Header Ads



முஸ்லிம் சட்டம் கலிமாவை மொழிந்தவர்களுக்குரியது, எதிர்ப்பவர்கள் வரலாற்றுத துரோகிகள்

"முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்கள்" மேற்படி விடயம் சம்பந்தமாக 2009ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்ட போது அக்குழுவில் முஸ்லிம் சட்டத்தரணிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதால் இவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே அறிக்கை தயாரிப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதனால் யாரும் அதைப்பற்றி அலட்டிக் காள்ளவில்லை. தெரிவுக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட போது பலரும் விழிப்படைந்தனர். முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியார் சட்டம் இருக்கிறது என்பதை அப்போதுதான் சிலர் தெரிந்தும் கொண்டனர்.

உலமாக்களில் பலரும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஷரீஆவுக்கு எந்தளவு ஏற்புடையது என்பதனையே பார்த்தனர். வேறும் சிலர் ஷரீஆ எப்படி இருப்பினும் நடைமுறைக்கு ஏற்றது எது என்று பார்த்தனர். இவ்வாறு பல அவதானங்களைக் கொண்டோர் பிறர் பற்றி வசை பாடினர், விமர்சித்தனர், பலர் உலமாக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் களமாகவே மேற்படி பிரச்சினையை வைத்துக் கொண்டனர். 

அதேநேரம் சிலர் முன்வைத்த ஆக்கபூர்வமான சமயோசிதமான கருத்துக்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. சிலர் தமது திறமைகளையும், மொழியையும், சமயத்தையும் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை நினைவூட்ட வேண்டியதில்லை. எது எப்படியோ இரண்டு அறிக்கைகளுக்கும் இடையில் காணப்பட்ட திருமண வயதெல்லை 18 என முடிவு செய்யப்பட்டுள்ளது. அது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது கலந்துரையாடலின் முடிவாகவும் விளங்கக் கிடைத்தது.

இந்த விடயம் இரண்டு அறிக்கையிலும் உள்ளது. பிரச்சினை யாதெனில் எமது மார்க்கத்தில் பருவமடைதல் (புலூக்) என்று ஒன்று இருக்கிறது. இந்த பருவத்தையடந்த 16 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளையொன்று திருமணம் செய்விக்கப்பட்டால் அதன் நிலையென்ன? நாட்டின் சட்டப்படி 16 வயதுக்கு குறைந்த பெண்பிள்ளையோடு உடலுறவில் ஈடுபட்டால் அது கற்பழிப்பு என்று கூறப்படுவதால் எமக்கென்று உள்ள விசேட அனுமதியை நாம் இல்லாமலாக்கிக் கொள்வதா என்று சிந்திக்க வேண்டும். 

பாடசாலை மாணவர்கள் பலரும் சிறுவயது முதல் பாலியலை விரும்புபவர்களாக இருக்கும் இக்காலம்,  மணம்புரிய விழையும் வாலிபர்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களை விரும்புகின்றனர் என்பதும் கல்யாண தரகர்களின் தகவல் ஆகும், வயதைக் கூட்டுவதில் பிரச்சினை இல்லை 30, 40, வயதை அடைந்த கன்னியர் சமூகத்தில் நிறையவே உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடலாகாது. திருமண வயதெல்லையைக் கூட்டுவதைத் தவிர்த்து   விபச்சாரத்துக்கு வழி அமைக்காது இருப்பது நம் கடமையன்றோ! இந்தோனேசியாவில் திருமண வயது 21 என நியமிக்கப்பட்டதன் விளைவை நாம் பார்க்கக் கூடாதா? எனவே தான் ஷரீஅத் புலூக் எனும் பருவமடைதலை எல்லையாகக் குறிப்பிட்டுள்ளதை சிந்திப்போம் சீரழியாதிருப்போம். 

தனியார் சம்பந்தப்பட்ட அறிக்கைகளைப் பார்த்தால் நீதித் துறையில் விஷேடத்துவம் பெற்றோரும், ஷரீஅத் துறையில் விஷேடத்துவம் பெற்றோhரும் சமூகத்தோடு தொடர்புடையோரும் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த துறையின் அடிப்படையில் கவனம் செலுத்தி ஒரே முடிவை கண்டிருக்கலாம். மாறாக சட்டம் ஷரீஅத்தை மிதப்படுத்தியதன் விளைவே இந்த இரண்டு பரிந்துரைகளும் என்பது தெளிவாகிறது. திருமணம் என்பது மார்க்கத்தோடு தொடர்புள்ளது என்பதை விளங்கும் எந்த முஸ்லிமும் மிகவும் அவதானத்துடனே நடந்து கொள்வான்.  

திருமணப் பதிவின்போது பதிவேட்டில் மணப்பெண் கையொப்பம் இட வேண்டும் என இரண்டு அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒரு அறிக்கையில் அவ்வாறு மணப்பெண் கையொப்பமிடாதவிடத்து திருமணம் செல்லுபடியற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுதலாக எழுதப்பட்டிருப்பின் அதனை நீக்குவதே பொருத்தமாகும். திருமணம் நிறைவேறவுள்ள நிபந்தனையில் அது இடம்பெறுவதில்லை. கையொப்பமிடுவதை கடமைப்படுத்தும் அதேநேரம் அது இன்றேல்; திருமணம் செல்லுபடியாகாது என்பதை நீக்கிவிடுவதே மிகமிகப் பொருத்தமாகும். 

காலி நீதிமன்றங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் நியாயமற்ற தீர்ப்புகளுமே மாதர் சங்கங்கள் குரல் எழுப்புவதற்குக் காரணம் என்பதை நாம் புரிய வேண்டும். அதனால் தான் காழியாக நியமனம் பெறுபவர் யாராக இருந்தாலும் போதியளவு பொதுச் சட்டம், ஷரீஆ சட்டம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனப்படுகிறது.

காதி நீதிமன்றங்களில் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என இரண்டு பரிந்துரைகளும் கூறுவது மிகவும் பொருத்தமானதும், காலத்தின் தேவையும் அதுவாகும். 

இருப்பினும் குடும்பவியல் தொடர்பான விடயங்கள் விசாரிக்கப்படும் காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் தோன்றி வழக்காடுவது பெண்களுக்குச் செய்யும் ஒரு அநியாயமாகும். தனக்கான ஜீவனாம்சத்தை பெற்றுக்கொள்ள வரும் அபளைப்பெண் சட்டத்தரணிக்கு எங்கிருந்து கொடுப்பது என நாம் சிந்திக்க வேண்டும். சிலவேளை தன் மனைவிக்கு அநீதியிழைத்த கணவன் வாதத்திறமையுள்ள ஒரு சட்டத்தரணியை அழைத்து வந்து தன் புறத்தில் நியாயம் இருப்பதாக நிரூபிக்க முயலலாம். இதை விடவும் பெரிய அநியாயம் இருக்க முடியாது. எனவே காதி நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தோன்றாது இருப்பதே சமாதானத்துக்கு வழி வகுக்கும். அல்லது காதி நியாயமான தீர்ப்பை வழங்க வசதியாக இருக்கும்.

எழுதியவர்களும் பேசியவர்களும் தம் கருத்துக்களை கவர்ச்சிமிகு எழுத்து பேச்சு நடையில் செய்து முடித்தனர். முஸ்லிம் விவாக விவாகரத்து என்ற இடத்திலிருந்தே தன் கருத்தை கொட்டினர். எவரேனும் விவாகரத்து என்பதன் கெடுதி என்ன? அது எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்? அதனை அவசியப்படுத்தும் காரணிகள் நிகழ்ந்தால் இஸ்லாம் கூறும் வழி என்ன? போன்ற வியடங்களை எடுத்து முன்வைக்காமை மிகவும் வருந்தத் தக்கதாகும்.

01- பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக பெண்கள் விலா எலும்பால் படைக்கப்பட்டுள்ளனர். விலாவின் மேற்பகுதியே மிகவும் வளைந்திருக்கும், நீர் அதனை நேர்படுத்தப் போனால் அது முறிந்து விடும், விட்டு விட்டால் அது அப்படியே இருந்து விடும். எனவே பெண்கள் விடயமாக நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2-1091)

02- கணவன் மனைவி ஆகிய இருவர் மத்தியிலும் பிணக்குகள் எதையேனும் நீங்கள் பயந்தால் அவன் (மணவாளன்) குடும்பத்தில் ஒருவரையும் அவள் (மணப்பெண்) குடும்பத்தில் ஒருவரையும் சமாதானம் செய்ய அனுப்பி வையுங்கள். அவ்விருவரும் சமாதானம் செய்ய நாடி செயல்பட்டால் அல்லாஹ் அவர்களுக்கு நல்லுதவி புரிவான். (04-35) என அல்லாஹ் வாக்களிக்கிறான்.

03- உங்கள் மனைவியரில் உங்களோடு உடன்பட்டு நடக்கமாட்டாள் என நீங்கள் பயப்படுபவளுக்கு நீங்கள் (புத்தி கூறி) உபதேசியுங்கள். அதனை ஏற்று நடக்காதபோது படுக்கையில் வெறுத்து ஒதுக்கிடுங்கள். (காயப்படா வண்ணம்) அடியுங்கள். உங்களுக்கு அவள் வழிப்பட்டு நடந்தால் அவளுக்கெதிரான எந்த வழிகளையும் தேட வேண்டாம் என அல்லாஹ் கூறியுள்ளான். (04-34)

எனவே வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளுக்காக தலாக் என்ற இடத்துக்கு போகவே கூடாது. அதனால் தான் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கோபத்தை உண்டு பண்ணும் ஹலால் தலாக் ஆகும் என்றார்கள்.


அல்லாஹ் கற்றுத் தந்துள்ள இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படாது தலாக்குக்குரிய சட்டத்தில் நாம் மூழ்கியிருக்கிறோம். பிணக்குப்படும் குடும்பத்தவரை உளவளப்படுத்தி, நல்வாழ்வுக்கு வழிகாட்டும் உளவள நிலையங்களை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் பற்றி அரசியல் தலைவர்கள் யோசிக்க கடமைப்படுகின்றனர். தமக்கு கிடைக்கும் ஒதுக்கீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி நாம் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேசங்களில் சமாதான சபை, உளவள நிலையம் என்பவற்றை நிறுவுவதே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய மாபெரிய கடமையாகும்.

கலிமாவை மொழிந்த நாம் புனித தீனுல் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அந்த வழிமுறைகளில் திருப்திப்படாதோர் பொதுச்சட்டத்தின்படி தம் திருமண விடயங்களை செய்து கொள்வது ஆரோக்கியமாகும்.

இறுதியாக நீதி அமைச்சர், பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், பரிந்துரைகள் சமர்ப்பித்த குழுக்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், உஸ்தாதுமார்கள் உட்பட அனைவரும் ஒன்றை மனதில் எடுக்க வேண்டும். எமது மூதாதையர் தந்துள்ள முஸ்லிம் தனியார் சட்டம் கலிமாவை மொழிந்தவர்களுக்குரியது. இதை மறந்து ஐக்கிய நாட்டு சபையின் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் (பார்க்க: Concluding on the Elimination of All Forms of Discrimination Against Women)         இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்த சட்டம் கொண்டு வருவதைவிட நடைமுறையில் உள்ளதையே (1951) தொடர்ந்தும் அமுல் நடாத்துவதே நாம் இந்நாட்டு முஸ்லிம்களுக்குச் செய்யும் பெரும் பணியாகும். நீங்கள் மேற்கொள்ள விரும்பும் திருத்தம் புனித இஸ்லாத்திற்கு முரணாக அமையும் என்றிருந்தால் நீங்கள் வரலாற்றில் கறைபடிந்த நினைவை விட்டு சென்றவர்கள். அத்தகைய மாபெரும் வரலாற்றுத் தவறை ஏற்படாதிருக்க அல்லாஹ் துணைபுரிவானாக!

/ஹபீத் ஹாலித் /

12 comments:

  1. 🔰 கள்ளகாதல் கிரிமினல் குற்றமில்லை


    🔰 உச்சநீதிமன்றம் பரபப்பான தீர்ப்பு


    🔰 முழு விவரம்


    http://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_41.html

    இதுபோன்ற ஒரு சமுதாயத்தை கொண்டு வரத்தான் சலீம் மர்சூப் குழு முனைகின்றது

    ReplyDelete
  2. Stop fear mongering. On what basis Ladies were prevented from attending Jummah and Jamath prayers. Islam doesn't prevent those. However it became accepted as it thought to lead to many more social issued. Like wise, today's MMDA is outdated, not divine and abused to the core by the Qazi system and those who are rich and powerful side when it comes to divorce. Stop pointing fingers and blaming people with difference of opinion as traitors and unislamic.

    ReplyDelete
  3. What about justice weeramanrhy..who wrote Muslim law .....
    What about Islamic justice Saleem Mahroof....is he not a Muslim ?
    What about thousands of Muslim public who support reform?.ar'nt they Muslims .?.no one oppose Islamic Law ..
    All what they say is update legislation of 1951 to meet the need of modern time ?...
    People who made those changes in 1951 did so with the needs of their time ..
    Law progress as time pass by ..
    Some aspects of Islamic law too...

    ReplyDelete
  4. In 1951 , when MMDA was introduced , ACJU protested in front of Parliament claiming in is against Sharia. Sharia has some components which can be changed to suit the challenge s of the time help the progress if the society.

    ReplyDelete
  5. Nothing will happen to MMDA,only Muslim women will keep suffering by the existing systems. Sorry situation of our society.

    ReplyDelete
  6. ஒவ்வொருவரும் தாம் பின்பற்றும் மத்ஹபை இஸ்லாம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் எனது அபிப்பிராயம் அதற்கு வௌியே சென்று இஸ்லாத்தைச் சிந்தித்தால் காபிராகி விடுவோமோ என அஞ்சுகின்றனர்.

    ReplyDelete
  7. Masha Allah Very Nice and Thoughtful article.

    ReplyDelete
  8. அருமையான தூரநோக்குக்கொண்ட உண்மையை தெளிவுற உணர்த்தும் கருத்தாழமிக்க சிறந்த கட்டுரை. எமது சமூகம் சிந்தித்து செயற்படுமா?

    ReplyDelete
  9. Those who are really worried about women should learn how much Islam has given priority and respect to women's rights.Salem marsoofs report clearly going to destroy Islamic culture for sure then these so called mansoories and marsoofies will understand.

    ReplyDelete
  10. A big truth is these feminies are trying to hide the big picture by using ACJU and the mulLas are anti marsoof and against JSM why they can't see PCS and judge's and a women also against them. It's very clear THAT by using ACJU image they can create a large amount of support.

    ReplyDelete
  11. Writer of this article should come up with more facts and truth

    ReplyDelete

Powered by Blogger.