Header Ads



நாட்டின் மீது இடி விழுந்துள்ள நிலையில், ஜனாதிபதி கவி பாடுகிறார்

நாட்டின் மீது இடி விழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவிப்பாடிக் கொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது சம்பந்தமாக கவனத்தை செலுத்தாதது சிக்கலுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகம் வேலை செய்யவில்லையா, செல்கள் வேலை செய்யவில்லையா, மூளை செயற்படவில்லை, இதயம் செயற்படவில்லை என்ற கேள்விகள் எமக்கு எழுகின்றன.

ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். முழு நாட்டின் மீதும் இடி விழுந்து விட்டது. ஜனாதிபதி அவர்களே உங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ள நேரமிது.

நாட்டின் மீது இடி விழுந்து விட்டது என்பதால் தீர்மானம் எடுக்க முடியாது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நாட்டின் தலைவரை கொலை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள போது ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே நீங்கள் நீரோ மன்னன் அல்ல. நாடு அழிய போகிறது. நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட போகிறது. ஜெனிவாவின் மனித உரிமை ஆணைக்குழு கூடியுள்ளது.

புலம்பெயர் விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் சர்வதேச ரீதியில் முன்னெடுத்த போராட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

முதல் முறையாக புலிப் பயங்கரவாத அமைப்பின் பொலிஸ் சீருடை அணிந்து, ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு எதிரில் முதல் முறையாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை நாட்டின் ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நல்லாட்சியாக வந்த பிரிவினைவாத வேலைத்திட்டம் நாட்டில் இறுதியாக அரங்கேற்றி முடிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிதான் எங்களுக்கு புலப்படுகிறது எனவும் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.