Header Ads



மெக்சிகோவில் இப்படியும் நடந்தது


மெக்சிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டு இருந்த 80 வயது முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் பதப்படுத்தப்பட்டு, சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. அந்த சவப்பெட்டியை இறுதிச்சடங்குக்காக எடுத்துச்செல்ல அவசர கால ஊர்தியில் ஏற்றினர்.

அடுத்த சில நிமிடங்களில் பார்த்தால், சவப்பெட்டியுடன் கூடிய அந்த அவசர கால ஊர்தி திடீரென மாயமானது. அதை யாரோ திருடிச்சென்று விட்டனர்.

உடனடியாக அங்கு உள்ளபோலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளையும், போலீஸ் நிலையங்களையும் உஷார் படுத்தினர்.

அதைத் தொடர்ந்து அங்கு உள்ள நெடுஞ்சாலையில் அந்த ஊர்தி சென்று கொண்டு இருந்ததைக்கண்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். அதை ஓட்டிச்சென்றவரை கைது செய்தனர். அன்னிபால் சால் என்ற அந்த நபர், “ சவப்பெட்டி ஏற்றப்பட்டிருந்த இருந்த இந்த வாகனத்தில் சாவி இருந்ததை கண்டேன். எனவே அதை திருடி ஓட்டிச்செல்ல முடிவு எடுத்தேன்” என கூறினார்.

அந்த வாகனத்தையும், சவப்பெட்டியையும் போலீசார் கைப்பற்றி இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Powered by Blogger.