Header Ads



கிரிக்கெட் துறை பாரிய வீழ்ச்சி, சிலரின் தலையீடுகளே பிரதான காரணம்

ஒரு சில மாகாண சபைகளின் எதிர்ப்பின் காரணமாகவே 3850 பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் மேற்குறித்தோரை துரிதமாக சேவையில் இணைப்பதற்கான அமைச்சரவை யோசனை அடுத்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பேன் என கல்வி அமைச்சர் தெரிவிப்பு.

34 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான மெய்வல்லுனர் போட்டி ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை கொழும்பு சுகததாஸ மைத்தானத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக 1984 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்து அகில இலங்கை பாடசாலை விளையாட்டு போட்டியை அறிமுகப்படுத்திய தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளதுடன் போட்டியின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அறிவுறுத்தும் ஊடகவியலாளர் மாநாடு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நேற்று (25) கொழும்பு ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்ட கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் அப்பியாச கல்வி ஆலோசகரான சுனில் ஜயவீர தெரிவித்ததாவது,

இம்முறை போட்டிகளின் போது 39 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். மெய்வல்லுனர் போட்டிக்கு மாத்திரம் 6000 விளையாட்டு வீரர்கள் பங்குப்பற்றவுள்ளனர்.

பின்னடைவை சந்தித்திருந்த பாடசாலை விளையாட்டு துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தற்போதைய கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரமே 2015 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி அமைச்சு செயற்பட்டு வந்ததுடன் , தற்போதைக்கு ஆசியாவின் மிகச்சிறந்த மெய்வல்லுனர் அணி இலங்கையிலேயே உள்ளது. கிரிக்கெட் துறையை மீள் கட்டியெழுப்புவது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்துக்காக இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி கல்வி அமைச்சுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

13 வருட கட்டாய கல்வி முறைமையின் ஊடாக பாடசாலை மட்டத்தில் விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கும் கல்வி கற்கும் வரம் கிடைக்கும். தற்போதைய கல்வி அமைச்சர் பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுத்துள்ள செயற்த்திட்டங்கள் தொடர்பாக தௌpவூட்டிய சுனில் ஜயவீர, இந்த வேலைத்திட்டங்களின் பிரதிபலன் இன்னும் சில வருடங்களில் காணக்கூடியதாக இருக்கும்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,

இலங்கை கிரிக்கெட் துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒரு சிலரின் தேவையற்ற தலையீடுகளே பிரதான காரணமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் சபையை பயன்படுத்தி சுய நலனுக்காக வியாபாரம் செய்து வருவதுடன்; தமக்கு வேண்டியவர்களை அணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை; ஒரு சிலர் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

கிரிக்கெட் துறையின் வீழ்ச்சியை என்னால் பார்;த்துக் கொண்டிருக்க ; முடியாத காரணத்தினால் பாடசாலை மட்டத்திலாவது கிரிக்கெட் துறையை கட்டியெழுப்புவதற்காக நான் பிரபல கிரிக்கெட் வீரர்களை அழைத்ததுடன் என்னுடைய அழைப்பினை ஏற்று அவர்கள் எமது வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீச்சல் தடாக வீரர் அகலங்க பீரிஸ் வெளிநாட்டில் இருந்துக் கொண்டு உயர் கல்வி பரீட்சையில் தோற்றுவதற்கு வாய்ப்பு வழங்கியது விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயாகும். எனினும் இந்த தீர்மானத்தை விமர்சிப்பதற்கு ஒரு சிலர் முயற்சித்த போதும் அதற்கு அச்சம் கொள்ளாமல் விளையாட்டு துறையின் நன்மைக்காக அந்த தீர்மானத்தை எடுத்தேன்.

அத்துடன் சிரியாணி குலவன்சவுக்கு பட்டப்படிப்பினை பயில்வதற்கு வாய்ப்பு வழங்காமல் இருந்ததுடன் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தந்த சிரியாணிக்கு பட்டப்படிப்பினை பயில்வதற்கு நானே வாய்ப்பு வழங்கினேன். விளையாட்டு துறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கு கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வெற்றிப்பெற்ற 3850 பேரை விளையாட்டு பயிற்சாளர்களாக அமைச்சின் கட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதற்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை இணைத்துக் கொள்வதற்கு ஒரு சில மாகாண சபைகளின் ஊடாக முன்வைக்கப்பட்ட எதிர்ப்பின் காரணமாக விளையாட்டு பயிற்சியாளர்களை இணைப்பில் சற்று தாமதம் ஏற்பட்டது. எனினும் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்குறித்த 3850 பேரை துரிதமாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான யோசனையை முன்வைப்பேன் என அமைச்சர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடல் அப்பியாச கல்வி ஆலோசகர் சுனில் ஜயவீர மற்றும் கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடல் அப்பியாச கல்வி பணிப்பாளர் மஞ்சுல காரியவசம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஊடகப் பிரிவு, கல்வி அமைச்சு.

No comments

Powered by Blogger.