September 04, 2018

"சிங்களவர்களின் உணர்வுகளை, முஸ்லிம்கள் புரிந்து கொள்வதில்லை"

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

இன்றைய நிகழ்வு நாம் அஸ்வரை மறந்து விட்டோமா? இல்லை அஸ்வருடைய வாழ்க்கையிலே உள்ள சில நல்ல இயல்புகளை தேடி எடுத்து அதை மீண்டும் அசைபோட்டுப் பார்த்து எங்களுக்கு அதிலே என்ன பாடங்கள் இருக்கின்றன. என்பதை பயன்படுத்திக் கொள்வதற்கான கூட்டம் என்று நான் நினைக்கின்றேன்.

மனிதர்கள் பிறக்கிறார்கள்  இறக்கின்றார்கள் என்பது சாதாரணமான ஒரு சம்பவம். உண்மையிலே மனிதன் வாழ்வதுதான் வரலாறாக மாறும் அல்லது மறந்து போன ஒரு கதையாக மாறும் வரலாற்றிலே நிற்கின்றவர்கள்  ஒன்றில் நேர்க்கணியமாக பார்க்கப்படுவார்கள் அல்லது எதிர்க்கணியமாக பேசப்படுவார்கள். வேறு வார்த்தையிலே சொன்னால் புகழப்படுவார்கள் அல்லது விமர்சிக்கப்படுவார்கள். இப்படிப்பார்க்கின்ற பொழுது உலகத்திலே எல்லோரும் விரும்புகின்ற அணைவராலும் போற்றுகின்ற தலைவர் பிறந்திருக்கின்றாரா? என்று எனக்கொரு சந்தேகம் ஏற்படுகின்றது. ஜனநாயகத்திற்காக போராடிய ஆபிரகாம் லிங்கன் அகிம்சையை உலகத்திற்கு அறிமுகம் செய்த மகாத்மா காந்தி, இஸ்லாமிய வரலாற்றிலே தலை சிறந்த ஒரு நிருவாகி கலிபா உமர் கத்தாப் இப்படி மாபெரும் தலைவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால் அவர்களுக்கும் எங்கோ ஒரு வெறுப்புணர்வு, எங்கோ ஒரு வைரம், எங்கோ ஒரு வைராக்கியம் மறைந்திருந்தது என்பதுதான் உண்மையான பொருளாக இருக்கின்றது.
அஸ்வர் ஹாஜியாரின் வாழ்க்கையிலே இறுதிப்பகுதி விமர்சனத்திற்குரிய காலமாக இருந்துள்ளது. அவர் இறைவனடி சேர்ந்த பொழுது சமுக வலைத்தளங்களிலே சில சகோதரர்கள் வெளியாக்கிய செய்திகள் மிகவும் கவலை தருகின்றனவாக அமைந்தன. இது நம்முடைய சமுகத்தின் ஒரு நிலையை ஒரு மனிதனை பாரபட்சமில்லாமல் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய முதிர்ச்சியில்லாத ஓர் அம்சத்தைத்தான் காட்டுகின்றது.

அஸ்வர் ஹாஜியார் அளுத்கமையிலே நடந்த அந்த இனக் கலவரத்தின் பொழுது அரசாங்கத்தின் பக்கம் இருந்தார்கள் என்ற காரணத்திற்காக அவரை ஒரு  சமுகத் துரோகியாக இந்தச் சமுகம் இனங் கண்டது. அதற்குப் பின்பு வந்த மூன்று வருடங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கின்ற பொழுது அஸ்வர் ஹாஜியாரை மட்டும் ஒரு சமுகத் துரோகியாக பார்க்கின்ற இந்தப் பரிகாச நியாயத்தை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பார்கள்  என்று நினைக்கின்றேன்.

முஸ்லிம் அரசியலில் ஈடுபாடு கொண்ட ஆளுமைகளைப் பற்றி  நான் இப்போதும் மௌனமாகத்தான் இருக்கின்றேன்.  ஏனென்றால் அதற்குப் பல நியாயங்கள் இருக்கின்றன. நான் அவசரப்பட்டு யாரைப் புகழ்வதோ, அல்லது யாரை விமர்சிப்பதோ இல்லை. அது என்னடைய கொள்கை.  ஆனால் அஸ்வர் அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் நான் பேசுவதற்கு எனக்கு சில கடப்பாடுகள் இருக்கின்றன.  கல்வி மாநாட்டில் நீண்ட காலமாக 40 வருடங்களாக அவரோடு சேர்ந்து இயங்கியவன் என்ற வகையில் கல்வி மாநாட்டுக்கு உயிர் கொடுத்த ஒரு உப தலைவர் என்ற வகையில் ஷாபி மரைக்கார் அவர்களுக்கு துணையாக இருந்து இலங்கை முஸ்லிம்களின் கல்விக்காக, இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக, இலங்கை முஸ்லிம்களின் கல்வி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக  வேண்டி போராடிய ஒரு போராளி அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான்.

அதற்காகத்தான் நான் அவரைப்பற்றி பேசுவதற்கு முன்வந்தேன். கல்வி மாநாடு 1964ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோதும் இலங்கையில் முஸ்லிம்களுக்கான கல்வியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற போராட்டம் சுதந்திரத்திற்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. அதாவது கொழும்பு முஸ்லிம் கல்விச் சங்கம் என்பதிலே தொடங்கி அதற்குப் பிறகு அகில இலங்கை முஸ்லிம் லீக்கிலே ஒரு கல்விக் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதற்குப் பிறகு இலங்கையிலே முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை முஸ்லிம் சமூகம் முஸ்லிம் பாடசாலைகள் கல்வியிலே எதிர் நோக்கியபோது அதற்கு ஒரு தனியான இயக்கம் தேவை என்று முஸ்லிம் லீக் கருதியது. அப்பொழுதுதான் அகில இலங்கை கல்வி மாநாட்டை 1964ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார்கள். அதன் தலைவாராக இலங்கைப் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயில் தெரிவு செய்யப்பட்டார்கள். ஷாபி மரைக்கார் அவர்கள் இயக்குணர் சபை தலைவராக இருந்தார்கள்.

தொடர்ந்து 40 வருடங்களாக ஷாபி மரைக்கார் அதனுடைய தலைவாக இருந்து அந்தப் பணியை அவர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள். இந்த இயக்கம் முஸ்லிம்களுக்காக கல்வியிலே என்ன செய்வது என்பதை நான் இங்கு பட்டியல் போட்டு காட்ட விரும்புகின்றேன்.

அதாவது முஸ்லிம் பாடசாலைகள் என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது கல்வி மாநாட்டின் முயற்சியால்தான். அப்பொழுது தமிழ் பாடசாலைகள், சிங்களப் பாடசாலைகள் என்று மட்டும்தான் இருந்தன. இப்போது இலங்கையின் மூன்று விதமான பாடசாலைகள் இருக்கின்றன.  தமிழ் பாடசாலைகள், சிங்களப் பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகள். முஸ்லிம் பாடசாலைகள் என்ற ஓர் அமைப்பை  இலங்கையிலே அறிமுகம் செய்தது டபிள்யு தகநாயக்கவுடைய காலத்திலே முஸ்லிம் கல்வி மாநாடுதான். இப்படியொரு தனியான பாடசாலை அமைப்பொன்று முஸ்லிம்களுக்கு தேவை என்று சொன்னவர் முதல் முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயில்தான். அந்த அம்சத்தைத்தான் பாக்கீர் மாக்கார் அவர்களும் பாராளுமன்றத்திலே பல தடவைகள் பேசியிருக்கின்றார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் பின் வந்த சேர் ராசீக் பரீத் ஷாபி மரைக்கார் போன்றவர்களுடன் இணைந்து இந்த முஸ்லிம் பாடசாலைகள் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள்.

அதுமட்டுமல்ல முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்தும், கோரிக்கையும் வென்றெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் அதிபர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முஸ்லிம் கல்வி மாநாடு எடுத்த அந்த சலுகையையும் அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

அதற்குப் பிறகு பாடசாலைகளிலே இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பிப்பதற்கு மௌலவி மார்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்பொழுது மௌலவி மார்களுடைய நியமனமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த மௌலவி நிமனம் பல காலமாக நடந்து 1979க்குப் பிறகு இந்த மௌலவி நியமனம் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 15,20 வருடங்களாக நடைபெறவில்லை. முஸ்லிம் கல்வி மாநாடு ஏ.எச்.எம்.அஸ்வர், அலவி மௌலானாவின் துணையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து மௌலவி நியமனங்களுக்கான சில விடயங்களைச் சாதித்தது. அப்போதான் ஒரு பரீட்சை வைத்தார்கள் அதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அரசாங்கத்தை குறை சொல்லி வேலை இல்லை. ஏனென்றால் மௌலவி மார்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டபோது 1600 பேர் பரீட்சைக்குத் தோற்றினார்கள். 
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 118 பேருக்கும் நியமனம் வழங்கினார்கள். எல்லா இடங்களிலும், பத்திரிகைகளிலும் மௌலவி நியமனங் கொடுங்க, மௌலவி நியமனங் கொடுங்க என்கின்றனர் அமைச்சர்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாது.  ஜனாதிபதிக்கும் ஒன்றும் செய்ய முடியாது, அதே நேரத்தில் அரசாங்கத்திற்கும் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருக்கின்றது.

இந்த நியமனத்தைக் கொடுத்த பிறகு இன்னும் ஒரு எழுபது எண்பது பேர் இருக்கின்றார்கள் புள்ளிகளை ஒன்று சேர்த்துக் கொடுப்பதற்காக. இந்த வேகத்தை செய்வதற்கு அப்போது பணம் திறை சேரியில் இருக்க வில்லை. அஸ்வர் ஹாஜியாரும், அலவி மௌலானாவும்தான் அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டு கோளிற்கு இணங்க திறைசேரியில் இருந்து விஷேட நிதி ஒதுக்கீட்டை எடுத்தார்கள். எடுத்து அந்த நியமனத்தைக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு இந்த நியமனத்தைப் பற்றி எந்த விதமான அக்கறையும் இல்லாமல் இருந்ததையும் அண்மைக்காலத்தில் முஸ்லிம் கல்வி மாநாடு இதை இப்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் இதை சுட்டிக்காட்டிய பொழுது அவர் ஒரு அமைச்சவை பத்திரம் போட்டு அனுமதி எடுத்தார். இந்த 635 மௌலவி ஆசிரியர் நியமனத்தில் 118 மட்டுமே கொடுக்கப்பட்டதுடன் ஏனைய வற்றையும் கொடுக்குமாறு சொன்னார்.

அதே நேரத்தில் அரசாங்கம் சிந்தித்தது அது ஒரு பரவலான நல்ல சிந்தனைதான் தனியே  மௌலவி மார்களுக்கு மட்டும் மௌலவி நியமனத்தைக் கொடுக்காது எல்லா சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தர்மாச்சாரி என்று அதைச் சொல்வார்கள். எல்லோருக்கும் நாட்டிலே நியமனங் கொடுக்க வேண்டும்  என்று கூறி தகவல்களை திரட்டினார்கள். அதில் 5000 பேருக்கு இடம் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. 635 மௌலவி மார்களுக்கு இடமிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

பரீட்சையில் சித்திபெற்றால் உத்தியோகம் கிடைக்கும். எம்.பிகளிடம் போய் தொந்தரவு செய்யத் தேவையில்லை. பரீட்சை வைக்கப் போகின்றார்கள் பரீட்சையில் சித்தியடைந்தால் உங்களுக்கு தொழில் கிடைக்கும். இந்த மௌலவி நியமனங்களுக்கு புத்துயிர் ஊட்டியவர் அஸ்வர் ஹாஜியார்தான். முஸ்லிம் கல்வி மாநாட்டில் துணையாக இருந்து. 1965ஆம் ஆண்டு அப்பொழுது அமைச்சராக இருந்த  ஈரியகொல்ல இந்த தமிழ் - முஸ்லிம் பாடசாலைகளின் பெயரை மாற்றுவதற்கு முயற்சித்தபோது டாக்டர் கலீலுடைய தலைமையில் ஷாபி மரைக்கார் உட்பட 42பேர் அவரைச் சந்தித்து  இருக்கின்றமாதிரி இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகள் இருக்கட்டும் என்று கூறியதற்கு அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

1980இல் வெள்ளை அறிக்கையில் இலங்கையில் சமயம் கற்பிக்கக்கூடாது அறக்கல்வி ஒன்று கற்பிக்க வேண்டும் என்று இருந்தது. அதை முஸ்லிம் கல்வி மாநாடு இலங்கையில் உள்ள பல்வேறு நிறுவனங்களோடு ஒன்று சேர்ந்து திரும்பவும் சமயம் கற்பிப்பதை இலங்கைப் பாடசாலைகளிலே அறிமுகம் செய்தது.


1973ஆம் ஆண்டுகள் க.பொ.த உயர் தரத்தில் இஸ்லாமிய நாகரீகத்தை ஒரு பாடமாக அங்கீகரிக்கும்படி 10 வருடங்கள் போராட்டம் நடாத்தியபின் இஸ்லாமிய நாகரீகம் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஷாபி மரைக்கார் கல்வி மாநாட்டில் சிந்தித்து முஸ்லிம் மௌலவி மார்களுக்கு தோற்று வதற்கு வேறு பாடங்கள் இல்லை என்பதால் இஸ்லாம் என்ற ஒரு பாடத்தையும் அவர்கள் உயர் தரத்திற்கு சேர்த்தார்கள். 
அதற்குப் பிறகு அறபு மொழியையும் ஒரு பாடமாக சேர்த்தார்கள். மூன்று பாடங்கள் அவர்களுக்கு இருக்கின்றது. இவ்வாறு முஸ்லிம் கல்வி மாநாடு முஸ்லிம்களுக்காக பெற்றுக் கொடுத்த முக்கியமான அம்சங்களாக அவை காணப்படுகின்றன.
முஸ்லிம்களுக்கு என்று தனியே ஆசிரியர் பயிற்சிக் கல்வி கலாசாலைகளை அட்டாளைச் சேனை, அளுத்கமையில் திறப்பதற்கும் காரணமாக இருந்தது முஸ்லிம் கல்வி மாநாடுதான். அதற்குப் பிறகு இலங்கையிலே கல்விக் கல்லூரி அமைக்கப்பட்ட பொழுது அட்டாளைச் சேனையில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கல்வி கல்லூரி அமைத்தார்கள். அதற்குப் பின்னர் இந்த விடயத்தை அப்பொழுது அமைச்சராக இருந்த ஏ.எச்.எம். பௌசி அவர்களிடத்திலே முஸ்லிம் கல்வி மாநாடு போய்ச் சொல்லி  அளுத்கமயிலும் ஒரு கல்விக் கல்லூரி அமைத்தார்கள். அது மாத்திரமல்ல இவற்றில் அரபுக் இஸ்லாம் பாட நெறியை உண்டாக்குவதற்கும் முஸ்லிம் கல்வி மாநாடு முக்கியமான பங்களிப்பை செய்தது.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் இவ்வளவு சலுகைகைளயும் பெற நாம் எந்தப் போராட்டமும் நடாத்திப் பெறவில்லை. நாங்கள் வந்தது சமரசமாக எங்களுடைய பெரும்பான்மை 
சிங்களத் தலைவர்களிடத்திலே எங்களுடைய குறைகளைச் சொல்லி, விளங்கப்படுத்தி பெற்றுக் கொண்ட உரிமைகள். ஆகவே சலசலப்பு இல்லாமல் சாதித்துப் பெற்ற சலுகைகள். ஆகவேதான் தொடர்ந்தும் இப்படியான முயற்சிகளை முஸ்லிம் கல்வி மாநாடு முயற்சி செய்வதற்கு கல்வி மாநாட்டுக்கு விட்டுவிடுங்கள் ஏனென்றால் இந்தப் பணிகளை எல்லாம் செய்வதற்கு ஷாபி மரைக்கார் அவர்களுக்கு இரண்டு ஒலிபெருக்கியாக இரண்டு மனிதர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள். ஒன்று ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றயவர் மசூர் மௌலானா ஆகியோர். ஷாபி மரைக்காருக்கு தமிழும், சிங்களமும் தெரியாது ஆங்கிலம் மட்டும்தான் தெரியும் ஆகவே அவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களை தெளிவு படுத்த மேற்குறித்த இருவரையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இவ்வாறான விடயங்களை சாதிப்பதற்கு பின்னணியில் இருந்த போராளிதான் அஸ்வர் ஹாஜியார். அஸ்வர் ஹாஜியார் பிற்காலங்களில் நிறத்தைத்தான் மாற்றினார் ஆனால் அவருடைய கொள்கையை மாற்றவில்லை. அவர் பாக்கீர் மாக்காருடைய பாசறையில் வளர்ந்தவர். டாக்டர் கலீலுடன் இருந்தவர். ரி.பி. ஜாயாவோடு இருந்தவர் அந்தப் பண்புகளை அவர் மறக்க வில்லை.

பெரும்பான்மையுடன் சேர்ந்துதான் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற தத்துவம் அஸ்வர் ஹாஜியாரிடமிருந்து பிரிந்து போகவுமில்லை பாக்கீர்மாக்காரில் உள்ள அன்பு குறையவுமில்லை. இம்தியாசில் இருந்த அன்பு குறையவுமில்லை. ஷாபி மரைக்காரில் இருந்த பக்தி குறையவுமில்லை. ஆகவே அஸ்வர் ஹாஜியார் அந்தளவிற்கு முக்கியமான பணிகளைச் செய்திருக்கின்றார்கள்.

தற்போதைய காலம் இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நெருக்கடியான ஒரு காலம். மார்க்கம், அரசியல், பொருளாதாரம்,  சமூகப் பிரச்சினைகள் நம்மிடம் இருக்கின்றன நாம் மிக அவதானமாக காய்களை நகர்த்த வேண்டிய காலம், நமது உணர்வுகளை அடக்கி சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலம்  பெரும்பான்மை சமுகங்களின் அன்பை சம்பாதித்து அவர்களடைய பூரண விருப்பத்துடன் நமது தேவைகளை வென்றெடுக்க வேண்டியுள்ளது. இதைத்தான் நமது மூத்த தலைவர்களான ரி.பி ஜாயா, எம்.சி.எம்.கலீல், சேர் ராஷீக் பரீட், டொக்டர் பதியுதீன் ஹொமட், பாக்கீர் மாக்கார் போன்றவர்கள் நமக்கு கற்றுத்தந்தார்கள் அந்தப் பாசறையிலேதான் அவர்கள் வளர்ந்தார்கள்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களுக்கு பல சலுகைகளை பெற்றுத் தந்தார்கள். முஸ்லிம் பாடசாலைகளை அமைக்க உதவினார்கள், நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு விடுமுறை கிடைத்தது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களை நியமித்தார்கள், முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு சீருடைகளைப் பெற்றுக் கொடுத்தார்கள், அதேமாதிரி உலகத்தில் இல்லாதமாதிரி கணவனை இழந்தவர்களுக்கு மூன்றரை மாதத்திற்கு இத்தா விஷேட லீவு பெற்றுக் கொடுத்தார்கள். இவற்றையெல்லாம் எந்தச் சலசலப்பும் இல்லாமல் நல்ல எண்ணத்துடன் பெற்றுக் கொடுத்தார்கள்.
அப்போதிருந்த அரசியல் தலைவர்களின் நல்ல என்னத்துடன் இவற்றை செய்தார்கள். ஆகவே எங்களுடைய சமுகம் எங்களுக்கு உரிமை இல்லை என்று உணர்ச்சி வசப்படுவதைவிட எங்களுக்கு இருக்கின்ற தரப்பட்டுள்ள சலுகைகளை பற்றியும் சற்று சிந்தித்துப்பார்த்து இதற்குப் பிறகு எப்படி எங்களுடைய காய்களை நகர்த்த வேண்டும் என்பதைப் பற்றியும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

வன்செயல்களால், புரட்சிகளால். ஆயுதங்களால் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது  என்பதை இந்த வரலாறுகள் எமக்கு சொல்லித்தந்துள்ளன. ஆகவே அண்மைக்காலமாக எமது செயற்பாடுகளால் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கும் இடையில் விரிசல்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேமாதிரி இப்போது அண்மைக்காலமாக தமிழ், முஸ்லிம்களுக்கிடையிலும் விரிசல்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன என்பதைப்பற்றியும் நான் எச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகின்றேன். சென்ற சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் மாநாட்டில் புனருத்தாரணம் செய்யப்பட்ட சில புலிகள் நான் தொலைக்காட்சியில் பார்த்ததை சொல்கின்றேன். 

எங்களிடத்தில் ஆயுதங்கள் இல்லை எங்களுடைய ஆயுதங்களை எல்லாம் முஸ்லிம் தலைவர்கள் வாங்கிக் கொண்டார்கள் என்ற ஒரு அபாரமான பொய்க் குற்றச்சாட்டை எங்களுடைய சமுகத்தின் மேல் போட்டிருக்கின்றார்கள். இந்த ஆயுதங்கள் இருப்பதால்தான், முஸ்லிம்களுடைய உரிமைகளைத் தராவிட்டால் இரத்த ஆறு ஓடும் என்ற அந்த தலைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். வடக்கிலோ கிழக்கிலோ உணர்ச்சி வசப்பட்டு பேசுகின்ற ஒவ்வொரு வார்ததைகளும் ஏனைய பகுதியில் இருக்கின்ற முஸ்லிம்ககுக்கு என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை சிந்தித்து அவதானமாக இருக்க வேண்டும் என்பதனை சொல்லி பணிவாக கேட்டுக் கொள்கின்றேன்.

எனது நண்பரான டொக்டர் காமினி சரத் சில்வா அவர் தனது கட்டுரையில்...

தற்போது முஸ்லிம்கள் மத்தியிலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அவர் குறிப்பிட்டுள்ளார் நான் 50 வருடங்களாக முஸ்லிம்களுடன் நெருங்கி பழகி இருக்கின்றேன். 

ஆகவே அவர்கள் மீதுள்ள அன்பினால் நான் சொல்கின்றேன் முஸ்லிம்கள் இங்கே அதிகமாக பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை. தயவு செய்து  நீங்கள் அவர்களுடைய உணர்வுகளை பரிந்து கொள்ளுங்கள் வேறு எந்த வழியிலும் இதற்கு தீர்வு இல்லை. போராட்டங்கள் தனிப்பட்ட மனிதர்களின் உள்ளங்களில் இருந்துதான் வருகின்றது. தனிப்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்துதான் வருகின்றன. இங்கே அதற்கு தீர்வு இல்லா விட்டால் வேறு எநத் அரசாங்கம் வந்தாலும் ஒன்றும் செய்ய  முடியாது. ஆகவே உள்ளங்களைப் மாற்றிக் கொள்ள வேண்டம், எங்களைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும், எங்களிடத்தில் குறைகள் இருந்தால் அதை நாங்கள் திருத்திக் கொள்ள  வேண்டும். அப்பொழுதுதான் சமுகத்திற்கு விடியல் ஏற்படும்.

8 கருத்துரைகள்:

Are you talking about puttalam booruwa ?
do you remember the dambulla mosque bomb attack?
He told this incident as fire crackers to Pakistan high commissioner

பேராசிரியர் A. G. ஹுஸைன் இஸ்மாயில் அவர்களது அரிய தகவல்களும் கருத்துக்களும் பெறுமதி மிகுந்தவை.

இரு கரங்களும் இணைந்தால்தான் சத்தம் வரும் என்பதற்கொப்ப, ஈரினங்களும் ஒருவர் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடந்தால்தான் நல்லிணக்கம் உருவாகும். 

உலகின் அதி சிறந்த மார்க்கம் தமதேயெனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள், தம் முன்மாதிரியான வாழ்க்கை மூலம் இந்நாட்டுப் பிரச்சினைகளுக்கே தீர்வு தரக் கூடியவர்கள் என்பது மிகையன்று.

முஸ்லிம்களின் முக்கிய ஆதங்கம், தமது மொழியில் தமது அரச கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத அநீதி இழைக்கப்பட்ட அந்த உணர்வினை,  பெரும்பான்மையினர் புரிந்து அதனைத் களைய முன்வர வேண்டும் என்பதே.

அதேபோன்று, முஸ்லிம்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி பொதுச் சூழலில் வாழும்போது, குறைந்த பட்சம் பிறருக்கு எவ்விதத்திலும் இடைஞ்சல் இல்லாதவாறு தம் நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளே வலியை வைத்துக் கொண்டு வெளியே யாரால்தான், எவ்வளவு காலத்துக்குத்தான்  புன்னகைத்துக் கொண்டிருக்க முடியும்?

Article addressed touched real problems of our community. This is not a Muslim country we most of us live among major communities.We lived happily doing all our business maintained relationship coexistence decades.
Recent past because of our communal leaders
their narrow political agenda damaged our long standing relationship we face problems in day to day life which have to addressed without delay .
Learned people like author have to come forward to fill these needs of our society
We all agree names mentioned here they contributed immensely to our community
Other so called present leaders ? Why their names not mentioned

அஸ்வர் அவர்களின் மேல் மக்கள் வெறுப்படைந்ததற்கான காரணத்தை, அளுத்கம சம்பவத்தோடு இணைத்து, சுருக்கி விட்டீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.

காரணம், அளுத்கம சம்பவம் மட்டுமல்ல. பல காரணங்கள் உண்டு ஆயினும், நான் அவைகளைக் கூறி இல்லாத ஒருவருக்கு மேல் குற்றங்களை முன்வைக்க விரும்ப வில்லை. எனது நோக்கம் உங்களது அளுத்கம என்ற கருத்து, உங்கள் சிங்களவரின் உணர்வுகளை முஸ்லிம்கள் உணரத் தவறி விட்டனர் என்பதை அடைவதற்காக முன்வைக்கப்படுவதாக உணர்ந்ததால், அதற்கு பதில் இறுப்பதன் நோக்கமே.

மிகச் சுருக்கமாகக் கூறின், அஸ்வர் மஹிந்தரின் அடிவருடியாக மாறியிருந்தது, முஸ்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அவர் அனைத்துக்கும் மகுடம் வைத்தது போன்று ராஜபக்‌ஷ நாமத்தை உச்சரித்தால் அனைத்தும் தீர்ந்து விடும் என்ற சாரப்பட பகிரங்கமாகப் புகழ்ந்ததே! ஒரு சராசரி இஸ்லாமியன் இந்த அவரது கருத்தால் பாதிக்கப்படாது
இருந்தால் அது அவரது அவரது ஈமானின் குறையாகவே பார்க்கப்படும். இதுவே சாதாரன நிலையில் இருந்த அனைவரும் அவரைக் காணும் நிலையில் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்து
அசூசி கொள்ள வைத்தது.

உங்களது நல்ல கருத்துக்களை நான் வரவேற்கிறேன். உங்களது கருத்துக்களின் பெறுமானம்
அஸ்வர் அவர்களைப் புகுத்தியதன் மூலம் குறைந்தவிடுகிறதோ என ஐயுறுகிறேன்.

சமூக இணக்கப்பாடு சங்கமம் ஆவதல்ல என்பதைத் தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். சேர் ஐவர் ஜன்னிங்ஸ், சிறுபான்மையினர் பெரும்பான்மையினருடன் சேர்ந்து வாழ்வதை வலியுறுத்தினார்.

நமது முன்னவர்கள் மிகப் புத்திநுட்பமாக, தூரதரிசனத்துடன் செயற்பட்டு பெரும்பான்மை சமூகத்தார் மூலமே நமது உரிமைகள, தேவைகளை எவ்வித சிக்கலோ, கருத்து வேறுபாடோ, இனவிரோத சிந்தனையோ ஏற்படாதவாறு பெற்று வந்தனர்.

மதத் தலைமைகளும், மதவாத அரசியலும், சுயநல முஸ்லிம் அரசியலும்/அரசியல்வாதிகளும் முஸ்ம்களை இன்றைய நிலைக்கு இழுத்து வந்துள்ளனர்.

இதனை படிக்கும்போது ஒரு கல்விமானின் சமூகசிந்தனை இவ்வளவுதூரம் இடக்குமுடக்காக இருக்க முடியுமா என வியந்து போனேன்.முஸ்லிம்கள் எந்தளவு தேசப்பற்றோடு,பெரும்பான்மை சிங்கள சமூகத்தோடும்,தமிழ் சமூகத்தோடும் இரண்டறக்கலந்து இந்த நாட்டைக்கட்டி எழுப்பினார்கள்,நாடு சுதந்திரம் பெற நமது பங்களிப்பு எத்தனை மகத்துவமானது என்ற வரலாற்று உண்மைகளையெல்லாம் கொச்சைப்படுத்தும் இந்த பேராசிரியரை நினைக்கும்போது உறைந்துபோனேன்.
அஸ்வரைப்பற்றியோ அவரைப்போன்ற இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் பச்சோந்திகளின் சூதாட்டங்கள் பற்றியெல்லாம் புத்தகங்களே எழுதமுடியும்.பேராசிரியரிடம் ஒரு பணிவான வேண்டுகோள்,தயவவுகூர்ந்து இதுபோன்ற முஸ்லிம் சமூகத்தின் உன்னதமான வரலாற்றை கொச்சைப்படுத்தும் உங்களின் கொச்சையான சிந்தனைகளை வரலாறாகப்பதியவேண்டாம்.
இன்று இந்நாட்டு முஸ்லிம்களின் சகல அழிவுகளுக்கும் அரசியல் பின்னணியேயன்றி வைறில்லை.இதில் நமது அரசியல் களிசடைகளுக்கு பெரும்பங்குண்டு.

The above unknown says comment is mine.
Abdul wahab CBO.

Post a Comment