Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பளித்தால் சஜித்தை பிரதமராக்குவேன் - மைத்திரிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கூட்டு பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரண்டு தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு கிடைக்கும் அணிக்கே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கிடைக்கும் எனவும், தமது கட்சியின் ஆதரவு தேவையெனில் தன்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

தான் முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு சாதகமான பதில் கிடைக்குமாயின் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை தன்னால் நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு பொதுஜன முன்னணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடாக இந்த யோசனையை முன்னவைத்துள்ள மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளித்தால், பிரதமர் பதவியை வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாசவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க இரண்டு தரப்பும் விரும்பவில்லை என அவற்றின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் படுதோல்வியடைவார் என இரண்டு கட்சிகளும் கருத்துகின்றன.

எது எப்படி இருந்த போதில் கூட்டு பொதுஜன முன்னணியின் பிரபலமிக்க தலைவரான மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் விரும்பவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்தி, கூட்டு பொதுஜன முன்னணியுடன் மைத்திரிபால சிறிசேன இணையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

5 comments:

  1. Let him contest alone and prove that he is incapable......

    ReplyDelete
  2. This is the rubbish politics.. What did he say 09th January 2015 and what is telling now. It's great example for typical politicians... He is not capable and talent enough for ruling the country... he spoiled the country so far.

    ReplyDelete
  3. Mr. President. What are you talking about? You just leave the seat and Mr. Sajith alone can sit for president seat.

    ReplyDelete
  4. Mr. President. What are you talking about? You just leave the seat and Mr. Sajith alone can sit for president seat.

    ReplyDelete

Powered by Blogger.