Header Ads



ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை, நிறுத்த குமாரவெல்கம போர்க்கொடி

குடும்ப அரசியல் நாட்டுக்கு பொருந்தாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் ஒருவரை நிறுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவில் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் அவர் இதனை கூறியுள்ளார்.

குடும்ப அரசியல் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கடந்த முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.

குடும்ப உறுப்பினர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினரை ஒரு விதமாக மற்றவர்களை வேறு விதமாகவும் நடத்தினார்.

இதனால், அமைச்சர்கள் அனைவரும் கோபமடைந்தனர். அமைச்சர்கள் அவருக்கு எதிராக வேலை செய்தனர். நேர்மையாக பணியாற்றியவர்களும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மறைமுகமாக செயற்பட தொடங்கினர்.

குடும்ப அரசியல் சரியானதல்ல. அவரது மகன் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார் அது பரவாயில்லை. எனது மகன் செனாலும் இருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி அண்ணன் சமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றார். அவர் சிறந்த மனிதர். குடும்பத்திற்கு மாத்திரம் வரையறுப்பது சரியல்ல. அதனை நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்பது அனைவருக்கும் சொந்தமானது. ராஜபக்ச குடும்பத்தை சாராத பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜே.ஆர். ஜெயவர்தனவிடம் ரணசிங்க பிரேமதாச விருப்பத்தை பெறவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை சந்திரிக்கா விரும்பவில்லை.

இதேவேளை, தனக்குரிய இடத்தை வழங்காத காரணத்தினால் மைத்திரிபால சிறிசேன வெளியேறினார். மற்றுமொரு சிறிசேனவை உருவாக்கவே தயாராகி வருகின்றனரா என்பதே எனது சந்தேகம். இதனை நான் கண்டிக்கின்றேன் என்றும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.