Header Ads



'கொலை சதி முயற்சி' வாக்குவாதத்தினால் பாராளுமன்றில் அமளிதுமளி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான வெளியான தகவல்கள் தொடர்பில் இன்று சபையில் ஆளும் எதிர்கட்சியினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதமும் சர்ச்சையும் ஏற்பட்டது.

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா தொடர்புப்பட்டுள்ளமையினால் அவரை தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும். அதேபோன்று இவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவையும் நீக்க வேண்டும். 

இவ்விருவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவர்களை நீக்கினால் மாத்திரமே சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படும். அவ்வாறான விசாரணையின் மீதே எம்மால் நம்பிக்கைகொள்ள முடியும் என இந்த சர்ச்சையின் போது கூட்டு எதிரணி வலியுறுத்தியது.

தினேஷ் குணவர்தனவின் இவ்வாறான கருத்தினால் விசாரணைகளுக்கே பாதிப்புகள் ஏற்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, இதன் போது தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கூட்டு எதிரணியினால் கடுமையான கூச்சல் எழுப்பப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கூட்டு எதிரணி பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்வியை அடுத்தே சபையில் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.