Header Ads



எதிரணி நடத்திய போராட்டங்களினால், ஏதாவது கைகூடியதா? அரசு கவிழ்ந்ததா..??


பொது எதிரணியால் எதிர்வரும் 5ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியால் அரசுக்கு ஓரளவு எதிர்ப்பலை உருவானாலும் ஆட்சி மாற்றம் இடம்பெறாது, அதற்குச் சந்தர்ப்பமே இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின்போது, எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிரணியில் இருந்தால் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்தியாகவேண்டும். அதற்கு அரசும் இடமளிக்கவேண்டும். இதுதான் ஜனநாயக அரசியல். ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கு அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பொது எதிரணியினர் அனுதாபம் தேடுகின்றனர். அவர்கள் போராட்டம் நடத்தட்டும். வேண்டுமானால் கோல்பேஸையும் கொடுத்து உதவுவோம் என்று குறிப்பிட்டார்.

இவ்வருடத்தில் அரசைக் கவிழ்க்கின்றோம் என்ற போர்வையில் பல போராட்டங்களை பொது எதிரணியினர் நடத்தினார்கள். ஏதாவது கைகூடியதா? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

1 comment:

  1. Their Plan is to destroy you (UNP) in 2020 election. They have already done in the last local election held in Feb 2018.

    ReplyDelete

Powered by Blogger.