Header Ads



பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக, ஆரிப் ஆல்வி தேர்வு

பாகிஸ்தான் ஜனாதிபதி உசேனின் பதவிக்காலம் வருகிற 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த டாக்டர் ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார்.

மொத்தம் பதிவான 430 ஓட்டுகளில் அவர் 212 ஓட்டுகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) வேட்பாளர் பாசில் உர் ரெஹ்மான் 131 ஓட்டுகளும், பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் அல்தாஜ் அஹ்சான் 81 ஓட்டுகளும் பெற்றனர். 6 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன. பல் மருத்துவரான ஆரிப் ஆல்விக்கு வயது 69. பி.டி.ஐ. கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான இவர், கட்சியின் செகரட்டரி ஜெனரலாக 8 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். கடந்த ஜூலை 25-ந் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

No comments

Powered by Blogger.