September 30, 2018

புத்தளத்தை பாதுகாப்போம்...!

நிலவளம் , நீர்வளம் , கடல் வளம் , காட்டுவளம் கொணடு பூத்துக்குழுங்கும் புனித பூமியாகும்  இந்த எழில் மிகுமாவட்டம்        கடந்த காலங்களாக இயற்கைச்சூழல் பாரிய இரசாயன பௌதீக மாற்றங்களுக்கு  ஆளாகி இயற்கையான சூற்றுச்சூழல் பாரியளவில் மாசாவதுடன்    புதிய வகையான பிரச்சனைகளுக்கும் நோய்களுக்கும் முகம்கொண்டுவருவது கண்கூடாக காணலாம்.  

இந்த வகையில்     புதியதோர் பெளதீக இரசாயன மாற்றல் பிரச்சினைக்கு முகங்கொள்ள வேண்டிய சூழல் எமது மாவட்டம் ஆளாக உள்ளது . நாம்னோக்கிவரும்   இயற்கை வளங்களின்  இருப்புக்ளின் நிலை வருமாறு                                

1 )      வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்கள் எண்பதாயிரமக்கள் வந்தார்கள். இவ்வாறு இங்கு வந்தவர்களை  தன்னை தியாகம் செய்து வாழவைத்து உதவியளித்து உயிர்கொடுத்து வளப்பகிர்வை வளங்கிய புனித புன்னியதளம்.            

 2 )  நாட்டின்      கைத்தொழிலுக்கு தன்னுயிரை தாரைவார்த்து சீமெந்து தொழிற்சாலை அமைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு  அர்ப்பணித்து தனது வழங்களை  தொடர்ந்தும்  இழந்து வரும்நிலை அவலநிலை                                                                       

3)  சுற்றுச்சூழல் கடல்வாழ் உயிரினங்களை அழித்து விவசாய நிலத்தின் வளத்தை வெருட்சியாக்கி வெப்பபூமியாக்கி நாட்டின் ஒவ்வொருகுடும்பமும் மின்னொளியாக பிரகாசிக்க அனல்மின்சாரம் அமைக்க இடம்கொடுத்து புத்தள இயற்கைவளம் அழிவடையும் நிலை                                                     

4)  உணவை சுவையூட்ட வாழ்வாதார பூமியை வானம்பார்க்க உப்பளத்தளம் அமைக்கப்பட்டுள்ளதால்  பௌதீக  வளம்வெப்பூமியாக மாறிவரும்சூழல்                  இவ்வாறாக புத்தளம் தனது இயற்கை வளங்களை தொடர்ந்து இழந்து பௌதீகச்சூழல் பாரிய அளவில் பாதிப்படைந்து வரும் இக்காலகட்டத்தில் தற்போது ஏனையமாவட்டத்தின் கழிவுகளைகொண்டுவந்து புத்தளத்தில் போடப்படும் திட்டமானது பாரியளவிலான அநீதி இழைப்பாகும். 

எனவே இவ்வாறாக    இப்பொழுது முழு இலங்கை திருநாட்டின் குப்பைகளைக் கொட்டும் தளமாக புத்தளபூமியை மாற்றமுயலும் முயற்சியை கைவிடுமாறு நல்லாட்சி அரசுக்கு தெளிவுபடுத்தும் முகமாக பாரியவிலான எதிரப்புப் போராட்டத்தில் மூலம் இச்செயற்பாடுகளுக்கு  சிவில் சமூகம்சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.                 

இலங்கை வாழ்சிவில் சமூக உறவுகளே! நண்பர்களே! உறவுகளே! அரசியல் வாதிகளே! மனித உரிமைவாதிகளே! ஆளும்வர்க்தத்தினரே!            எதிர்த்தரப்பு அரசியல் வாதிகளே! எமக்கான நீதியைப்பெற்றுத் தாருங்கள் சிவில் சமூக அமைப்புக்களே !                    எங்களது நிலைமைகள் தொடர்பாக நீதி கிடைத்திட செய்யுங்கள். 

நல்லாட்சி அரசே எங்களுக்கு நீதி வேண்டும்!    நியாயம் வேண்டும்.!         எமது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்!            என வேண்டி இந்த குப்பைக்கு எதிரான பகிரங்கமான கண்டன போராட்டத்தில்                    புத்தள வாழ் யாழ் கிளிநொச்சிவெளியேற்றப்பட்ட சிவில் சமூக சம்மேளனம் சார்பாக பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்திகிறோம்.       

புத்தொழில் மிக்க பிரதேசமாக புததளம் விளங்குவதற்கான சகலவழிகளிலும் எமது சிவில் சம்மேளனம் சார்பாக நல்லாட்சி அரசிடம்  வேண்டுகோள் விடுக்கின்றோம். புத்தள பூமியை நீர்வளம் நிலவளம் கடல்வளம் என்பன வற்றிலிருந்நது பாதுகாக்க வேண்டுகிறோம்.                                                                         

எனவே புத்தள மாவட்டத்தை ஏனைய மாவட்டத்தைப்போல் அல்லாது நல்லாட்சி அரசால் விஷேடமாக கணிக்கப்பட்டு ஏனைய மாவட்டத்தைவிட இருமடங்கு முன்னெடுப்புக்களை  செய்ய வேண்டுமென்பதையும் வேண்டிக்கொள்கின்றோம்.                                                                         

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்டசிவில் சமூக சம்மேளனம்    

தலைவர்        அப்துல் மலீ்க் மௌலவி  

செயலாளர்   ஹஸன் பைறுஸ்

2 கருத்துரைகள்:

better to put at Hammbantota as it is off area and do not have much people. it is almost a dessert. the good governance can use it at least for this purpose.

It should be done in different places ..
Why not Colombo had a good system to do this ..
There are many areas to dump rubbish ..
Take some into South..
Take some into central province..
Take some other areas of the country .
Disperse the rubbish disposal.
Bring modern technology to recycle rubbish

Post a comment