Header Ads



முஸ்லிம் என்பதால் மட்டும், நிசாம்டீனை தீவிரவாதியாக பார்த்த கூறுகெட்ட உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது நான் எழுதிய ஒரு பதிவுக்கு ஆயிரம் விமர்சனங்கள் வந்தன...

அவரிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் டயரியில் உள்ள கையெழுத்து அவரின் கையெழுத்தல்ல என்று கூறி, நீதிமன்றம் இப்போது அவரை பிணையில் விடுவித்துள்ளது ..

முஸ்லிம் என்பதால் மட்டும் அவரை தீவிரவாதியாக பார்த்தது இந்த கூறுகெட்ட உலகம்..!

( அந்த பதிவை இணைத்துள்ளேன் )
Sivarajah Ramasamy 
நிசாம்டீன் தீவிரவாதியா ?

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் - 25 வயதான கமர் நிசாம்டீன் குறித்து ஒரு பதிவை இட விரும்புகிறேன்...

நிசாம்டீனிடமிருந்து கைப்பற்ற நாட்குறிப்பில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் இருந்ததாகவும் ...
மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அவர் திட்டம் தீட்டியதாகவும் ...

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், பொலிஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் .....

சந்தேகிக்கப்படுகிறது ...

மாறாக அவர் மீது குற்றங்கள்- இந்த சந்தேகங்கள் நிரூபிக்கப்படவில்லை...

இறுதியில் இப்படியும் சொல்கின்றன ஊடகங்கள்..

“நிசாம்டீனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள பயங்கரமான விடயங்களை நிறைவேற்றும் திறன் அவரிடம் உள்ளதா என ஆராய்வதற்காக உளவியலாளர்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்”...

நிஸாம்தீனின் கல்வி மற்றும் குடும்ப பின்னணியை பார்த்தால் நல்ல திறமையான மாணவன்... தீய செயல்களுக்கு துணை போகாதவர் என்று அவரது நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன...

எது எப்படியாயினும் அவர் தொடர்பில் ஒரு நியாயமான விசாரணை முடியும்வரை அவரை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்க முயலும் சர்வதேச ஊடகங்கள் குறித்து கவலையாக இருக்கிறது...

அவர் முஸ்லிம் என்பதற்காகவா எடுத்த கையோடு சீல் குத்தப்பட்டார் என்று கேட்க தோன்றுகிறது...

இவ்வளவு தொழிநுட்பம் வளர்ந்த காலத்தில் அவர் நாட்குறிப்பில் எல்லாம் எழுதிவைத்திருந்தார் என்று சொல்வதும் சற்று விநோதமாகத்தான் இருக்கிறது...

எப்படியோ சூடான செய்திகளை வழங்குவதாக நினைத்து பரபரப்பான தகவல்களை வெளியிடுவது... பின்னர் உண்மை தெரிந்த பின் கண்டும் காணாமல் போவது சர்வதேச ஊடகங்களுக்கு கை வந்த கலை ..

பொலிஸ் விசாரணைகள் முடியட்டும்... அதுவரை பொறுத்திருங்களேன்...

அதற்குள் ஏன் அவரை தீவிரவாதியாக்குகிறீர்கள் ?

No comments

Powered by Blogger.