Header Ads



வீர­வன்­சவின் தலைக்கு ஊசி­யேற்ற வேண்டும், அப்­போதே அவ­ரது மூளை வேலை செய்யும்.

விஷ ஊசி ஏற்­றப்­பட்ட பால் பக்­கட்­டு­களை நான் கூட்டு எதி­ர­ணியின் பேர­ணி­யின்­போது விநி­யோ­கித்தேன் என்­பது அடிப்­ப­டை­யற்­றவை. இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பேர­ணிக்கு எவ்­வித இடை­யூறும் செய்­யக்­கூ­டாது என்றே ஐ.தே.கட்சி தீர்­மா­னித்­தி­ருந்­தது.

எனக்­கெ­தி­ராகப் பொய் குற்­றச்­சாட்டு சுமத்தி எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமல் வீர­வன்ச மற்றும் செஹான் சேன­சிங்க ஆகி­யோ­ருக்கு தண்­டனைச் சட்­டக்­கோவை 208 ஆம் ஷரத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்­ய­வுள்ளேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

நேற்று சிறிகொத்­தாவில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;

பேர­ணிக்குப் பிரச்­சினை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்றால் நாம் பால் பக்­கட்­டுகள் மூலம் செய்யத் தேவை­யில்லை. வேறு வகை­களில் தடை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். அவர்­க­ளது குற்­றச்­சாட்­டு­களில் உள்ள முரண்­பா­டுகள், இக்­குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை என்­பதை நிரூ­பிக்­கின்­றன. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஷ ஊசி­யேற்­றிய பால் பக்­கட்­டுகள் என்னால் மாளி­கா­வத்­தையில் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாகக் கூறி­யுள்ளார். ஆனால் பொலிஸில் ஒருவர் செய்த முறைப்­பாட்டில் கொம்­பனித் தெருவில் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறி­யுள்ளார். இரு­வே­றான முறைப்­பா­டுகள் இவை.

பால் பக்கட் அருந்தி நோயுற்ற ஒருவர் வைத்­தி­ய­சா­லைக்கு இரவு 8 மணிக்கே சென்­றுள்ளார். 39 பேர் சிகிச்சைப் பெற்­றுள்­ளனர். 3 மணிக்கு பால் பக்கட் விநி­யோ­கித்­த­தாகக் குற்றம் சுமத்­தி­யுள்­ளார்கள். ஆனால் இரவு 8 மணி­வரை அவர்கள் பால் பக்­கட்டை கையில் வைத்­தி­ருந்­துள்­ளார்கள். பாலை குடித்­து­விட்டு பக்­கட்டை வீசி­யி­ருக்­க­வில்லை. இதி­லி­ருந்து குற்­றச்­சாட்டு அடிப்­ப­டை­யற்­ற­வை­யாகும்.

தவ­றான செய்­தி­களைப் பரப்பும் விமல் வீர­வன்­சவின் தலைக்கே ஊசி­யேற்ற வேண்டும். அப்­போதே அவ­ரது மூளை வேலை செய்யும்.

எவ­ரது வீட்டில் காலா­வ­தி­யான வயா­கரா கொடுத்து இளைஞர் இறந்தார் என்­பதை அனை­வரும் அறி­வார்கள். அப்­ப­டி­யா­ன­வர்கள் நாம் பால் பக்கட் வழங்­கி­ய­தாகக் கூறு­கி­றார்கள்.

பேரணி குறித்து நாமும் பய­முற்­றி­ருந்தோம். ஆனால் அனைத்தும் புஸ்­வா­ன­மா­கி­விட்­டது. அரபு வசந்தம் என்­றார்கள். ஆனால் பேரணி அரபு வசந்­த­மல்ல. அரக்கு (சாராயம்) வசந்தமாகும்.

நான் பல வைத்தியர்களிடம் பால் பக்கட் விவகாரம் தொடர்பில் வினவினேன். பால் பக்கட்டுகளுக்கு விஷ ஊசி ஏற்றுவது பற்றி முதன் முதல் இப்போதே அவர்கள் கேள்விப்பட்டதாகக் கூறினார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.