Header Ads



ஞானசாரர் தவறு செய்திருந்தால், அனுபவிக்க வேண்டும் - பொன்சேக்கா

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பாதாள உலகக்குழுவினர் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது பாதாள உலகக்குழு உறுப்பினர்களாக பிரபலமடைந்திருக்கும் அனைவரும் கடந்த அரசாங்கத்தின் 10 வருட கால ஆட்சியில் உருவாகியவர்கள்.

மேலும் அவதூறு ஏற்படுத்துவதற்காக என்னுடன் இருந்த பல்கலைக்கழக மாணவனையும் பாதாள உலகக்குழு உறுப்பினர் எனக் கூறி கைது செய்துள்ளனர் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, தவறு செய்திருந்தால் சட்டம் வழங்கும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அத்துடன் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் 90 பௌத்த பிக்குகள் சிறையில் இருந்தனர். மத தலைவர்கள், பௌத்த பிக்குகளுக்கு சிறைத் தண்டனை தற்போது மட்டும் வழங்கப்படுவதில்லை. கடந்த காலத்திலும் பௌத்த பிக்குகளுக்கு சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தவறு செய்த நபர் எவராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டத்திற்கு வெளியில் நடக்கும் அனைத்து செயற்பாடுகளையும் நான் கடுமையாக கண்டிக்கின்றேன். இப்படியான சம்பவங்கள் போர் காலத்தில் கூட நடக்கக் கூடாது எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. சட்டம் எல்லோருக்கும் சமம் இவன் குற்றத்துக்கான தண்டனையே அனுபவித்தே ஆக வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.