September 20, 2018

அல்மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா, இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள் (படங்கள்)


அல்மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள் மெளலவி A.M அப்துல்மலிக் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுகளுக்கு முழுமையான அனுசரனை வழங்கினார்  சாராகல்வி நிறுவனத்தின் தலைவர் சுல்தான் அப்துல்காதர் ஜன்ஸீர், 

இதில் அல் அக்ஸா மஸ்ஜித் நிர்வாகம்,  ஸம்ஸம் மஸ்ஜிதின் நிர்வாகத்தினர்,  விழாக்குழு மற்றும் உலமாக்கள் கெளரவிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் பாடசாலைப் பொருட்கள்,  பாடசாலை பை போன்றவை
கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெற்றோர், ஊர் பிரமுகர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

4 கருத்துரைகள்:

நபியவர்களை நேசிக்கும் எதிகால மணவாளர்கள், 'கோட்-சூட்' டுக்குப் பதிலாக துணிச்சலுடன் அணியப்போகும் இஸ்லாமிய ஆடையுடன் களத்தில் இங்கே  இப்போதே!

புது வருடம் கொண்டாடடுவது
நபிழியா?
தயவு செய்து தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்

உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதில் உண்டு பிரதர்.2கொண்டாட்டங்கள் மட்டும்தான்.

@ Muslim mannar!
நபியவர்கள் நாட்காட்டி விடயத்தில் இஸ்லாமிய மாதங்களையும் பிறைக் கணிப்பீட்டையுமேயே பயன்படுத்தியுள்ளார்கள்.

ஆனால், நமக்கென்று பிரத்தியேக நாட்காட்டி தேவை என்ற அடிப்படையிலேயே கலீபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய நாட்காட்டியை தொடக்கி வைத்தார்கள்.

அதுவும், நபியவர்களின் போதனைகளின்  அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டிருப்பதால் இதனை நபி வழியாகக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் எதிரிகளின் துன்புறுத்தல்களால் தம் நாட்டை விட்டு  அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் (துறந்து) சென்ற நாளை மையமாக வைத்து தொடங்கப்பட்டதே இந்ந ஹிஜ்ரா காலண்டர்.

ஓர் இடம் தம் இறை நம்பிக்கையை பாதுகாத்து வாழ பொருத்தம் இல்லாதபோது தமக்கு பொருத்தமான இடத்துக்குத் துறந்து சென்று இறை கட்டளைகளுக்கு ஒப்ப வாழ இறைவன் அனுமதித்து நம்மை உற்சாகப்படுத்தி உள்ளான்.

மாறாக, தம் ஊரோ தம் நாடோ தம் ஈமான் எனும் இறை நம்பிக்கையைப் பாதுகாத்து வாழ இடைஞ்சலாக இருந்தாலேயே, தாம் இறைக் கட்டளைகளை மீற நேர்ந்தது என்ற சாட்டுக்களை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை அறிவித்து இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றான் இவ்விதம்:

"(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள்.

(அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்;

எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்".
(அல்குர்ஆன் : 4:97)
www.tamililquran.com

எனவே, இந்தளவு முக்கியத்துவம் மிகுந்த ஓர் சம்பவத்தை நமக்கு அறிவுறுத்தி, உலகில் நமது எல்லை எவ்வளவு விசாலமானது என்பதை ஞாபகப்படுத்தி வீறு நடைபோட இஸ்லாமியக் புத்தாண்டு துவங்கும் நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடுவதில் தவறில்லை.

Post a Comment