Header Ads



இரட்டைகோபுர தாக்குதல் எனும் பெயரில், அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம்

-எம்.ஐ.மொஹம்மட் சப்ஸாத்-

பாகிஸ்­தானின் உத­யத்­திற்கு வித்­திட்ட அதன் முதல் கவர்னர் முஹம்­மது அலி ஜின்னா 1948 இல் இதே செப்­டெம்பர் 11 இல் தான் இயற்­கை­யெய்­தி­யி­ருந்தார். தலித்­களின் உரி­மைக்­கு­ர­லாக திகழ்ந்த தலைவர் இம்­மா­னுவேல் சேக­ரனும் 1957 இல் இதே தினத்தில் தான் மர­ணத்தை தழு­வி­யி­ருந்தார். இரு­பத்தி நான்கு மணி­நேர சேவையில் ஈடு­படும் ஜேர்­ம­னியின் முத­லா­வது தமிழ் வானொ­லி­யாக ஐரோப்­பியத் தமிழ் வானொலி 2006 இல் தொடங்­கப்­பட்­டதும் இதே தினத்தில் தான். வர­லாறு இத்­தி­னத்தில் பல சரி­தங்­களை சுமந்­துள்ள நிலை­யிலும் செப்­டெம்பர் 11 என்ற மறு­க­ணமே உள்­ளத்துள் தோன்றி கண்­முன்னே ஓரச்­சத்­து­ட­னான திகிலைக் கொண்­டு­வரும்,  சம்­பவம் தான் செப்­டெம்பர் 11 அமெ­ரிக்க இரட்டைக் கோபுர தாக்­குதல். 

உலக வர­லாற்றை உற்று நோக்­கும்­போது சில போது­களில் அது சில தனி மனி­தர்­களால் ஒரு புதிய போக்­கிற்­குட்­ப­டுத்­தப்­படும். இன்னும் சில சம்­ப­வங்­களும் அத்­த­கைய புதிய போக்­கினுள் உலக வர­லாற்றை இட்டுச் செல்லும். அத்­த­கைய சம்­ப­வங்கள் வர­லாற்றில் நிகழ்ந்­தே­று­கின்­ற­போது அவை ஏற்­ப­டுத்­து­கின்ற அதிர்­வ­லைகள் அச்­சம்­ப­வங்­க­ளோடு மாத்­தி­ர­மாக எல்­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­மில்லை. பதி­னேழு ஆண்­டுகள் கடந்தும் குறித்த தாக்­குதல் சம்­பவம் இவ்­வு­லக அரங்கில் ஏற்­ப­டுத்­திய அதிர்­வ­லை­களை தணிக்க முடி­ய­வில்லை என்­பதே யதார்த்தம். எனவே அந்த தாக்­கு­தலின் பின்­னணி அது ஏற்­ப­டுத்­திய அதிர்­வ­லை­க­ளி­லி­ருந்து புரிந்­து­கொள்­ளப்­பட வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­கி­றது.

2001 செப்­டெம்பர் 11, அப்­போது நேரம் காலை 8.46 மணி. உலக வர்த்­தக மையத்தின் வட கோபுரம் தாக்­கப்­ப­டு­கி­றது. தாக்­குதல் அதிர்ச்­சி­யி­லி­ருந்து அந்த சூழல் மீண்­டு­கூட இருக்­க­வில்லை 9.03 மணி­ய­ளவில் தென் கோபுரம் தாக்­கப்­ப­டு­கி­றது. 9.37 மணி­ய­ளவில் பெண்­டகன் தாக்­கப்­பட்ட செய்தி வெளி­யா­கி­றது. 10.03 மணி­ய­ளவில் ஷாங்ஸின் நிலப்­ப­கு­தியில் பிறி­தொரு விமானம் வீழ்­கி­றது. உலகே எதிர்­பார்த்­தி­ராத அமெ­ரிக்கா மீதான அத்­த­கைய தாக்­குதல் ஒரு குறு­கிய நேரத்தில் நிகழ்ந்­தேறி முடி­கி­றது.

2,973 பேர் அளவில் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழக்­கின்­றனர். சம்­பவ இடத்தில் 19,435 உடல் பாகங்கள் மீட்­கப்­ப­டு­கின்­றன. 1.4 மில்­லியன் தொன் எடை­யுள்ள குப்பை அங்­கி­ருந்து அகற்­றப்­ப­டு­கி­றது. உலக வர­லாற்றில் இடம்­பெற்ற கோர­மான ஒரு தாக்­குதல் அன்று நொடிப்­பொ­ழு­து­களுள் இடம்­பெற்று முடிந்­தது. தாக்­குதல் இடம்­பெற்று முடிந்­தாலும் அது ஏற்­ப­டுத்­திய தாக்கம் முடி­வற்று தொடர்­கி­றது.

உலகே ஆடிப்­போ­னது; நாமும் தாக்­கப்­ப­டு­வோமோ என்­கிற அச்சம் நாடு­க­ளி­லெல்லாம் குடி­யேற அமெ­ரிக்­காவின் பதி­ல­டியை உலகே எதிர்­பார்த்­தி­ருந்­தது. விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­யின; ஒரு தலைப்­பட்ச முடி­வுகள் தீர்க்­க­மா­யின; ஆவ­ணங்­களும் ஆதா­ரங்­களும் சோடிக்­கப்­பட்டு அமெ­ரிக்கா எதிர்­பார்த்­தி­ருந்த ஒரு திட்­டத்­துக்­கான அடிக்கல் நடப்­பட்­டது. எதிரி அறி­விக்­கப்­ப­டு­கிறார். தாக்­குதல் இடம்­பெற்ற சில நாட்­க­ளி­லேயே குறித்த தாக்­கு­த­லுக்­கான உரிமம் உஸாமா பின் லாதீனை தலை­மை­யாகக் கொண்ட அல்­கைதா மீது சுமத்­தப்­பட்­டது.

இங்­குதான் உலகும் அமெ­ரிக்க குடி­களும் அறி­வைக்­காட்­டிலும் உணர்­வுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்கத் துவங்­கி­யி­ருந்­தார்கள். அத்­த­கைய இழப்பை யாராலும் ஜீர­ணிக்க முடி­யாது. ஆனால் அதற்­காக ஓர் அப்­பாவி அழிக்­கப்­ப­டவும் முடி­யாது. தண்­டிப்­பதை விட முக்­கியம், தண்­டனை குற்­ற­வா­ளிக்­குத்தான் அளிக்­கப்படு­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது அவ­சியம். உணர்­வுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்த உலகு அடுத்­த­டுத்து அமெ­ரிக்க ஊட­கங்கள் வெளி­யிட்ட செய்­தி­களில் மட்டும் தங்கி ஒரு வில்­ல­னையும் உரு­வாக்கி அமெ­ரிக்கா போரையும் தொடங்­கி­விடத் துணை நிற்­கி­றது.

செப்­டெம்பர் 11 தாக்­கு­தலைத் தொடர்ந்தே சில கருத்­தா­டல்கள் உலக அரங்கில் மிகப் பிர­மாண்­ட­மான பேசு பொரு­ளாக்­கப்­பட்­டன. ”இஸ்­லா­மிய தீவி­ர­வாதம்", "இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்" போன்ற சொல்­லா­டல்­க­ளுக்கு ஊட­கங்­களும் அதிக கரி­சனை காட்டத் தொடங்­கின. அருகில் தாடி­யு­டனோ தொப்­பி­யு­டனோ ஒரு நபரைக் கண்டால் அவரும் அல்­கை­தாவைச் சேர்ந்­த­வ­ரா­கவோ, தீவி­ர­வா­தி­யா­கவோ முஸ்லிம் என்­கிற ஒரு கார­ணத்­திற்­காக அவர் நோக்­கப்­ப­டு­கின்ற ஒரு மாயை உலக அரங்கில் தோற்­று­விக்­கப்­பட்­டதில் செப்­டெம்பர் தாக்­கு­த­லுக்கு உள்ள இடத்தை எந்த ஒன்­றாலும் முந்­தி­விட முடி­யாது.

கலா­சா­ரங்­க­ளுக்­கி­டையே மோதல் இடம்­பெ­றப்­போ­வ­தாக சாமுவேல் ஹன்­டிங்டன் எழுதத் துவங்­கு­கிறார். திரைப்­ப­டங்­க­ளுக்­கெல்லாம் வில்­லன்­க­ளாக ‘கான்'கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றார்கள். எங்கோ நிகழும் குண்­டு­வெ­டிப்­பு­களும் தாக்­கு­தல்­க­ளிலும் சம்­பந்­த­மே­யில்­லாத அயல்­வீட்டு அப்­துல்­லா­வுக்­குள்ள தொடர்பை துப்­ப­றிய ஏமாந்த சமூகம் மனப்­பி­ரமை கொள்­கி­றது. அங்­கி­ருந்து தொடங்­கிய இத்­த­கைய காட்­சிப்­ப­டுத்­தல்கள் விஸ்­வ­ரூ­ப­மாக இப்­போது வரை உரு­வெ­டுக்கத் தவ­றி­ய­தில்லை.

செப்­டெம்பர் 11 தாக்­குதல் அமெ­ரிக்கா திரைப்­ப­டுத்­திய ஒரு படம். அதன் பின்னால் திரை­யா­னது மாபெரும் திரைக்­கதை என்­கின்ற உண்மை புலப்­பட எடுத்­துக்­கொண்ட நேர இடை­வே­ளைக்குள் அமெ­ரிக்கா தன் வள வேட்­டைக்­கான இர­க­சியத் திட்­டத்தை நிறை­வேற்றி முடித்­தி­ருந்­தது. ’நாயைக் கொல்ல வேண்­டு­மானால் அதற்கு வெறி பிடித்­தது என நம்ப வைக்­க­வேண்டும்' என்­றொரு ஆங்­கில பழ­மொழி கூறு­கி­றது. செப்­டெம்பர் 11 தாக்­குதல் விட­யத்தில் அது மெய்ப்­பிக்­கப்­பட்­டதே உண்மை.

நோம் சோம்ஸ்கி குறிப்­பி­டு­கின்­­ற­போது, “உலக வளங்­களின் மைய­மாக உள்ள மத்­தி­ய­கி­ழக்கின் ஆளு­கையை முதன்­மைப்­ப­டுத்­து­வது மாறி மாறி வரும் அமெ­ரிக்க அதி­கார பீடத்­துக்கு பொது­வான ஒன்று" என அடை­யாளப் படுத்­தி­யுள்ளார். 2003 இல் உலக எண்ணெய் தேவையின் 15% வீதத்தை பூர்த்தி செய்த ஈராக்கின் எண்ணெய் வளத்தை சூறை­யாட 2003 இல் அமெ­ரிக்கா அங்கு தொடங்­கிய போரும் ஈராக்­கிடம் இல்­லாத அணு­வா­யு­தத்தை  இருப்­ப­தாகக் கூறி ஐந்து இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பிஞ்சு உயிர்­களை சூறை­யாடி, அதன் ஆட்­சி­யாளர் சதாம் ஹுஸைனை முறை­யான குற்ற நிரூ­பித்­த­லு­மின்றி தூக்­கி­லிட்­டதும் இந்த திட்­ட­மிடல் வரி­சையில் இடம்­பெற்­ற­வையே.

ஆப்கான் வளங்­களை சூறை­யாட, அதன் அதி­கா­ரத்தை தன்­ன­கப்­ப­டுத்த அதன் மீது போர் தொடுக்க வேண்­டிய தேவை அமெ­ரிக்­கா­விற்கு இருந்­தது. உலக அரங்கில் ஒரு போர் நிகழ்­வதை உலகு ஏற்க ஒரு காரணம் தேவை­யாக இருந்­தது. அதற்­காக அமெ­ரிக்கா சோடித்த கதை செப்­டெம்பர் தாக்­கு­த­லாக திரைப்­ப­டுத்­தப்­பட்­டது. நய­மான பெயர்­க­ளுடன் நாச­கார பணி­களை முன்­னெ­டுப்­பதில் அமெ­ரிக்­கா­விற்கு நிகர் அமெ­ரிக்­காவே.


அமெ­ரிக்கா தன் எதி­ரி­களை அழிக்க சூட்டும் பெயர், “பயங்­க­ர­வா­த­த்துக்கு எதி­ரான போர்”,  உலக எண்ணெய் வளத்தை தன்­ன­கப்­ப­டுத்த “கலா­சா­ரங்­க­ளுக்­கி­டை­யான மோதல்",  நாடு­களின் சுதந்­திர ஒடுக்­கலை நிகழ்த்த “சுதந்­தி­ரத்தைப் பாது­காத்தல்", குடி­யேற்ற நாடு­களின் வளங்­களை சூறை­யாட அவர்­களை நாக­ரி­கப்­ப­டுத்தும் போர்­வையில் “வெள்­ளைக்­கா­ரனின் பொறுப்பு" என அமெ­ரிக்கா தன் ஒவ்­வொரு நாச­கார திட்­டத்­துக்­கான நாசூக்­கான பெயரை சூட்டிக் கொண்­டி­ருக்கும்.

அத்­த­கைய வரி­சையில் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் எனும் போர்­வையில் ஆப்­கானை தன்­ன­கப்­ப­டுத்த அமெ­ரிக்க மேற்­கொண்ட சூழ்ச்­சியை ஆதா­ர­பூர்­வ­மாக பல அமெ­ரிக்­கர்­களே நிறு­வி­யு­மி­ருந்­தனர். அமெ­ரிக்க உள்­நாட்டு ஆயுத பாது­காப்புத் துறையில் பணி­யாற்­றிய கேர்ட் செனென்பெல்ட் முன்­வைத்த ஆதா­ரத்­து­ட­னான வாக்கு மூலத்தில் தாக்­கு­த­லுக்கு முற்­கூட்­டியே உலக வர்த்­தக மையத்தில் இருந்த தங்கம், வெள்­ளி­யா­லான பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அகற்­றப்­பட்­டமை, 6.5 வினா­டி­களில் ஒரு 47 மாடிக்­கட்­டிடம் ஒரு இடத்தில் விமானம் தாக்க ஒரே நேரத்தில் முழு­வதும் தரை­மட்­ட­மா­னமை, அதற்­காக அனைத்து தளங்­க­ளிலும் அமெ­ரிக்க அரசே குண்டு வைத்­தி­ருந்­தமை தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

மேலும், டைலன் ஏவரி எனும் ஆய்வு மாணவன் முழு ஆதா­ரங்­க­ளுடன் வெளி­யிட்ட ”லூஸ் சேன்ஞ்ச்" எனும் ஆவ­ணப்­ப­டத்தில் பல கார­ணி­களைக் கொண்டு அது அமெ­ரிக்க சதியே என நிறு­வியே இருந்தார். எந்த வெப்­ப­நி­லை­யிலும் உரு­காத விமான கறுப்புப் பெட்டி எங்கும் இல்­லாமை, தாக்­கு­த­லுக்கு சில வாரங்­க­ளுக்கு முன்­னரே லார்ரி சில்­வெஸ்டைன் எனும் குறித்த கட்­ட­டங்­களை குத்­த­கைக்கு பெற்­றி­ருந்த தொழி­ல­திபர் தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்­கான காப்­பு­ரிமை பெற்­றி­ருந்­தமை, அர­ச­த­ரப்பு காட்­டிய ஆவ­ணங்­களில் காட்­டிய விமா­னத்தில் முப்­ப­தா­யிரம் அடி உய­ரத்­திற்கு மேல் இருந்து பேசிய சாத்­தி­யமே இல்­லாத தொலை­பேசி உரை­யாடல் என அனைத்து ஆவ­ணங்­க­ளு­டனும் குறித்த தாக்­குதல் அமெ­ரிக்க சதியே என நிறு­வி­யுள்ளார். இன்னும் ஏராளமான அறிக்கைகளும் அது புஷ் தலைமையிலான அரசின் சதியே என்பதை தோலுரித்தன.

அதிகார மோகம், வளச் சுரண்டல் என அமெரிக்கா கொண்ட முதலாளித்துவ வெறி செப்டெம்பர் 11 எனும் திரைப்படத்தை அரங்கேற்ற இந்த உலகு கொடுத்த விலைதான் மிக அதிகம். போலியான காரணத்தை உலகுக்கு காட்டி நயவஞ்கமாக அமெரிக்கா, ஆப்கான் மீது நிகழ்த்திய கோரத் தாக்குதலில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டார்கள்; வளங்கள் சூறையாடப்பட்டன. அன்று தொடங்கிய மேற்கு ஊடகங்கள் இன்றுவரை இஸ்லாமோ போபியா பிரசாரங்களில் ஈடுபட்டுத்தான் வருகின்றன. அமெரிக்க வெறியும் அடுத்து ஈராக்கில் 12 இலட்சம் கொலைகளாக லிபியா, பாலஸ்தீன், சிரியாவாக இடங்கள் மத்திய கிழக்கை சூறையாடிய வண்ணம் தான் உள்ளன. செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் எனும் பெயரில் அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம் திரைக்குப்பின் ஒரு திரைக்கதையுடன் தொடங்கிய வெறிகொண்ட வேட்டையின் கறுப்புத் துவக்கம்.
-Vidivelli

3 comments:

  1. The project for New American century planned by George Bush, Donald Rumsfeld, Dick Cheney etc... to attack WTC.

    யூத பயங்கரவாதிகளின் சதி. தாக்குதல் நடந்த நேரம் ஒரு யூதனும் அந்த கட்டிடத்தில் இருக்கவில்லை. அனைவரும் லீவு போட்டிருக்கிறார்கள் 11ம் திகதி செப்டம்பர் 2001

    ReplyDelete
  2. பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் உண்மையாகி விடாது . இது அல் கைடா தான் செய்தது என்பது உலகத்துக்கே தெரியும் .இப்படியான கட்டுரைகள் மூலம் எதை நிரூபிக்க முயல்கிறார்களோ தெரியவில்லை .இன்னு கொஞ்சம் நாட்களில் ISIS என்று யாருமே இல்லை என்று கூறினாலும் ஆர்ச்சரியம் இல்லை .

    ReplyDelete
  3. குமரா! உலகத்துக்கு அறிவித்தது யார்? அல் கைதா விற்கு ஆயுதம் வழங்கியது யார்? இற்கு ஆயுதம் வழங்கியது யார்? இற்கு ஆயுதம் வழங்கியது யார்? உலகிலே அதிகளவு ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர்கள் யார்? மற்ற நாடுகளின் வளங்களை சுரண்ட யுத்தம் செய்பவர்கள் யார்?
    அமெரிக்கா விற்கு வக்காலத்து வாங்குகிறார் தனி நாடு கிடைக்கும் என்ற நப்பாசையில், பாவம்.
    நீங்கள் செய்த அநியாயத்திட்கு மக்களின் சாபம் வந்தே தீரும். அனுபவிக்கதான் வேண்டும்.

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது, வல்லவன் வகுத்ததடா. குமரா! வருவதை எதிர்கொள்ளடா!

    ReplyDelete

Powered by Blogger.