Header Ads



மைத்திரி - ரணில் மோதல் தீவிரமடைகிறது

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு ஆரம்பித்த வேளையில் ஜனாதிபதி மண்டபத்தை நெருங்கிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க 10 அடி தூரத்தில் வந்துள்ளார்.

மண்டபத்திற்குள் சென்று ஒரு பக்கத்தில் ஜனாதிபதி அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆசனம் பெற்று அமர்ந்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் பிரதமர் அமர்ந்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் கலந்துரையாடிய போதும் பிரதமர் அமைதியாக இருந்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அமர்ந்திருந்த சபாநாயகர் உரையாற்றிவிட்டு மீண்டும் வரும் வரையிலும் ஜனாதிபதியும் பிரதமரும் தங்கள் முகத்தை கூட பார்த்துக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

பின்னர் பிரதமர் உரையாற்றிவிட்டு, மண்டபத்தை விட்டு தனது மனைவியுடன் வெளியேறியுள்ளார். எனினும் அவர் தனது கைகளை சபாநாயகருக்கு மாத்திரம் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

பிரதமர் அங்கிருந்து செல்லும் போது ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். தனது உரை நிறைவடைந்து 15 நிமிடங்களின் பின்னர் ஜனாதிபதியும் அங்கிருந்து சென்றுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

சமகால தேசிய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கதாப்பாத்திரங்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொண்டமையானது, உள்ளக மோதல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.