Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறையிலிருந்து, பாடம் கற்க வேண்டும் - பிரதமர்

சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ்துறை படையணி மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை பொலிஸின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது. கடந்த காலத்தில் பொலிஸார் பல்வேறு வெற்றிகளை அடைந்ததோடு பல பின்னடைவுகளையும் எதிர்நோக்கினார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடந்த முடிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

திகனயில் இடம்பெற்ற கலவரம் கவலைக்குரிய சம்பவமாகும். இதன்மூலம் அனைவரும் பாடங்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். பொலிஸாருக்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பொலிஸ் சேவை சார்ந்த பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. உண்மையில் திகன வன்முறைகளில் சிங்கள இனவாதிகள் பாடம் கற்றுக்கொள்ள தான் வேண்டும். உலக நாடுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியது, நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க வழிசமைத்து பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது,முஸ்லிம்களின் பள்ளிவாசல் வியாபாரஸ்தளங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டவர்கள் இன்று அவை மீள் புனரமைக்கும் போது இருமடங்குகள் ஆகியவை போன்றவை முக்கிய பாடங்களாகும்

    ReplyDelete
  2. உலகாய முஸ்லிம் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்ற வகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உடனுக்குடன் பூகோலமயப் படுத்தி சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு வந்து அறிவுறுத்தி வைப்பது எமக்கான ஓர் பாதுகாப்பு ஏற்பாடாகவே இருக்கும்.

    திகன தீவைப்புக்கள் தீவைத்தாண்டி திக்கனைத்தும் செய்தியாகச் சென்றதுவும், அந்தளவாவது  நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்தன.

    சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளிலுள்ள தம் நாட்டுத்  தூதரகங்களின் முன் நின்று போராடியாவது அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுவது முக்கியமாகும்.

    இவ்வாறு ஜனநாயக ரீதியில் மக்கள் விழிப்பாக இருக்கும்போது இனவாதத் சக்திகள் படிப்படியாக சக்தி இழந்துவிடும்.

    ஒருவர் இறந்து விட்டால் அவர் ஓர்  குறிப்பிட்ட நாட்டை விட்டுச் சென்று விட்டார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.  மாறாக, உலகத்தை விட்டே பிரிந்து விட்டார் என்றுதான் சொல்வோம்.

    அவ்வாறே நாம் ஒவ்வொருவரும் இந்த  உலகிற்கே இறைவனால் அனுப்பப்பட்டுள்ளோம்.  அதுவும் ஒரே குடும்பத்தினராகவே அனுப்பப்பட்டுள்ளோம்.

    எம்மை நாம் (பிர)தேசவாதத்தால் பிணைத்துக் கொண்டிருப்பது போல் அல்ல நம் உண்மை நிலை அல்லது நம்  எல்லை.

    அதனை நம்மைக் படைத்த இறைவன் இவ்வாறு விளக்குகின்றான்:

    "(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் (வானவர்கள்) கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள்.

    (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.

    அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்;

    எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்".

    (அல்குர்ஆன் : 4:97)
    www.tamililquran.com

    சுவர்க்கத்தை ஆசிப்போர் சிந்திக்க வேண்டியவை இவை.   இங்கும் துன்புற்று, செல்லும் இடம் அதைவிடக் கேவலமாக இருப்பதை யார் விரும்புவர்?

    ReplyDelete

Powered by Blogger.