Header Ads



மகிந்த ஆதரவு கட்சியே ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தலில் வெற்றிபெறும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் என எகனமிஸ்ட் சஞ்சிகை- Economist Intelligence Unit (EIU) -தெரிவித்துள்ளது .

எகனமிஸ்டின் இலங்கை குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

எகனமிஸ்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2020 நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளது நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனங்களை கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.

இந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கட்சி பெற்ற பெரும் வெற்றி கட்சிக்கான ஆதரவையும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருவதையும் புலப்படுத்தியுள்ளது .

ஆளும் கூட்டணிக்குள் காணப்படும் முறுகல்  நிலை மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக ஐக்கியதேசிய கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ மக்களின் நம்பிக்கையை மீளப்பெறமுடியாது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்,19வது திருத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதியால் தேர்தலில் போட்டியிடமுடியாது எனினும் பிரதமர் பதவி உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் நெருங்கியசகா ஒருவரோ அல்லது உறவினரோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ராஜபக்ச தரப்பு மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளது , கடந்த தேர்தலில் சிறிய வித்தியாசத்திலேயே சிறிசேன வெற்றிபெற்றதை கருத்தில் கொள்ளும்போது வாக்காளர் ஆதரவில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் ராஜபக்ச தரப்பு வேட்பாளர் வெற்றிபெறக்கூடும்.

அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில் நாங்கள் புதிய அரசமைப்பு முயற்சிகள் கவனத்தை இழக்கும் என நாங்கள் கருதுகின்றோம்,2020 வரை ஆட்சியிலிருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படும் என்பதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கவனத்தை இழக்கலாம்.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அரசமைப்பு சீர்திருத்தங்கள் நிறைவேற சாத்தியமில்லை என நாங்கள் கருதுகின்றோம்.

No comments

Powered by Blogger.