Header Ads



நிசாம்டீன் தீவிரவாதியா..?

-சிவராஜா ராமசாமி - சுடர்ஒளி பிரதம ஆசிரியர்)

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் - 25 வயதான கமர் நிசாம்டீன் குறித்து ஒரு பதிவை இட விரும்புகிறேன்...

நிசாம்டீனிடமிருந்து கைப்பற்ற நாட்குறிப்பில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் இருந்ததாகவும் ...

மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அவர் திட்டம் தீட்டியதாகவும் ...

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், பொலிஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் .....

சந்தேகிக்கப்படுகிறது ...

மாறாக அவர் மீது குற்றங்கள்- இந்த சந்தேகங்கள் நிரூபிக்கப்படவில்லை...

இறுதியில் இப்படியும் சொல்கின்றன ஊடகங்கள்..

“நிசாம்டீனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள பயங்கரமான விடயங்களை நிறைவேற்றும் திறன் அவரிடம் உள்ளதா என ஆராய்வதற்காக உளவியலாளர்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்”...

நிஸாம்தீனின் கல்வி மற்றும் குடும்ப பின்னணியை பார்த்தால் நல்ல திறமையான மாணவன்... தீய செயல்களுக்கு துணை போகாதவர் என்று அவரது நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன...

எது எப்படியாயினும் அவர் தொடர்பில் ஒரு நியாயமான விசாரணை முடியும்வரை அவரை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்க முயலும் சர்வதேச ஊடகங்கள் குறித்து கவலையாக இருக்கிறது...

அவர் முஸ்லிம் என்பதற்காகவா எடுத்த கையோடு சீல் குத்தப்பட்டார் என்று கேட்க தோன்றுகிறது...

இவ்வளவு தொழிநுட்பம் வளர்ந்த காலத்தில் அவர் நாட்குறிப்பில் எல்லாம் எழுதிவைத்திருந்தார் என்று சொல்வதும் சற்று விநோதமாகத்தான் இருக்கிறது...

எப்படியோ சூடான செய்திகளை வழங்குவதாக நினைத்து பரபரப்பான தகவல்களை வெளியிடுவது... பின்னர் உண்மை தெரிந்த பின் கண்டும் காணாமல் போவது சர்வதேச ஊடகங்களுக்கு கை வந்த கலை ..

பொலிஸ் விசாரணைகள் முடியட்டும்... அதுவரை பொறுத்திருங்களேன்...

அதற்குள் ஏன் அவரை தீவிரவாதியாக்குகிறீர்கள் ?

1 comment:

  1. எது எப்படியோ கொஞ்சம் சமகாலநிலைமைகளை கவனமாக கொண்டு தானே முஸ்லிம்கள் நாங்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.முஸ்லிம்கள் எங்கே பிழை தவறு செய்கின்றன என்று எதிரிகள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள் அதட்கு அமைய நாங்களும் கொஞ்சம் புத்திசாலியாக நடந்துகொள்ள வேண்டும் தானே!
    முஸ்லீம் என்பவன் கொலையும் செய்யமாட்டான் அப்படியான தீய எண்ணமும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.