Header Ads



எல்லையை அடையாளமாககொண்டு, வரலாற்றைப் பாதுகாக்கும் 'அலுப் பொத்த சியாறம்.'

-MUFIZAL ABOOBUCKER
பேராதனைப் பல்கலைக்கழகம்-

"மொனராகல "மாவட்டத்தில் , மொன்றாகல தேர்தல் தொகுதியில் வடல் கும்பற பிரதேசத்தில்  உள்ள ஒரே ஒரு முஸ்லிம் கிராமமான " அலுப் பொத்த " கிராமத்தில் உள்ள  ஷெய்கு அலி முஹம்மத் காதிர் வலியுள்ளாஹ்  அவர்களின்  சியாறம், புராதன  இலங்கை வரலாற்றிலும்,  அவ் ஊரின் இன்றைய  இருப்பிலும் , பெறும் முக்கியத்துவம் பற்றிய பதிவே இதுவாகும்,...

அலுப்பொத்த,அறிமுகம்...

சிங்கள  இலக்கிய கவிமரபின் படி, ஆலோக்க, என்பதில் உள்ள "வெளிச்சம் " என்ற கருத்தைக் கொண்டதாக இவ் ஊரில் உள்ள "அலு " என்ற விடயம் வந்திருக்கலாம் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். "அலு"விகார, என்பதன் அர்த்தமும் இவ்வாறானதே, ஆனாலும், அலுப் பத்தல, அலுப் பொத், போன்றவற்றில் இருந்தும் இப் பெயர் வந்திருக்கக் கூடும், என்ற தகவல்களும் உண்டு, 

வரலாற்று,முக்கியத்துவம், 

இலங்கை மன்னனான பராக்கிரம பாகு ,அல்லது "மகாபரகும்பா" மன்னன், இப்பிரதேசத்தில் இன்று சிங்களவர்கள் வாழும் பகுதியில்   பிறந்ததாக நம்ப்ப்படுகின்றது, , இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படும்  வெளிநாட்டு மேலாதிக்க வாதிகளுக்கு எதிரான 1818 புரட்சி இடம் பெற்ற "வெல்லஸ்ஸ விமுக்தி சடன" ஆரம்பித்த பிரதேசம் இதுவே ஆகும், 

இங்கு வெள்ளைக்கார பிரபுக்களின்  கோட்டை இருந்ததன் காரணமாக இன்றும் இப்பிரதேசம் "அலுபொத்த கோட்டே" என அழைக்கப்படுகின்றது, புராதன றுகுண ராச்சியத்தின் கீழ் இருந்த ஒரு பகுதியாகவும் இது உள்ளது,  இலங்கை வரலாற்றில் மிகப்  புராதன முஸ்லிம்  ஊர்களில் ஒன்றாக இவ் ஊரும், பிரதேசமும் கணிக்கப்படுகின்றன. 

முஸ்லிம் புராதனத்  தொடர்பு, 

இப்பிரதேசம் இலங்கை முஸ்லிம்களிள் வியாபாரத்திற்கான இதயமாக இருந்திருக்கின்றது, அறபுக்களினதும், வியாபாரிகளினதும், " தவளம" முறைக்கான மாடுகளை பெறுவதற்கும், இப்பிரதேசத்தில் பிரபலமான, மிளகு, கரும்பு, தானியங்கள் போன்றவற்றை, இன்றைய  தென் மாகாணத்தின்  மாத்தறை,  திஸ்ஸ மகராம,   கிழக்கு. மாகாணத்தின் மட்டக்களப்பு போன்ற பிரதேசத்திற்கு , முஸ்லிம் வியாபாரிகள்  கொண்டு செல்வதற்கான, வியாபாரத் தளமாகவும் இப்பிரதேசம் இருந்து வந்திருக்கின்றது மட்டுமல்ல, தீவின் ஏனைய பிரதேசங்களில் இருந்து ,இப்பிரதேசத்திற்கான பொருட்களைக் கொண்டு வரப் பயன்படுத்திய பாதையில், பிற்காலத்தில் பல முஸ்லிம் கிராமங்கள் உருவாகியதற்கும் இப்பிரதேசம் தொடர்பே காரணமாக இருந்திருக்கின்றது...

மட்டுமல்ல, பல பிரபலமான முஸ்லிம் குடும்பங்களின் மூதாதையினர் இப்பிரதேசத்திலேயே வாழ்ந்திருக்கின்றனர். இவ்ஊர்கள் கிட்டத்தட்ட 1000 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றையும், புராதனத்தையும் கொண்டுள்ளன, 

கவனயீனமும் , இழப்பும், 

இலங்கை வரலாற்றில் "181 8 வெல்லஸ்ஸ எழுச்சியின்" 200 ஆவது ஆண்டு நிறைவுக்  கொண்டாட்டங்கள்  இன்று,201 8 ல்  நாட்டின் பல பகுதிகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இவ்வேளை, .....

இப்பிரதேசத்து முஸ்லிம்கள் ,தமது புராதன 900 வருடங்களுக்கு மேற்பட்ட பள்ளிவாசலையும் , அதன் புராதனத்தையும் , தமது. கைகளாலேயே உடைத்து, புதிய பள்ளி கட்டி,  கைசேதப்பட்டிருக்கின்றனர்..  வரலாற்றுப்  பொக்கிசமான அப்பள்ளிவாசலின் பெறுமானம்,  உணரப்படாது  அழிந்து, போயுள்ளது, மட்டுமல்ல , அதனால் இவ்  ஊரின் பழைமையை நிறுவுவதற்கான முக்கிய  ஆதரங்கள் எதுவுமின்றி இருக்கின்றது, .

இன்றைய இருப்புக்கான ஆதாரம், 

  புராதன இலங்கை வரலாற்றில. " 'ஹஜ்ஜு முஹாந்திரம்' என்ற முஸ்லிம் பிரபுவின்   கீழ் பராமரிக்க ப்பட்ட  ஒரு பிரதேசத்தில் இன்று வரலாற்று ஆதாரமாக இருப்பது, "அலுப் மொத்த சியாறமும்,   அங்குள்ள  கந்தூரி மண்டபத்தின்  இடிபாடுகள் மட்டுமே ஆகும்,

ஷெய்கு முஹம்மது.  வலியுள்ளாஹ்.

"மனாறுல் ஹுதா' பள்ளிவாசலில் உள்ள சியாறத்தில் அடங்கப்பட்டிருக்கும், ஷெய்கு அலி முஹம்மத் வலி அவர்கள்  பாரசீகத்தில் இருந்து புராதன  கதிர்காம பாதையினூடாக  ஆதம் மலை நோக்கி  தமது புனித பயணத்தை மேற்கொண்ட வேளை இங்கு  வபாத்தாகி இருக்கின்றார்கள் .இவர் பாரசீக அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவராகவும் இருந்திருக்கலாம், என்று நம்ப்ப் படுகின்றது, 

சியாறத்தின் இருப்பியல்,   முக்கியத்துவம், 

இச்சியாறம் ,  இன உறவுக்கான  ஒரு முக்கிய இடமாக இருந்திருக்கின்றது, மிகப் புராதன கந்தூரியை அனைத்து இன மக்களும் இணைந்து, நீண்ட காலமாக மேற்கொண்டு வந்துள்ளனர்,  இஙகுள்ள   கந்தூரி மண்டபத்தின் இடிபாடுகள், அதன் புராதனத்தை  கூறுகின்றன, 

மட்டுமல்ல, " சிங்கள- முஸ்லிம் வாழ்விட நில எல்லைக்கான ஓர் எல்லைக்கல்லாகவும்,  ஊரைப் பாதுகாக்கும் நிலப்பரப்பாகவும், இன்றும்,   இச்சியாறமே காணப்படுகின்றது, 1990 களில் இங்கு இடம்பெற்று வந்த "கந்தூரி நிகழ்வு நிறுத்தப்பட்டமை, இன உறவில் ஏற்பட்ட விரிசலுக்கான ஓர் விடயமாக இரு இன சமூக ஆர்வலர்களாலும்  கருதப்படுகின்றது,  

கட்டாயம் செய்ய வேண்டிய இன்றைய  பணி, 

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தில் முக்கியமான இப்பிரதேசத்தின்  இது போன்ற  வரலாற்றுப் பொக்கிசங்கள், " தூய்மை வாத குறுகிய சிந்தனையாளர்களால் " அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் இவ் அலுப் பொத்த சியாறமும், அதன் சியாறப் பண்பாடும்  எதிர் காலத்தில், அழிக்கப்படுமாயின்
அதனோடு சேர்ந்து இல்லாமலாகப் போவது,  , எமது பல நூறு வருட வரலாறும் தான்,......

எனவே இவ்வாறான  எமது, வரலாற்று இருப்புக்கான முக்கிய இடங்களைப் பாதுகாப்பதோடு, மட்டுமல்லாது, , அவை தொடர்பான, ஆய்வுகளையும், , தகவல்களையும் வெளி உலகிற்கு கொண்டு வந்து,  இவ் இலங்கை நாட்டில் எம் இருப்பினைப்  பாதுகாக்க  வேண்டிய தேவை எம் அனைவரதும், இன்றைய கட்டாய  கடமையாகும்.......

2 comments:

  1. மிக முக்கியமான பார்வையும் பதிவும். நன்றி Mufizal Aboobuker

    ReplyDelete

Powered by Blogger.