Header Ads



பால் பக்கெட் விவகாரத்தில், நடந்தது என்ன..? விளக்குகிறார் முஜிபுர் ரஹ்மான்

பால் பக்கெட் பற்றிய செய்தியை ஊடகங்களுக்கு கூறும் போது இரவு 9.30 மணி இருக்கும் எனவும், தான் ஏதாவது ஒரு வகையில் அந்த நடவடிக்கையுடன் தொடர்பு என்றிருந்தால் ஊடகங்களிடம் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்திருக்க மாட்டேன் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐ.தே.க.யின் தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

விமல் வீரவங்ச எம்.பி. இந்த சம்பவத்துக்கு நான் தான் காரணம் எனக் கூறியுள்ளார். ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இந்த தகவலையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியேதான் நான் இந்த பால் பக்கெட் குடித்ததனாலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை ஊடகங்களிடம் குறிப்பிட்டேன்.

நான் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால், இதனைக் கூறியிருப்பேனா? என்பதை கொஞ்சம் கூட சிந்திக்கத் தெரியாத விமல் வீரவங்ச எம்.பி. தன்மீது பொய்யான குற்றச்சாட்டை இட்டுக் கட்டியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.   

1 comment:

  1. People had come to know that you were a liquor addict and your behavior on this day had proved it. Hon. Mahindananda had vouched and told that you were moving in the crowd under intoxication.Among the three suras in Quran with regard to liquor, two Suras supported liquor consumption.You are safe.

    ReplyDelete

Powered by Blogger.