ளது. அப்போதெல்லாம் இஸ்மாயில் மதனிக்கு "மர்மம், ஐயம்" என்பன ஏற்படவில்லையா..?

    நாங்கள் பிரபலமடைவதற்காக இந்தச் செய்தியை வெளியிட்டதாக கூறும் இஸ்மாயில் மதனி, எப்போது எமது உள்ளத்திற்குள் உட்புகுந்தார்...?

    நாங்கள் நினைக்காத ஒன்றை, நீங்கள் நினைப்பதாக கூறுகிறீர்கள். இது பாவம் இல்லையா மதனி அவர்களே...?

    நாங்கள் ஒரு ஊடகம் என்றவகையில், சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் குறித்த செய்திகளை வெளியிடுகிறோம். அவ்வளவுதான்...!

    அதுவும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் வெளியிடும் தகவல்களையே மறுபிரசுரம் செய்கிறோம்.

    இப்படியிருக்க, இவ்விடயத்தில் நாங்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வது பொருத்தமற்றது என நீங்கள் பின்னூட்டம் பதிந்திருப்பது விசனத்திற்குரியது.

    நீங்கள் ஒரு உலமா. எங்களிடம் இல்லாத அருவருக்கத்தக்க பண்புகளை, எங்களிடம் இருப்பதாக வர்ணிப்பது நியாயமா...?..?

    ReplyDelete
  8. Jaffna Muslim; Please come down. You make simple mistakes. Do not publish anything written off hand. Check it first, and then publish. Whatever items must not hurt Jaffna Muslim. Insha Allah, You will become one and only neutral on-line paper for Muslim.

    ReplyDelete
  9. It is not suitable for Muslim media to publish everything that comes in other local and international media, unless you confirm that
    1. They published the TRUTH/Fact and not falls
    2. Even if TRUE,, consider will it harm our Muslim Umma by publishing it

    It is well known that verifying news is required according to sharee’ah, because Allaah says (interpretation of the meaning):

    “O you who believe! If a Faasiq (liar — evil person) comes to you with any news, verify it, lest you should harm people in ignorance, and afterwards you become regretful for what you have done”

    [al-Hujuraat 49:6]

    The Lawgiver issued a stern warning against passing on all that one hears. It was narrated that Hafs ibn ‘Aasim said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “It is enough lying for a man to speak of everything that he hears.” Narrated by Muslim in al-Muqaddimah, 6; Saheeh al-Jaami, 4482.

    ReplyDelete
  10. Dear Brothers,

    I am here not to supporting any wrong killing...... No body can escape the judgement of Allah...Then why should I support such people if done so.

    BUT My question is... Why all of you hate Saudi to the extent you criticizing for every mistakes of them, while you do not criticize the oppression of others leaders?

    Know that, every country leaders have good and bad story behind them.. even so much praised Turkey has oppression toward Kurtistan people of that land, which most of keep silent or not known..

    It is not befitting a citizen to critisize his country Ruler in public, rather he should only take the message directly to the ruler. if the ruler does not listen.. He should not try to bring this message to west KUFFAR media and helping them to destroy your lands.

    This is what the writter did. He brought all negative image of of Saudi ruling to west, which the west looking for to proceed toward the destruction of this land.

    No question, If a turkey writer did such against to Turkey Ruler, he will face the same, as evidenced during the coop few years back. How many who protested are now not existing or in jail. But still in my opinion what turkey did with them is correct in order stop destruction to that land. If so why not Saudi .. Simply a spy working for west to destroy the Saudi system ... should be punished his work but by shareea way.

    Do you expect the ruler to stay cool with a guy who talk bad of them and take secrete message to west (spying)?

    Think not from your hate toward this land.. but think in a way to protect this Muslim land from Kuffar invasion.

    Ya Allah Guide our brothers and myself from wrong way of thinking and approaching a problem.

    ReplyDelete
  11. It is a trail for the king's son in the Kingdom, who promoted cinema, fashion show etc. in the name his so called economic vision. Sametime, the ulemas and most of muslims around the world don't agree with his view most of the times. Economic vision and the vision of the world is in the hands of Allah, which cannot be set by MbS and Trump. However we should admit onething that the image of the Islamic Kingdom tarnished. Sametime khassoghi was betrayel the kingdom by publishing in the world arena against the kingdom. Again it is in the hand of Allah to turn someone or country againt us or in favour of us.

    ReplyDelete
  12. பகுதி 01
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

    ஜப்னா முஸ்லிம் தொடர்பில் என்னால் எழுதப்பட்டவை ஒரு சில கடுமையான வார்த்தைப்பிரயோகங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு உங்களிடம் மன்னிப்புக்கோருகின்றேன்.

    நான் விரும்பும், பயன்படுத்தும் மூன்று தமிழ் இணையங்களில் ஜப்னா முஸ்லிம் முதண்மையானது. உங்களது சேவைக்குரிய கூலிகளை அல்லாஹ் வழங்குவானாக.

    இன்று ஊடகம் மிகப்பெரும் ஒரு சக்தியாக வளர்ந்துள்ளது உலக மக்களின் கருத்தை தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் உள்ளன, இதை உணர்ந்ததனாலேயே நீங்களும் இவ்விணையத்தினை பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்துகிறீர்கள்.

    சர்வதேசத்தில் அதிகம் தாக்கம் செலுத்தும் ஊடகங்கள் மிக நீண்டகாலமாகவே இஸ்லாத்திற்கு எதிரான விடயங்களை அதிகம் பரப்புவதிலும் முஸ்லிம் தலைவர்களை இலக்குவைத்து தாக்குவதிலும் அவர்களை அழிப்பதற்கான மக்கள் தளத்தை உருவாக்கவும் அதிகம் பாடுபடுகின்றன. இதற்கு உலகில் பல உதாரணங்களை என்னை விடவும் அதிகம் நீங்கள் அறிந்துவைத்திருப்பீர்கள்.

    உலகில் தற்போதுள்ள நாடுகளில் இஸ்லாத்தை அதிகம் நடைமுறைப்படுத்தும் நாடாக ஸவுதியே காணப்படுகின்றது. இந்நிலையில் அதன் எதிரிகள் உலகின் எல்லாப் பக்கங்களிலும் நிரம்பிக் காணப்படுகின்றனர். அல்லாஹ்வின் உதவிக்குப்பின்னால் ஸவுதியின் செல்வம் இல்லையென்றால் ஏனைய நாடுகள் ஸவுதியை எதுவுமில்லாத ஒரு பாலை வணமாக, உலகில் அதிக தீமைகள் நடக்கும் ஒரு நாடாக, மற்றவர்கள் பயணிப்பதற்கு அச்சப்படும் ஒரு நாடாக எப்போதே மாற்றியிருப்பார்கள். அல்லாஹ்வே அதைப் பாதுகாக்கின்றான்.

    இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஸவுதி செய்யும் நல்ல விடயங்களை நாம் பட்டியளிட்டால் நூற்றுக்கணக்கானவை இருக்கும் அதேபோல் சில தவறுகளும் தீமைகளும் இருக்கவே செய்யும். உலகில் எங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் இக்காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் ஸவுதியின் நிதியினால் ஒரு தடவையேனும் பயனடைந்தவர்களாகவே அவர்கள் இருப்பார்கள் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் என்று நினைக்கின்றேன்.

    இந்நிலையில் ஸவுதிக்கு எதிராக வரும் எந்தவொரு விடயமாக இருப்பினும் அது அதன் எதிரிகளால் முடியுமான அளவு பிரபல்யப்படுத்தப்படுகின்றது. அதற்காகவே சில ஊடகங்கள் காத்திக்கிடக்கின்றன பல ஊடகவியலாளர்களும் சர்வதேச ரீதியில் இயங்கி வருகின்றனர்.





    ReplyDelete
  13. பகுதி 02
    அண்மைக்காலமாக மத்தியகிழக்கில் ஏற்பட்டு வரும் அழிவுப்புரட்சியினால் மற்றும் ஏனைய பிரச்சினைகளால் ஸவுதிக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றிருக்கும் வேலையிலேயே சவுதி ஊடக வியலாலரின் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுக்கின்றது இப்பிரச்சினை பற்றிய தகவல்களை முந்திக்கொண்டு பகிரும் ஊடகங்கள் அனைத்துமே ஸவுதிக்கு எதிரான ஊடகங்களாகவே இருக்கின்றன. ஒன்று ஐறோப்பிய அல்லது ஸியோனிஸ ஊடகங்களாக இருக்கின்றன அல்லது ஸவுதிக்கு எதிராக அடிக்கடி இட்டுக்கட்டுகளை கூறும் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஊடகங்களாக இருக்கின்றன.

    இத்தகைய ஊடகங்களால் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகள் போலியானவை என்ற வாதம் நடந்துவரும் நிலையில் ஜப்னா முஸ்லிம் இத்தகைய ஊடகங்களாலும் அதன் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மெருகூட்டப்பட்ட கட்டுகளை தயாரித்தவர்களினால் வெளியிடப்படும் தகவல்களையே நான் அறிந்தவரை வெளியிட்டிருக்கின்றது. ஸவுதியின் உத்தியோகரீதியான ஊடகங்களின் தகவல்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

    கஸாக்கி தொடர்பில் சொல்லப்படும் போனார்கள், வந்தார்கள், நடந்தார்கள் என்ற எல்லாத்தகவலுமே இத்தகைய ஊடகங்களால் சொல்லப்பட்ட தகவல்களே ஆகும். எனவே, இந்த செய்திகளை நம்பி நான் நேசிக்கும் ஒரு ஊடகம் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தயவாய் வேண்டுகின்றேன்.

    சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் அரசியல் ரீதியான பேரம்பேசும் ஒரு பொறிமுறையாகக் கூட இது இருக்க முடியும். சர்வதேச ரீதியாக எத்தனையோ ஊடகவியலாலர்கள் கொலை செய்யப்பட்டிருக்கையில் அமெரிக்கா, துருக்கி என்பவற்றிலும் கூட அது நடந்திருக்கையில் இதுவரை உறுதிசெய்யப்படாத ஒரு விடயத்திற்காக எல்லோரும் உசாராணதும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகவே உள்ளது.

    நாடுகளுக்கு இடையிலான சதிவளைகள் என்பது உடனடியாக நமக்கு தெரிந்துவிடாது நமது கவனத்தைத் திசை திருப்ப ஒரு செய்தியை ஊடக மயப்படுத்திவிட்டு நாம் எல்லோரும் அது தொடர்பில் கவனம் செலுத்தி விவாதிக்கும் நிலையில் வேறு ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்பே செய்திகளின் உண்மை நிலையை நாம் அறிந்துகொள்கின்றோம் இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல.
    எனவே, முஸ்லிம்களின் சிந்தனை மாற்றம், உண்மைச் செய்திகளை வழங்குதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஊடகம் ஒன்று சொல்லப்படும் எல்லாவற்றையும் பரப்புவது பொருத்தமானதாகத் தெரியவில்லை..

    முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் போராட்டம் தொடுக்கப்படும் இக்காலத்தில் பெரும் சக்தியாக விளங்கும் ஊடகத்தில் பணியாற்றுவோர் சற்று நிதாணமாக நடந்துகொள்வதும் உண்மைகளைக் கண்டறிந்து வெளியில் கொண்டுவருவதும் கட்டாயமானதாகும்.

    இப்பிண்ணனியிலேயே ஜப்னா முஸ்லிம் தொடர்பான எனது கருத்து அமைந்திருந்தது அதில் ஒரு சில வார்த்தைகள் கடுமையாக அமைந்துவிட்டது அதற்காக உங்களிடம் மீண்டும் ஒரு முறை மன்னிக்க வேண்டுகின்றேன்.

    அல்லாஹ் நம் எல்லோருக்கும் உண்மையை உணரச் செய்வானாக.

    ReplyDelete

Powered by Blogger.