Header Ads



இலங்கை பற்றி நான், மிக அக்கறையுடன் செயற்படுகிறேன் - மஹதீர் மொஹமட்


குடிசைவாசிகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்பு செயற்திட்டத்திற்கு உட்சபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக மலேசியா பிரதமர் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமட்டுக்குமிடையிலான சந்திப்பு இன்று -26- பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இதன்போது மலேசிய பிரதமர் சார்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த கெளரவத்துடன் வரவேற்கப்பட்டார்.

இலங்கை தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், இலங்கை பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு எவ்விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெருநகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் குடிசைவாசிகளுக்காக புதிதாக வீடுகளை நிர்மாணிப்தற்கு மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் மலேசிய பிரதமர் ஜனாதிபதிக்கு இதன்போது உறுதியளித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கையானது மலேசியா மீது வைத்துள்ள நட்பினையும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.

1 comment:

  1. ஆனா மஹதீர் சேர் காசு மட்டும் கொடுத்திராதங்க இவனுகள் காரு வாங்கிவாங்கியே இந்த நாட்டையே அழிச்சிருவானுள். ஏழை எழிய மக்களுக்கு அம்பே தான்.

    ReplyDelete

Powered by Blogger.