Header Ads



நிஸாம்தீன் கைது, திட்டமிட்ட சதியா..? ஜனாதிபதி சட்டத்தரணி கேள்வி

-ARA.Fareel-

இலங்கை முஸ்லிம் இளைஞர் கமர் நிஸாம்தீன் அவுஸ்திரேலியாவில் பங்கரவாத சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டங்கள் உள்ளனவா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.  குற்­றச்­செயல்கள்  தொடர்­பான  கடந்­த­கால ஆதாரங்கள்  எதுவும்  இல்­லாத  நிலையில்  அவர் ஏன் திடீ­ரென கைது செய்யப்பட்டார்? 

பயங்கரவாதம்  தொடர்­பான  ஆவணங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்தால் பொலிஸாரால் அவர் சில தினங்கள்  கண்­காணிக்கப்பட்டி­ருக்க வேண்டும். ஏன் இந்த அவ­சரம்? என ஜனா­தி­பதி  சட்டத்த­ரணி  எம்.எம்.சுஹைர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

கமர் நிஸாம்­தீனின்  கைது தொடர்பில் வெளியிட்­டுள்ள  அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவ் அறிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்­ள­தா­வது, 

அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் இலங்கை மாணவர்  கமர் நிஸாம்தீன் (25)  பயங்­க­ர­வாத  தாக்­கு­த­லுக்குத் திட்­ட­மிட்­டி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை  அவர்  பயிலும் பல்­க­லைக்­க­ழ­கத்தைச்  சேர்ந்த  அனை­வ­ரையும்  இலங்­கை­ய­ரையும்  அதிர்ச்­சி­யடைச் செய்­துள்­ளது.

நிஸாம்­தீனின்  அறையில்  இருந்த  அவ­ரது குறிப்புப்  புத்­த­க­மொன்­றினை  அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். அவர் கடந்த 30 ஆம் திகதி  பொலி­ஸாரால் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு அத்­தாட்­சி­யாக  இருந்­தது  அந்தக் குறிப்புப் புத்­த­கமே. அப்­புத்­த­கத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவின்  முன்னாள் பிர­தமர் மல்கொம் டேர்ன்புள் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜூலி பிசொப் ஆகி­யோரின் பெயர் விப­ரங்கள்  இருந்­த­தாகத்  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு சிட்னி  ஒபெரா ஹவுஸ், பொலிஸ் மற்றும் ரயில்  நிலை­யங்­களின்  விப­ரங்­களும்  இருந்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஆனால் குறிப்புப் புத்­த­கத்தில் என்ன எழு­தப்­பட்­டி­ருந்­தது எனும் விப­ரங்கள்  ஊட­கங்­க­ளுக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. நிஸாம்­தீ­னி­ட­மி­ருந்து குறிப்புப்  புத்­த­க­மொன்று கைப்­பற்­றப்­பட்­டி­ருந்தால் அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார்  உட­ன­டி­யாக அவரைக் கைது  செய்­தி­ருக்கக் கூடாது. அவர் கண்­கா­ணிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.  குறிப்புப் புத்­த­கத்தில் அடங்­கி­யுள்ள விப­ரங்­க­ளுக்கும் அவ­ருக்கும் தொடர்­புள்­ள­தாக கண்­கா­ணிப்பின் பின் உறு­திப்­ப­டுத்தப் பட்ட பின்பே  கைது செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும்.

அத்­தோடு அவ­ருக்கு  முன்பு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன்  தொடர்பு இருந்­துள்­ளதா? அவ­ருக்­கெ­தி­ராக முறைப்­பா­டுகள் இருந்­துள்­ள­னவா என்­ப­வற்­றையும் ஆராய்ந்து  பார்த்­ததன் பின்பே  கைது செய்­தி­ருக்க வேண்டும். 

கடந்த 10 வரு­டங்­க­ளுக்குள் ஏழு பிர­த­மர்கள்  அவுஸ்­தி­ரே­லி­யாவில்  மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.  இறு­தி­யாக பிர­தமர் மால்கொம் டர்ன்புல் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி அவ­ரது கட்­சியின் சகாக்­க­ளாலே அகற்­றப்­பட்­டி­ருக்­கிறார். இவ்­வா­றான  ஒரு நாட்டில்  இலங்கை மாணவர் ஒரு­வ­ரினால் பிர­தமர்  டர்ன்­புல்லைத் தாக்­கு­வ­தற்கு அர­சியல் அல்­லது சமய கார­ணங்கள் இருந்­தி­ருக்கும் என நம்ப முடி­யாது. முன்னாள் பிர­த­ம­ரையோ முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரையோ அவர்­க­ளது  பத­விக்­கா­லத்தில் பயங்­கரவாதிகள் தாக்­குதல்  நடாத்­து­வ­தற்கு  திட்­ட­மிட்­டி­ருந்­த­தற்­கான எந்தச் சான்­று­களும் இல்லை.

நிஸாம்தீன்  மிகவும்  புத்திக்  கூர்­மை­யுள்­ளவர். ஒரு பி.எச்.டி.மாணவர்.  அவர் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ரென்றால் அது தொடர்­பான குறிப்புப்  புத்­த­கங்­களை எவ்­வாறு கவ­ன­யீ­ன­மாக அவர் நண்­பர்­க­ளுடன் தங்­கி­யி­ருக்கும் பல்­க­லைக்­க­ழக அறையில் வெளிப்­ப­டை­யாக வைத்­தி­ருக்க முடியும்.  ஏனை­ய­வர்கள் இல­குவில்  அறி­யு­மாறு வைத்­தி­ருக்க  முடி­யா­தல்­லவா? 

நிஸாம்­தீனின்  சகோ­தரர் இது ஒரு சோடிக்­கப்­பட்ட குற்றச் சாட்­டென்றும் 6 வரு­டங்­க­ளாக அந்­ந­கரில்  இருக்கும் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயிலும்  அவர்  நிச்­ச­ய­மாக  இவ்­வா­றான  செயலில் ஈடு­பட்­டி­ருக்க மாட்டார் என தனது முக­நூலில்  பதிவு செய்­துள்ளார்.

இவர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தற்குத் தயா­ரா­ன­தாக  எது­வித தக­வல்­களும் இல்லை.  அவர் இதற்கு முன்பு அவ்­வா­றான  நட­வ­டிக்­கையில் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக எவ்­வித  குற்­றச்­சாட்­டு­க­ளு­மில்லை.  ஆதா­ரங்­க­ளு­மில்லை.  இவரை ஏன்  பொலிஸார் கைது  செய்­வ­தற்கு  அவ­ச­ரப்­பட்­டனர்?

இலங்­கையில் கடந்த  30 ஆம் திகதி ஆரம்­ப­மான  இருநாள் கருத்­த­ரங்கில் ஒரு தாக்­கத்தை  ஏற்­ப­டுத்தும் நோக்கில் இவ­ரைக் ­கைது செய்ய கார­ண­மாக  இருந்த சக்­திகள் பொலி­ஸாரை ஊக்­கு­வித்­த­னவா என்ற சந்­தேகம்  எழு­கின்­றது.  இக்­க­ருத்­த­ரங்கில் இங்கு  குறிப்­பி­டப்­படும் விடயங்கள்  தொடர்பாக  இரண்டு ஆய்வுக் கட்டுரைகள்  சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.  ஐக்கிய அமெரிக்க  பசுபிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த  மேஜர் ஜெனரல் ரொஜர்  ஜே நொபட்டும்,  இஸ்ரேலின் அடலோ கொன்சல்டிங் நிறுவனத்தின்  முகாமைத்துவ பணிப்பாளர் (இளைப்பாரிய லெப்டின் ஜெனரல்) ஒரிட்  அடலோவும் இரு கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தனர். இக்கட்டுரைகள்  சதியின்  பின்னணியிலே  சமர்ப்பிக்கப் பட்டிருக்கலாம்.  நிஸாம்தீன் கைது  விவகாரம் பாதுகாப்பு கருத்தரங்கு முடிவுற்றதன் பின்பே  ஊடகங்களில்  வெளியாகின என்றும் சட்டத்தரணி சுஹைர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அவுஸ்திரேலியாவின் சட்டம் வேற இலங்கையின் சட்டம் வேற அங்கு நல்ல கருத்து பேச்சு சுதந்திரம் இருக்கின்றன அனைவருக்கும் மேலும் போலீசும் நேர்மையாக தான் எப்போதும் நடந்துகொள்வார்கள் அப்படியாயின் கைது செய்யப்பட்டவரின் உறவினனர்கள் அல்லது அவரின் நண்பர்கள் ஏன் இது வரைக்கும் அங்குள்ள நீதிமன்றத்தையோ அல்லது போலீசிலோ பேசி உண்மையான விவகாரம் அறியதரப்படவில்லை?

    ReplyDelete
  2. Muslim students who study in abroad must be very careful as there are conspiracies against bright Muslim students.These conspiracies are be held so many ways.The sudden death of MR.Imtiyas Bakir's son too one of them.Other way is honey trap that beautiful girls are used.these girls most of them are christian.This is world wide.

    In Srilanka Dr.AZiz Mubarak.Dr Furkhan and so many intelligent wealthy Muslims are trapped(married)Christian ladies.Imran Khan, Dr.Abdul Qadeer Khan father of Pakistan atomic Bomb,and so many sportsmen are trapped(married) Christian ladies.

    Now two terrorist organization Tamil terrorist and BBS are doing all the conspiracies against Muslims with the backing internatyional terrorist.They now hand in glove against Muslims.They are well coordinated by another terrorist country Norway.So Muslims specially intelligent students must be very care full not to be trapped any of these conspiracies.

    ReplyDelete

Powered by Blogger.