Header Ads



பேருவளை படகு விபத்தில், உறவுகளை இழந்தவர்களின் சோகக் கதை

க ண்ணுக்குத்தெரியாத கடல் நடுவில் படகுடன் கப்பல் நேருக்கு நேர் மோதிய பயங்கரமான சம்பவம் பற்றி கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பேசப்பட்டது.

கடந்த 11ம் திகதி பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மலிந்து புதா என்ற மீன்பிடிப் படகு, கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

பலப்பிட்டிய பிராக்மணவத்தையைச் சேர்ந்த அலவ்கே சிசிர சம்பத் (வயது 29) , பலப்பிட்டிய வலிவத்தயைச் சேர்ந்த கமல் பியசிரி மென்டிஸ் (35 வயது), பலப்பிட்டிய சிறிமத் சிறில் சொய்சா வீடமைப்பு திட்டத்தில் வசிக்கும் தனுஷ்க மதுஷங்க (25 வயது), அகம்பொடி துஷார த சொய்சா (20 ) மற்றும் கொஸ்சகொட பகுதியைச் சேர்ந்த அமில புஸ்பகுமார ஆகியரே இப்படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிர்களைப் பறிகொடுத்த உறவுகள் கண்ணீர் மல்க பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிசிர சம்பத்தின் 24 வயதான மனைவி மல்லிகா குமுதினி கணவரின் மரணத்தை பற்றி ஊடகங்களுக்கு தனது கருத்தை தெரிவிக்கையில்,

15 வருடங்களாக எனது கணவர் கடல்தொழிலுக்கு செல்கிறார். நாங்கள் திருமணம் முடித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. இரண்டு தடவை வெளிநாடு சென்றார்.

பேருவளையில் ரன்மல்லி என்பவருக்குச் சொந்தமான மலிந்து புதா என்ற படகில் வேலை செய்தார். 11ம் திகதி கலை 9 மணிக்கு கடலுக்குச்சென்றார்.

தினமும் புத்தருக்கு விளக்கு பற்றவைத்து செல்வார். அன்றைய தினம் விளக்கு பற்ற வைக்கும்போது அணைந்து விட்டது. மாலை நான்கு மணியளவில் தொலைபேசி எடுத்தார்.

மீண்டும் இரவு 8 மணிக்கு எடுத்து, காலையில் முதலாளியிடம் சென்று பணம் வாங்கி எடுக்கச்சொன்னார். மகள் அப்பா.. அப்பா என்று சொல்லும் போது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

12ம் திகதி மாலை 3 மணியளவில் தான் எங்களுக்கு தகவல் கிடைத்து. என்னுடைய இரு பிள்ளைகளின் மீதும் மிகவும் பாசம் வைத்திருந்தார் என்று கூறினார்.

மேலும் உயிரிழந்த கமல் பியசிறியின் சகோதரியான எதிரிமுனி சுரேகா லசந்தி த சொய்சா சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில்,

அவர் வேலைக்கு வரும் முன்னர் பட்டை வெட்டுதல் மற்றும் மேசன் வேலை செய்தார். எல்பிட்டியில் பட்டை உரிக்கச் சென்று ஞாயிற்றுக்கிழமை தான் வந்தார். ஆட்களோடு பேசி கடலுக்குச் சென்றார்.

கடலுக்குச் சென்றது இதுமுதல் தடவையாகும். தேவாலயதிற்குச்சென்று பூசையில் கலந்து கொண்ட பின்னரே கடலுக்குச் சென்றார்.

அவர்களுடன் சென்ற துஸார என்ற நபரின் அண்ணாவின் தொலைபேசிக்கு தம்பிமார் போன படகு விபத்துக்குள்ளானதாக அழைப்பு வந்தது. அவர் வேடிக்கையாக தான் கடலுக்குச் சென்றார்.

நீந்தக் கூடத்தெரியாது என்றார். உயிரிழந்த துஷாரவின் அம்மா இது பற்றி குறிப்பிடுகையில், மகன் 8 வருடங்களாக மீன்பிடித்தொழில் செய்கிறார். எனது தங்கையின் மகனுடன் தொழிலுக்குச் சென்றார்.

சுசில் குமார அண்ணாவின் படகில் இதற்கு முன்னர் வேலை செய்தார். ஒருவர் விலகியவுடன் பேருவளையில் வேலைக்குச் சேர்ந்தார்.

இதற்கு முன்னர் கடலுக்குப் போய் 11 நாட்களுக்குப் பிறகு வந்தார். அவரின் அப்பாவும் மீனவர்தான். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் பலப்பிட்டிய கடலில் புயலில் சிக்கி உயிரிழந்தார். அதன்பின்னர் எனது மகன் தான் எங்களுக்கு எல்லாம் என்றார்.

1 comment:

  1. Very Sad History... Feeling very sorry about their family situations..

    ReplyDelete

Powered by Blogger.