Header Ads



கோத்தா - மைத்திரி கொலை சதி, நாமலை சந்தித்த இந்தியர்

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­டுள்ள  இந்­திய பிரஜை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவை சந்­தித்­துள்­ள­தாக  விசா­ர­ணை­களில் தெரி­வித்­துள்ளார்.  

அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வ­ன்ச­வையும், மேசரிஸ் தோமஸ் எனும் குறித்த இந்­திய பிரஜை  சந்­திக்க சென்­றுள்ள போதும் அவரை சந்­திக்க முடி­ய­வில்லை எனவும் அவ­ரது அலு­வ­ல­கத்தில் ஒரு­வரை சந்­தித்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 

இத­னை­விட குறித்த இந்­திய பிரஜை  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­திக்க அவ­ரது விஜே­ராம இல்­லத்­துக்கு சென்­றுள்ள போதும் அவரை சந்­திக்க முடி­ய­வில்லை என சி.ஐ.டி.க்கு தெரி­வித்­துள்­ள­தாக  விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந்நிலையில் சந்­தேக நப­ரிடம் சி.ஐ.டி.  மிக ஆழ­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத தடை சட்ட விதி­வி­தாங்­க­ளுக்கு அமை­வாக இவ்­ வி­சா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் அந்த அதி­காரி மேலும் கூறினார்.

இந்நிலையில்,  இது­வரை இந்த கொலைச் சதி விவ­காரம் குறித்து 20 இற்கும்  அதி­க­மா­னோ­ரிடம் வாக்­கு­மூ­லங்­களை சி.ஐ.டி. பதிவு செய்­துள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவின்  ஆலோ­ச­னைக்கு அமைய மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி தலை­மையில் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க மற்றும் உப பொலிஸ் பரி­சோ­தகர் கே.எம்.எம்.குமா­ர­சிங்க உள்­ளிட்டோர்  இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

 இத­னி­டையே பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­லி­ருந்து  காணாமல் போயுள்­ள­தாக கூறப்­படும் ஸ்னைப்பர் ரக துப்­பாக்கி  குறித்தும் சி.ஐ.டி. விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

 சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஒட்­டு­சுட்டான் காட்டுப் பகு­தியில் கிளேமோர் குண்­டுடன் முன்னாள் புலிகள் இயக்­கத்தின் உறுப்­பினர்  ஒருவர் கைது செய்­யப்­பட்­டட நிலையில் அது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட  மேல­திக விசா­ர­ணை­களின் போது, இரா­ணுவ புல­னாய்வு  பிரிவின் உறுப்­பினர் எனக் கூறப்­படும்  ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இந்த ஸ்னைப்பர் துப்­பாக்கி பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வி­னரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த ஸ்னைப்பர் துப்பாக்கியே  காணாமல் போயுள்ளதாக கூறப்படும்  நிலையில் தற்போது அது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.