September 22, 2018

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள், ரூபா வீழ்ச்ச்சியை நிறுத்திக்காட்டுகிறோம் - மகிந்த


இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தில் சரியான தலைமைத்துவம் இல்லாததே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு பிரதான காரணம்.

நாங்கள் ஆட்சியை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாய் 40 சதமாக இருந்தது.

அதற்போது அதன் பெறுமதி 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிழப்பை தடுக்க முடியாது போனால் அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு உலகின் அனைத்து நாடுகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

அது இந்தியாவா? அமெரிக்காவா என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. நாட்டில் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இருக்கும் முதலீட்டாளர்களும் இலங்கையை கைவிட்டு செல்லும் நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம். எங்களால் வெற்றிபெற முடியுமென நாங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

6 கருத்துரைகள்:

Mr. Mahinda Please explain us. What will be your position if we hand over the country again to you.
Mr. Mahinday if you return back the Stolen money of LTTE.. also we can come of this problem.

நல்லதொரு போடு. ரூபா வீழ்ச்சியை நிறுத்திக்காட்ட ஒரு அரசாங்கம். அவருடைய காலத்தில் கடன்களை எப்படி எடுத்தார் என்பதும் மக்களுடைய பணம் எவ்வாறு காடன் கள்ளன்களுக்கு எவ்வாறு வாரி இறைக்கப்பட்டது என்பதும் பெரிய கள்ளனுடன் இருந்தவர்களுக்கு குறிப்பாகவும் ஏனைய அனைவரும் நன்றாகவும் அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பொழுது வழமையான பொய்யைப் புளுகி மக்கள் அதற்கு ஏமாந்து விடுவார்கள் என மட்டும் நினைக்காதே.

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்;
தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்;

ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.

(அல்குர்ஆன் : 10:54)
www.tamililquran.com

ரூபாய் வீழ்ச்சி பற்றி மகிந்த ஐயா என்ன சொல்கிறார் என்று புரிந்ததா மக்களே?

ஆட்சியை அவரிடம் கொடுத்தால் ரூபாய் எல்லாம் அவரோட குடும்பத்து சட்டைப் பைகளில் விழுந்து விடும். நாட்டு மக்கள் கவலை படவே தேவையில்லை என்று சொல்லி இருக்கிறார்

இலங்கையின் ரூபாய் பெறுமதியும், பொருளாதாரமும் தொடர்ந்து விழும். இதுவும் இல்ங்கைக்குதேவைதான். ஏனென்றால், இதற்கு காரணம் அரசாங்கம் தான்.

பெரும் தொகையான அமைச்சர்கள். அதில் 90% தகுதியற்றவர்கள், முட்டாள்கள்.

மாகாண அமைச்சர்கள் வேறு இருப்பதால், மத்திய அரசுக்கு திறமை வாய்ந்த 5 அல்லது 6 அமைச்சர்கள் போதும்.

திறமை,கல்விதகமையடையவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டால், தேதியபட்டியல் மூலம் அப்படியானவர்களை உள்ளே கொண்டுவரமுடியும்.

நீ எடுத்த கடனை 2025குள் அடைக்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால் தான் ரூபாவின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டே செல்கின்றது. அடுத்தமுறை நீ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவததே சந்தேகம் தான். நீ அடித்த கொள்ளை மற்றும் கடனால் நாட்டில் இப்பொழுது எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் நாட்டு பொருளாதாரத்தை சீனாவுக்கு வாரி வழங்கப்பட்டு வருகின்றது.

Post a comment