Header Ads



அறுகம்பையில் உலக சுற்றுலா தினம்


இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினம் 2018 நிகழ்வு மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் தலைமையில் இன்று (27) வியாழக்கிழமை அறுகம்பை பசிபிக் ஹோட்டலில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அரச தொழில் முயற்சி  மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.எம். நசீல், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  நுவான் ஜே. வெதசிங்க, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

'சுற்றுலாவும் டிஜிட்டல் உருமாற்றமும்' என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த உலக சுற்றுலா தின நிகழ்வின்போது கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் துறைகளில் 10 வருடத்திற்கு மேல் சேவையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது சுற்றுலாத்துறை சார்ந்த விழிப்புணர்வு நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. அத்தோடு கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு ஞாபகச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

(அகமட் எஸ். முகைடீன்)

No comments

Powered by Blogger.