Header Ads



சவூதியை பின்னுக்கு தள்ளி, மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகியது அமெரிக்கா


சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்கா கடந்த ஜுன் மற்றும் ஓகஸ்டில் ரஷ்யாவை விஞ்சியிருப்பதோடு, இந்த ஆண்டு ஆரம்பத்தில் சவூதி அரேபியாவை பின்தள்ளி இருப்பதாக ஆரம்பக்கட்ட கணிப்புகளின் அடிப்படையில் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கணிப்பு சரியாகும்பட்சத்தில், 1973 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் என்று அரச தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மற்றும் சவூதியை அமெரிக்கா முந்தும் என்றபோதும் அது 2019 வரை சாத்தியம் இல்லை என்று எண்ணெய் நுகர்வு நாடுகளின் அமைப்பான சர்வதேச எரிசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஓகஸ்டில் ரஷ்யா நாளொன்றுக்கு 10.8 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்திருப்பதோடு அதுவே அமெரிக்கா நாளுக்கு 10.9 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்திருப்பதாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் கணித்துள்ளது. இதுவே சவூதி அரேபியா 10.4 மில்லியன் பீப்பாய் எண்ணெயையே நாளொன்றுக்கு உற்பத்தி செய்துள்ளது. எனினும் கடந்த இரண்டு தசாப்தத்திற்கு மேலான காலத்தில் எண்ணெ உற்பத்தியில் அமெரிக்கா கடந்த பெப்ரவரியை சவூதி அரேபியாவை விஞ்சியுள்ளது.

இதன்படி அமெரிக்கா இந்த ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டிலும் எண்ணெய் உற்பத்தியில் சவூதி மற்றும் ரஷ்யாவை விஞ்சி நிற்க திட்டமிட்டுள்ளது.

4 comments:

  1. Super,
    இப்போ உலகில் எல்லாவற்றிலும் அமேரிக்கா முன்னனி

    ReplyDelete
  2. சர்வதேச பொருளாதார முன்னெடுப்புகளில் ட்ரம்ப் அடைந்துவரும் படுதோல்வியின் மற்றொரு பிரதிபலிப்புதான் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களின் சிந்தனையைத் திசைதிருப்புவது.இதுபோன்ற தகவல்களை வௌியிட்டபின் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தால் நிச்சியம் இந்த தகவல் பொய் என நிரூபிக்கப்பட்டுவிடும். உலக நாடுகளின் முக்கியமாக சீனா, துருக்கி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் உலோக,இரும்பு, அலுமினியப் பொருட்களுக்கு 15%,25% இறக்குமதி வரி விதித்து அந்த நாடுகளையும் குறிப்பாக அமெரிக்க பொருளாதாரத்தையும் அமெரிக்க மக்களின் கொள்வனவு சக்தியிலும் பாரிய தாக்கத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி,மறுபக்கத்தில் உலக மக்களின் குறிப்பாக அமெரிக்கர்களின் வெறுப்பையும் ட்ரம்ப் ஆட்சியில் விரக்தியையும் ஏற்படுத்தி, அமெரிக்க குடிசனத் தொகையில் 1%த்துக்கும் குறைவாக உள்ள ஸியோனிஸ்ட் யஹூதிகளைத் திருப்திப்படுத்தி அடுத்தமுறை ட்ராம்ப்புக்கு ஆட்சிவருவது வெறும் கற்பனை மட்டுமல்ல உலகப் பொருளாதார கட்டமைப்பைச் சீர்குலைத்து உலக மக்களைத் திண்டாடவைப்பது தான் ட்ரம்ப்பின் கொள்கை. அதற்குப் பெயர் அமெரிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது. இதே மடத்தனமாக பொருளாதாரக் கொள்கையை இப்போது இந்த அரசாங்கமும் பின்பற்றுகின்றது.அதன்விளைவை நிச்சியம் அடுத்த தேர்தலில் கண்டுகொள்வார்கள். ஆனால் மிகவும் கவலையான பாரிய பிரச்னை என்னவென்றால் ஓரளவுக்கு ஆட்டம் காணும் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து மக்கள் வாழ்க்கையை ஆட்டம் காணச் செய்வதுதான் இந்த அரசுகளின் கொள்கை.அதற்கு சுருக்கமான காரணம் கண்மூடித்தனமாக மேற்கையும் அமெரிக்க கொள்கையையும் பின்பற்றுவதுதான்.

    ReplyDelete
  3. Its time for Saudi Arabia to stop selling crude oil to US dollar.

    Wake up Saudi... Stop Selling CRUDE OIL o US Dollar.
    ..Then we can see the real growth of Terror USA.

    ReplyDelete

Powered by Blogger.