Header Ads



"கீழே போடப்பட்டுள்ள அமானுக்கு, தேசியப் பட்டியல் வழங்குங்கள்"

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் எம். எச்.எம். அஷ்ர‌பின் ம‌க‌ன் அமான் அஷ்ர‌பின் பேட்டியை ந‌வ‌ம‌ணி ப‌த்திரிகையில் ப‌டித்த‌ போது ப‌ல‌ ய‌தார்த்த‌ங்க‌ள் புரிந்த‌து. ஏற்க‌ன‌வே ந‌ட‌ப்புக்க‌ள் மூல‌ம் நான் புரிந்து கொண்ட‌ உண்மைக‌ளும் வ‌லிக‌ளும், ச‌மூகத்தின் துரோக‌மும் அவ‌ர‌து வார்த்தையில் தெரிந்த‌து. 

த‌லைவ‌ர் அஷ்ர‌ப் முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ க‌ட்சியை வ‌ள‌ர்க்க‌ எத்த‌னை துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்தார் என்ப‌து எல்லோருக்கும் தெரியும். அந்த‌க்க‌ஷ்ட‌த்துட‌ன் க‌ட்சியை பெரிய‌தொரு வாக்கு வ‌ங்கியுள்ள‌ க‌ட்சியாக‌ வ‌ள‌ர்க்க‌ அவ‌ரால் முடியாது போயிற்று என்றால் அவ‌ர‌து வாரிசு ப‌ற்றி நாம் க‌வ‌லைப்ப‌ட‌ தேவையில்லை. ஆனால் ப‌ல்லாயிர‌ம் பேருக்கு அமைச்சு ப‌த‌வி மூல‌ம் தொழில் பெற்றுக்கொடுத்த‌ அஷ்ர‌ப் த‌ன‌து ம‌க‌னுக்கு எந்த‌வொரு அர‌ச‌ தொழில்வாய்ப்பும் பெற்றுக்கொடுக்க‌வில்லை என்றால் ஏன் என்ற‌ கேள்விக‌ள் எழுகின்ற‌ன‌.

அமான் த‌ன்பாட்டுக்கு தொழில் செய்வ‌தை த‌ந்தை அனும‌தித்த‌தாக‌ சொல்கிறார். ஆனால் ஒரு த‌ந்தையின் ஸ்தான‌த்திலிருந்து பார்க்கும் போது இத‌னை ஏற்க‌ முடிய‌வில்லை. அது ஒரு ச‌மாளிப்பாக‌வும் த‌ந்தையின் மான‌த்தை காப்ப‌தாக‌வுமே தெரிகிற‌து.

த‌ன‌து ம‌க‌னுக்கு த‌ன‌து அமைச்சில் தொழில் கொடுத்தால் இந்த‌ ச‌மூக‌ம் விம‌ர்சிக்கும் என‌ த‌லைவ‌ர் நினைத்திருக்க‌லாம் என்ப‌தே என‌து க‌ணிப்பு. ஆனாலும் க‌ட்சியை வ‌ள‌ர்ப்ப‌தில் அவ‌ரும் த‌ன‌து ப‌ண‌ம், நேர‌ங்க‌ளை செல‌விட்டிருப்ப‌தால் க‌ட்சியின் வெற்றியால் கிடைக்க‌ப்பெறும் க‌னீம‌த்தில் அவ‌ருக்கும் ப‌ங்குண்டு என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. அந்த‌ப்ப‌ங்கை அவ‌ர் த‌ன‌து ம‌க‌னுக்கு வ‌ழ‌ங்கியிருக்க‌லாம், வ‌ழ‌ங்கியிருக்க‌ வேண்டும்.

அவ‌ர் த‌ன் ம‌க‌னை சுய‌மாக‌ விட்டுவிடுவோம் என‌ நினைத்திருக்க‌லாம். அதில் குற்ற‌மில்லை. ஆனாலும் அவ‌ர் ம‌ர‌ணித்த‌பின் வ‌ந்த‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் உட்ப‌ட‌ ம‌ற்றும் நிர்வாகிக‌ள் அவ‌ர‌து ம‌க‌னுக்குரிய‌ ப‌ங்கை கொடுக்காம‌ல் அத்த‌னையையும் சுருட்டிக்கொண்ட‌தை என்னால் ஜீரணிக்க‌ முடிய‌வில்லை. ஆக‌ குறைந்த‌து தேசிய‌ ப‌ட்டிய‌ல் எம் பியாக‌ த‌லைவ‌ரின் ம‌க‌னை நிய‌மித்திருக்க‌லாம்.  ஆனால் முஹ‌ம்ம‌து ந‌பியின் பேர‌ர் ஹுசைனை ய‌ஸீதின் ப‌டைக‌ள் கொன்றொழித்த‌து போல் ஹக்கீமின் ப‌டைக‌ள் அமான் என்ற‌ த‌லைவ‌ரின் வாரிசை சுருட்டி எறிந்து விட்ட‌ன‌.

இஸ்லாத்தில் வாரிசுக‌ளுக்கு உரிமை உள்ள‌து. ஆட்சியிலும் ப‌ங்குண்டு. ப‌ல‌ ந‌பிமார்க‌ள் த‌ம் வாரிசுக‌ளுக்கு அதிகார‌த்தை கொடுத்துள்ளார்க‌ள். த‌லைவ‌ர் அஷ்ர‌ப் நீண்ட‌கால‌ம் வாழாத‌தால் அவ‌ரால் த‌ன் வாரிசுக்குரிய‌ க‌ட‌மையை பூர‌ண‌மாக‌ நிறைவேற்ற‌ முடியாது போயிருக்க‌லாம். ஆனாலும் த‌லைவ‌ரை த‌லைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் ச‌மூக‌ம் அத்த‌லைவ‌ரின் ம‌க‌னை தொபுக்க‌டீர் என‌ கீழே போட்டுள்ள‌மையை பார்க்கும் போது க‌ட்சி, க‌ட்சி, ச‌மூக‌ம் என்றெல்லாம் பாடுப‌டுவ‌து அர்த்த‌ம‌ற்ற‌தாக‌ என‌க்கு தெரிகிற‌து. 

இந்த‌ ச‌மூக‌ம் மிக‌ மோச‌மான‌ ந‌ன்றி கெட்ட‌ ச‌மூக‌ம் என்ப‌து என‌க்கு தெரியும். ஆனால் இந்த‌ள‌வு மோச‌மான‌ ந‌ன்றி கெட்ட‌ ச‌மூக‌மாக‌ இருக்கும் என‌ எண்ணிய‌தில்லை. 

த‌லைவ‌ரின் ம‌னைவி பெண் என்ப‌தால் அவ‌ரை ஓர‌ வைத்திருப்ப‌தை ஓர‌ள‌வு ஏற்றாலும் அந்த‌ ஆண் சிங்க‌த்தை இந்த‌ ச‌மூக‌ம் எங்கோ தொலைத்து விட்டிருப்ப‌தை ஒரு போதும் ஏற்க‌ முடிகாது.

மு. காவுக்கு அவ‌ரை த‌லைவ‌ராக்குங்க‌ள் என்று நான் சொல்ல‌வில்லை. குறைந்த‌து ஹ‌க்கீமும் மற்ற‌வ‌ர்க‌ளும் இந்த‌க்க‌ட்சி மூல‌ம் அனுப‌விப்ப‌தில் கொஞ்ச‌த்தையாவ‌து அவ‌ருக்கு கொடுங்க‌ள் என்கிறேன். அவ‌ர் என‌க்கு எதுவும் வேண்டாம் என‌ சொல்ல‌லாம். கார‌ண‌ம் அவ‌ர் த‌லைவ‌ரின் ம‌க‌ன். அத‌ற்காக‌ ச‌மூக‌ம் சும்மா இருக்க‌ முடியாது. அவ‌ருக்குரிய‌தை கொடுக்க‌ வேண்டிய‌தும் அத‌ற்குரிய‌ அழுத்த‌த்தை கொடுப்ப‌தும் மிக‌ அவ‌சிய‌மாகும்.

அந்த‌ வ‌கையில் இன்னும் ஓரிரு வ‌ருட‌ங்க‌ளில் க‌லைய‌ விருக்கும் பாராளும‌ன்ற‌த்தின் தேசிய‌ப்ப‌ட்டிய‌ல் உறுப்பின‌ராக‌ த‌லைவ‌ர் அஷ்ர‌பின் ம‌க‌ன் அமானை நிய‌மிக்கும் ப‌டி அந்த‌க்க‌ட்சியை வ‌ள‌ர்ப்ப‌தில் அதிக‌ ப‌ங்க‌ளித்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ன் என்ற‌ வ‌கையில் கேட்டுக்கொள்கிறேன்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி.
உல‌மா க‌ட்சி

3 comments:

  1. I totally agreed with this proposal, please respect Hon. MHM Ashraff son and family.

    ReplyDelete
  2. இனவாதத்திற்கு அப்பால் சிந்திக்கின்றார் என்பதால் எனது வாக்கும் அவருக்கே.

    ReplyDelete
  3. Let him live his own peaceful life.. No Need any involvement/trouble in Dirty politics...

    ReplyDelete

Powered by Blogger.