Header Ads



சாய்ந்தமருதில் புதிய கலாச்சாரம், தொழிலதிபர் முபாறக் உள்ளிட்டோர் களத்தில் குதிப்பு (படங்கள்)


சாய்ந்தமருதில் அண்மையில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து பல்வேறு கோணங்களிலும் மக்களின் பார்வை செல்ல ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திசபை புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன்  அங்குள்ள தேவைகள் அடையாளம் காணப்பட்டு மக்களின் பங்களிப்புடன் செய்யக்கூடிய பணிகள் நாளாந்தம் அரங்கேறி வருகின்றன.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அபிவிருத்திச் சங்கத்தின் பூரண பங்களிப்பினுடனும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியின் வழிகாட்டலுடனும் முன்னெடுக்கப்பட்ட பாரிய சிரமதான நிகழ்வொன்று 2018-09-16 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் தொழிலதிபர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்கள் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, ஆண்கள் விடுதி மற்றும் முன்புற பூங்கா உள்ளிட்ட சுற்றுச்சூழல் பகுதிகளை தனது சொந்த நிதியில் புனர்நிர்மாணம் செய்ததுடன் குறித்த மூன்று பிரதேசங்களையும் தொடர்ந்தும் கண்காணித்து அங்கு ஏற்படும் குறைகளை நிவர்த்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தற்போது நோயாளிகளின் வரவிலும், பௌதீக தேவைகளை நிறைவு செய்வதிலும் நாளாந்தம் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இவ்வைத்தியசாலைக்கு வருகை தருகின்றவர்களுக்கு சிறப்பான, சுத்தமான சுற்றுச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும், மிக நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றி காணப்பட்ட பௌதீக வழங்களையும் சுத்தம் செய்து மீண்டும் பாவனைக்குட்படுத்தும் நோக்கிலும் மேற்படி சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், சாய்ந்தமருது சுயேற்சை குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், புத்திஜீவிகள் ஆகியோர் தனிப்பட்ட ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வை மிகச் சிறப்பாக நெறிப்படுத்திய சிரமதானக் குழுவின் தலைவரும் வைத்திசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிச் செயலாளருமான ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் மற்றும் சிரமதானக் குழுவினர், சிரமதான நிகழ்வின் முக்கிய அம்சமான முன்புற தோற்றத்தை அழகுபடுத்தல் அத்துடன் வெளிநோயாளர் பிரிவிற்கு வர்ணம் பூசுதல் நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கிய முபாறக் டெக்ஸ்லைல்ஸ் உரிமையாளரும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதித் தலைவருமான எம்.எஸ்.எம். முபாறக், சிரமதான நிகழ்வுகளுக்கான பெரும் பங்களிப்பை வழங்கிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக டவுன் ரவல்ஸ் உரிமையாளர் ஜவாஹிர், நிகழ்வின் உணவு மற்றும் உபசரிப்பு விடயங்களுக்கு அனுசரனை வழங்கிய Top J உரிமையாளர் ஜமீல், சிற்றூண்டிகளை வழங்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் நெய்னா முகம்மட் றிஸ்மிர், சிரமானதானத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்கிய ஏசியன் ஹாட்வெயார், மைக்ரோ ஹாட்வெயார், முஹம்மட் ஹாட்வெயார், பிரின்ஸ் ஹாட்வெயார், சனா ஹாட்வெயார், மைக்ரோ மல்டி சென்றர் ஹாட்வெயார், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் ஆகியோரும் கல்முனை மாநகர சபை தின்மக் கழிவகற்றல் இயந்திரங்கள், ஊழியர்களையும் வழங்கிய மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் சாய்ந்தமருது வைத்தியசாலை நிருவாகம் மற்றும் அபிவிருத்திச் சங்க அங்கத்தினர் ஆகியோர் பாராட்டுக்கும் நன்றிக்குமுரியவர்கள்.

-எம்.வை.அமீர்-




1 comment:

  1. masha allah. allah bless them all for the good work. only regret is most of the poor people who are going to benefit from this good work will never come to help in any way but will be there readily available to receive the benefits.

    ReplyDelete

Powered by Blogger.