Header Ads



கொழும்பில் அரபு புரட்சியை ஏற்படுத்த வந்தவர்கள், அதனை சாராய புரட்சியாக மாற்றினர் - முஜிபுர் ரஹ்மான் ஆவேசம்

பால் பக்கெற் தொடர்பான பிரச்சினையால் நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, “ எமது ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள வந்த மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பழைய பால் பக்கெற்றுக்களை வழங்கியுள்ளார். அதனை அருந்தியவர்கள் சுகவீனமுற்றனர். இந்த வேலை மிகவும் கேவலமானது” என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த முஜிபுர் ரஹ்மான்,

“இது பொய்யான குற்றச்சாட்டு. நாங்கள் பெண்களை போல் செயற்பட மாட்டோம். இவர்கள்தான் அப்படி செய்வார்கள். செய்வதை நாங்கள் வெளிப்படையாக செய்வோம். மறைந்து செய்ய மாட்டோம்” என்றார்.

இதன் போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே,

முஜிபுர் ரஹ்மான் மதுபோதையில் வந்திருந்தார் என்றார்.

இதற்கு பதிலளித்த முஜிபுர் ரஹ்மான்,

“நான் சாராயம் அருந்துவதில்லை. ஆனால், மகிந்தானந்த அளுத்கமகே குடித்து விட்டு ஷெங்கீரிலா ஹொட்டலில் இருந்ததாக கேள்விப்பட்டோம்.

கொழும்பில் அரபு புரட்சியை ஏற்படுத்த வந்தவர்கள் அதனை சாராய புரட்சியாக மாற்றினர். வெட்கம் கொழும்பை முற்றுகையிட்டீர்களா?”. என்றார்.

அப்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.