Header Ads



அர­சியல் பழி­வாங்கலினால் பதவிநீக்கம் செய்­யப்­பட்ட றஹ்மான் 23 வரு­டங்­களின் பின் பொலிஸ் சேவையில் இணைப்பு

அர­சியல் பழி­வாங்கல் கார­ண­மாக பதவி நீக்கம் செய்­யப்­பட்ட மரு­த­மு­னையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் 23 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார். இவர் பொலிஸ் பரி­சோ­த­க­ராக நிய­மனம் செய்­யப்­பட்டு இன்று  திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள உப்­பு­வெளி பொலிஸ் நிலை­யத்தில் தனது கட­மையைப் பொறுப்­பேற்­கின்றார்.

இவர் 1988.01.18 ஆம் திகதி உப பொலிஸ் பரி­சோ­த­க­ராக நிய­மனம் பெற்று வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் தனது கட­மையைப் பொறுப்­பேற்று தலை­மன்னார், கல்­முனை ஆகிய பொலிஸ் நிலை­யங்­களில் கட­மை­யாற்­றினார். கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்­றி­ய­போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட வெல்­லா­வெலி பொலிஸ் பிரிவில் கட­மையின் நிமித்தம் சென்று கொண்­டி­ருந்­த­போது பயங்­க­ர­வா­திகள் மறைந்­தி­ருந்த தாக்­கிய போது மிகவும் சாதுர்­ய­மாகத் தன்­னுடன் பய­ணித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும், ஆயு­தங்­க­ளையும், வாக­னத்­தையும்  பாது­காத்­த­மைக்­காக உய­ர­தி­கா­ரி­களின் பாராட்­டைப்­பெற்று 1990.-04.-27ஆம் திகதி பொலிஸ் பரி­சோ­த­க­ராகப் பதவி  உயர்வு பெற்றார்.

அந்தப் பதவி உயர்­வுடன் பம்­ப­லப்­பிட்டி, கம்­பளை, மஹ­வெல, அக்­க­ரைப்­பற்று, மரு­தானை, கல்­முனை ஆகிய பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் கட­மை­யாற்­றினார். இறு­தி­யாக கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்­றி­ய­வேளை அர­சியல் பழி­வாங்கல் கார­ண­மாக கொழும்பு தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு இட­மாற்றம் செய்­யப்­பட்டார். அங்கு கட­மை­யாற்­றி­ய­போது சம்­ப­ள­மற்ற விடு­முறை கோரி விண்­ணப்­பித்­த­போது அந்த விண்­ணப்­பத்தை உய­ர­தி­கா­ரிகள் அங்­கீ­க­ரித்து சிபா­ரிசு செய்­தி­ருந்­தனர்.

இந்த நிலையில் அப்­போது இருந்த பொலிஸ்மா அதிபர் ராஜ­குரு இவ­ரது விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்து 1995.10.01ஆம் திகதி இவரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கினார். இதன் பின்­ன­ணியில் முஸ்லிம் அர­சி­யல்­வாதி ஒருவர் இருந்­துள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அந்த அர­சியல் பழி­வாங்கல் தொடர்­பான கோவையை அப்­போதே பொது நிர்­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ருக்குச் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

2001, 2002 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த அரசு இது தொடர்­பாக விசா­ரணை நடாத்திக் கொண்­டி­ருந்த வேளை ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்கா குமா­ர­துங்க ஆட்­சியைக் கலைத்தார். இதனால் இவர் எடுத்த முயற்­சிகள் கைகூ­ட­வில்லை. அதன் தொடர்ச்­சி­யாக இன்­றைய நல்­லாட்­சியில் இவ­ரது கோவை பரி­சீ­லனை செய்­யப்­பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 மருதமுனையில் பிறந்த இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.  மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் அனுஸ்லெப்பை மரைக்கார் -செயினுலாப்தீன், ஆதம்பாவா ஹபீபா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார்.

No comments

Powered by Blogger.