Header Ads



நேர்மையாக செயற்பட்டு பதவியை, இழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி கொடுத்த 10 இலட்சம்


நேர்மையாக செயற்பட்டு பதவியை இழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருந்தொகை பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தெபுவன பொலிஸ் நிலையத்தில் நேர்மையாக செயற்பட்டு, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சார்ஜன்ட் சனத் குணவர்தனவுக்கு பத்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

தன்னால் மீட்கப்பட்ட சட்டவிரோத மணல் லொரியை, விடுவிக்குமாறு உயர் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த சார்ஜன்ட் எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

இதன் காரணமாக குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதற்கமைய அவர் பணி நிறுத்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்து இலட்சம் ரூபாய் பணத்தை குறித்த சார்ஜன்ட் மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த உதவித் தொகையை வழங்கினார்.

2 comments:

  1. பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சொன்னார் இவர் மனநோயாளியென.

    ReplyDelete
  2. best action our president

    ReplyDelete

Powered by Blogger.